நஸீம் ஜாலியாத் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்தத் தளத்தில் பதியப்படும் இன்ஷாஅல்லாஹ்...
Showing posts with label குடும்பவியல். Show all posts
Showing posts with label குடும்பவியல். Show all posts

இஸ்லாம் கூறும் குடும்பவியல் (05)

Saturday, December 15, 2012


உரை
பீ ஜெய்னுல் ஆபிதீன் 
எழுத்து வடிவில்
முஹம்மது கைஸான் (தத்பீகி)

குடும்ப அமைப்பில் ஏற்படும் நன்மைகள்

  1. குடும்ப உறவினர்களின் உதவி கிடைத்தல்

குடும்பமாக இருக்கிறோமே அதில் பலவித நன்மைகள் இருக்கின்றன. அல்லாஹ் அமைத்த இந்த குடும்ப அமைப்பில் உடலுக்கு, மனதுக்கு, சமூகத்துக்கு நன்மைகள் இருக்கின்றன.

இஸ்லாம் கூறும் குடும்பவியல் (4)

Friday, November 23, 2012


குர்ஆனும் குடும்பவியலும்

குடும்ப அமைப்பை பொறுத்தவரைக்கும் அல்லாஹ்வுடைய இயற்கையான நியதி என்னவென்று சொன்னால் மனிதர்கள் குடும்பமாக வாழ வேண்டும். அதற்காகத் தான் அல்லாஹ் மனிதர்களை படைத்திருக்கிறான்.

Thursday, September 29, 2011


இஸ்லாம் கூறும் குடும்பவியல் (03)




உரை
பீ.ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு
முகம்மது கைஸான் (தத்பீகி)


கட்டுப்பாடுகள் அற்ற உறவு முறை


ஆண்கள் மத்தியிலும் பெண்கள் மத்தியிலும் பாலியல் விஷயத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் அற்ற முறையாகும். ஒரு ஆண் அல்லது ஒரு பெண் எத்தனை பேருடனும் உறவு வைத்துக் கொள்ளலாம், எப்படி வேண்டுமானாலும் வாழலாம், இது எங்களது உரிமை, சுதந்திரம், யாரும் கட்டுப்படுத்தக்கூடாது என்ற முறையாகும். இந்த மாதிரி எல்லோரும் போனால் குடும்பம் எப்படி இருக்கும்? கணவன், மனைவி என்ற உறவு இங்கு இல்லாதிருக்கும் வாழ்க்கையில் குழந்தைகளுக்கு யார் பொறுப்பு? சமூகத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் வாழலாம் என்ற சித்தாந்தமும் இன்று உலகில் வந்துள்ளது. இந்த நவீன யுகத்திலே நீதிபதிகள் இதற்கு அங்கீகாரமும் அளித்துள்ளனர்.

Thursday, September 15, 2011

இஸ்லாம் கூறும் குடும்பவியல்(02)





உரை
பீ.ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு 
முகம்மது கைஸான் (தத்பீகி)



இன்று நாம் வாழும் நவீன காலத்தில் இந்த குடும்ப அமைப்புக்களை சீர்குழைக்கும் பலவிதமான கெட்ட சிந்தனைகள் மக்கள் மத்தியில் தூவப்படுகிறன.

குடும்பம் என்றொன்ரு தேவையில்லை,கணவன்,மனைவி என்ற முறை வேண்டாம் என்றெல்லாம் கூறி ஒருவிதமான கேடு கெட்ட சிந்தனையை மக்கள் மத்தியில் சிலர் இன்று பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பம் தேவையில்லை நாம் எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம் குடும்பம் என்ற வட்டத்திற்க்குல் எதற்க்காக நாம் இருக்க வேண்டும்? ஒரு ஆண் எதை விரும்புகின்றானோ அதை அவன் செய்து கொள்ளட்டும். ஒரு பெண் எதை விரும்புகின்றாலோ அதை அவள் செய்து கொள்ளட்டும்.இதை ஏன் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்? என்றெல்லாம் நச்சுக்கருத்துக்களை விதைத்து குடும்ப அமைப்பை சீர்குழைப்பதற்காக, இல்லாமலாக்குவதற்காக, அழித்தொழிப்பதற்காகஅறிவு ஜீவிகள் என்ற பெயரில் சில தீய சக்திகள் செயல்படுகின்றன.

Thursday, August 25, 2011

இஸ்லாம் கூறும் குடும்பவியல்

உரை
பீ.ஜெய்னுல் ஆபிதீன்

தொகுப்பு
முகம்மது கைஸான் (தத்பீகி)


உலகில் உள்ள மதங்கள் சில வணக்க வழிபாட்டு முறைகளைத்தான் மக்களுக்குப் போதிக்கின்றன. பெரும்பாலும் மனிதனின் அன்றாட நிகழ்வோடு தொடர்புள்ள வாழ்வியல் பிரச்சினைகளை அந்த மதங்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. உலகில் உள்ள மதங்களில் இஸ்லாம் மட்டும் தான் வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டக்கூடிய ஒளி விளக்காக திகழ்கின்றது. விஞ்ஞான முன்னேற்றத்தின் உச்சியில் இருக்கும் இந்த அறிவியல் உலகில் எழும் நவீன கால சவால்களை இஸ்லாம் தவிர வேறு மதங்களால் சமாலிக்க முடியாது .இதனால் தான் தேனடையை மொச்சும் வண்டுக்களைப் போல் இஸ்லாத்தை நோக்கி பலர் வந்து கொண்டிருக்கின்றனர். இஸ்லாம் மனித வாழ்வில் சிந்தி விழும் அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டும் அற்புத மார்க்கம். அந்த வகையில் இஸ்லாம் சமூக கட்டமைப்பின் அடித்தளமாக திகழும் குடும்பவியல் குறித்தும் துல்லியமாக எடுத்துறைக்கின்றது.

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger