நஸீம் ஜாலியாத் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்தத் தளத்தில் பதியப்படும் இன்ஷாஅல்லாஹ்...

Wednesday, June 13, 2012


நபி வழியில் நம் வுழு (04)

முகம்மது கைஸான் (தத்பீகி)

சென்ற தொடரில் வுழு என்பது  இந்த உம்மத்துக்குறிய விஷேட வணக்கம் என்ற அறிஞர்களின் ஆதாரங்களையும் அவர்களின் வாதங்களையும் பார்ததோம் இந்த தொடரில் வுழு என்பது முன் சென்ற சில உம்மத்துக்கும் வழங்கப்பட்ட ஒரு பொதுவான வணக்கம் என்ற அறிஞர்களின் ஆதாரங்களையும் அவர்களின் வாதங்களையும் பார்ப்போம் 


ஆதாரம் 01
3436- حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : لَمْ يَتَكَلَّمْ فِي الْمَهْدِ إِلاَّ ثَلاَثَةٌ عِيسَى ، وَكَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ يُقَالُ لَهُ جُرَيْجٌ كَانَ يُصَلِّي { فَ } جَاءَتْهُ أُمُّهُ فَدَعَتْهُ فَقَالَ أُجِيبُهَا ، أَوْ أُصَلِّي فَقَالَتِ اللَّهُمَّ لاَ تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ الْمُومِسَاتِ ، وَكَانَ جُرَيْجٌ فِي صَوْمَعَتِهِ فَتَعَرَّضَتْ لَهُ امْرَأَةٌ وَكَلَّمَتْهُ فَأَبَى فَأَتَتْ رَاعِيًا فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا فَوَلَدَتْ غُلاَمًا فَقَالَتْ مِنْ جُرَيْجٍ فَأَتَوْهُ فَكَسَرُوا صَوْمَعَتَهُ وَأَنْزَلُوهُ وَسَبُّوهُ فَتَوَضَّأَ وَصَلَّى ثمَّ أَتَى الْغُلاَمَ فَقَالَ مَنْ أَبُوكَ يَا غُلاَمُ قَالَ الرَّاعِي قَالُوا نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ قَالَ : لاََ  إِلاَّ مِنْ طِينٍ وَكَانَتِ امْرَأَةٌ تُرْضِعُ ابْنًا لَهَا مِنْ بَنِي إِسْرَائِيلَ فَمَرَّ بِهَا رَجُلٌ رَاكِبٌ ذُو شَارَةٍ فَقَالَتِ اللَّهُمَّ اجْعَلِ ابْنِي مِثْلَهُ فَتَرَكَ ثَدْيَهَا وَأَقْبَلَ عَلَى الرَّاكِبِ ، فَقَالَ : اللَّهُمَّ لاَ تَجْعَلْنِي مِثْلَهُ ثُمَّ أَقْبَلَ عَلَى ثَدْيِهَا يَمَصُّهُ- قَالَ أَبُو هُرَيْرَةَ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَمَصُّ إِصْبَعَهُ ، ثُمَّ مُرَّ بِأَمَةٍ فَقَالَتِ اللَّهُمَّ لاَ تَجْعَلْ ابْنِي مِثْلَ هَذِهِ فَتَرَكَ ثَدْيَهَا ، فَقَالَ : اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا فَقَالَتْ لِمَ ذَاكَ فَقَالَ الرَّاكِبُ جَبَّارٌ مِنَ الْجَبَابِرَةِ وَهَذِهِ الأَمَةُ يَقُولُونَ سَرَقْتِ زَنَيْتِ وَلَمْ تَفْعَلْ. أخرجه البخاري


மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் 'ஜுரைஜ்' என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) 'அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?' என்று கூறினார்கள். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், 'இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல், மரணிக்கச் செய்யாதே!" என்று கூறிவிட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தம் ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். எனவே, (அவள் அவரைப் பழி வாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு 'இது ஜுரைஜுக்குப் பிறந்தது' என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரின் ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூச் செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, 'குழந்தையே! உன் தந்தை யார்?' என்று கேட்டார். அக்குழந்தை, '(இன்ன) இடையன்" என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்த அந்த மக்கள், 'தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்" என்று கூறினார்கள். அதற்கு அவர், 'இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்" என்று கூறிவிட்டார். (மூன்றாமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டிருந்தான். உடனே, அவள், 'இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு" என் மகனை இவனைப் போல் ஆக்கு" என்று பிரார்த்தித்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, 'இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே" என்று கூறியது பிறகு அவளுடைய மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. இந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது - பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், 'இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே" என்று கூறினாள். உடனே, அக்குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு, 'இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு" என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), 'ஏன் இப்படிச் சொல்கிறாய்?' என்று கேட்டதற்கு அக்குழந்தை, 'வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) 'நீ திருடிவிட்டாய்; விபசாரம் செய்துவிட்டாய்' என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை" என்று பதிலளித்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஆதாரம் புஹாரி 3436

Tuesday, June 12, 2012

நபி வழியில் நம் வுழு (03)


முகம்மது கைஸான் (தத்பீகி)



வுழு ஓர் எளிய அறிமுகம்


குறிப்பிட்ட சில வணக்கங்களை நிறைவேற்றுவதற்காக தண்ணீரால் முகம் கை கால் போன்ற மேனியின் குறிப்பிட்ட சில உறுப்புக்களை  தூய்மை செய்து கொள்வதற்க்கு வுழு என்று இஸ்லாமிய வழக்கில் சொல்லப்படுகின்றது.
வுழு என்ற அறபுப் பதம்    الوضاءة   அல்வழாஅத் என்ற வேர் சொல்லில் இருந்து பிறந்ததாகும்.
அகராதியில்  الوضاءة என்றால் பிரகாசித்தல் என்பது சொற்பொருளாகும்.
இந்த அங்கதூய்மைக்கு பிரகாசித்தல் இலங்குதல் எனும் அகராதி அர்த்தம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானதே! ஏனெனில் ஒரு நாளைக்கு ஜந்து விடுத்தம் தொழுகைக்காக உறுப்புக்களை சுத்தம் செய்பவர் ஒளி வீசும் வைரத்தைப் போன்று பிரகாசிக்கின்றார் ஆதலால் அகராதி அர்த்தம் நடைமுறை அர்தத்துடன் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றது.

Monday, June 11, 2012


 
நபி வழியில் நம் வுழு (02)

முஹம்மது கைஸான் (தத்பீகி)


917- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبْدٍ الْقَارِيُّ الْقُرَشِيُّ الإِسْكَنْدَرَانِيُّ قَالَ : حَدَّثَنَا أَبُو حَازِمِ بْنُ دِينَارٍ أَنَّ رِجَالاً أَتَوْا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ وَقَدِ امْتَرَوْا فِي الْمِنْبَرِ مِمَّ عُودُهُ فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ وَاللَّهِ إِنِّي لأَعْرِفُ مِمَّا هُوَ ، وَلَقَدْ رَأَيْتُهُ أَوَّلَ يَوْمٍ وُضِعَ وَأَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَرْسَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِلَى فُلاَنَةَ - امْرَأَةٍ قَدْ سَمَّاهَا سَهْلٌ - مُرِي غُلاَمَكِ النَّجَّارَ أَنْ يَعْمَلَ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ إِذَا كَلَّمْتُ النَّاسَ فَأَمَرَتْهُ فَعَمِلَهَا مِنْ طَرْفَاءِ الْغَابَةِ ثُمَّ جَاءَ بِهَا فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَأَمَرَ بِهَا فَوُضِعَتْ هَاهُنَا ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صَلَّى عَلَيْهَا وَكَبَّرَ وَهْوَ عَلَيْهَا ثُمَّ رَكَعَ وَهْوَ عَلَيْهَا ثُمَّ نَزَلَ الْقَهْقَرَى فَسَجَدَ فِي أَصْلِ الْمِنْبَرِ ثُمَّ عَادَ فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ أَيُّهَا النَّاسُ إِنَّمَا صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا وَلِتَعَلَّمُوا صَلاَتِي.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் எனும் மேடை மீது ஏறி நின்று தொழுது காட்டினார்கள்அதில் நின்றபடியே அதிலேயே ருகூவு செய்தார்கள்பின்னர் பின்வாங்கி நகர்ந்து அதன் அடித்தளத்தில் ஸஜ்தா செய்தனர்தொழுது முடித்ததும், "மக்களே! எனது தொழுகையை நீங்கள் அறிந்து பின்பற்றுவற்காகவே இவ்வாறு செய்தேன்'' என்றும் கூறினார்கள்.  (புகாரி - 917, 377)


தன்னைப் பின்பற்றி தன்னைப் போலவே மக்கள் தொழ வேண்டும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவு சிரத்தை எடுத்துள்ளனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.மற்றவர்கள் தொழுவதையும் உன்னிப்பாகக் கவனித்து திருத்திக் கொடுப்பதிலும் அவர்கள் அதிக அக்கரை செலுத்தியுள்ளார்கள்

757- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا يَحْيَى ، عَنْ عُبَيْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَرَدَّ وَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ فَرَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ ثَلاَثًا فَقَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي فَقَالَ إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا وَافْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا.
ஒருவர் பள்ளிவாசலுக்கு வந்து தொழுது விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார்.  "நீ தொழவே இல்லைஎனவே திரும்பிச் சென்று மீண்டும் தொழு!'' என்றார்கள்அவர் திரும்பிச் சென்று மீண்டும் தொழுது விட்டு வந்து ஸலாம் கூறினார்.  "நீ திரும்பிச் சென்று மீண்டும் தொழு! நீ தொழவே இல்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) மீண்டும் கூறினார்கள்.  "உண்மையுடன் உங்களை அனுப்பியவன் மேல் ஆணையாக! இதைத் தவிர வேறு எப்படித் தொழுவது என்பது எனக்குத் தெரியவில்லைஎனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்'' என்று அவர் கேட்டார்நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் முறையைக் கற்றுக் கொடுத்தார்கள் என்ற விபரம் புகாரி 757, 973, 6251, 6667 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Friday, June 8, 2012

நபி வழியில் நம் வுழு (01)

தொகுப்பு

முஹம்மது கைஸான் (தத்பீகி)


இஸ்லாத்தின் பெயரால் நாம் எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அக்காரியம் திருக்குர்ஆனிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலிலும் உள்ளபடி அமைந்திருக்க வேண்டும். திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் இல்லாத காரியங்கள் இஸ்லாத்தின் காரியங்களாக இருக்க முடியாது.

தொழுகை உள்ளிட்ட அனைத்து வணக்க முறைகளையும் நமக்குக் கற்றுத் தருவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அவர்களும் தமது பணியில் எந்தக் குறைவும் வைக்காமல் முழுமையாக நமக்குச் சொல்லித்தந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் போதே இம்மார்க்கத்தை இறைவன் முழுமைப் படுத்தி விட்டான்.

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger