நஸீம் ஜாலியாத் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்தத் தளத்தில் பதியப்படும் இன்ஷாஅல்லாஹ்...

வெந்தயத்தில் மருத்துவம்

Wednesday, October 31, 2012


உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

ஷீஆக்களின் சீர்கெட்ட கொள்கைகள்(18)


குறைஷிகளின் இரண்டு விக்கிரகங்கள்
அளவற்ற  அருளாளன்   நிகரற்ற  அன்புடையோன்   அல்லாஹ்வின் திருப் பெயரால் -இறைவா! முஹம்மது  மீதும் அவரது குடும்பத்தவர்கள்  மீதும் நீ ஸலவாத்துச் சொல்!  குறைஷிகளின் இரு  விக்கிரகங்களையும் இரு தாகூத்களையும் (அபூபக்கர் உமர்) அவர்களின் இரு பெண்களையும் சபிப்பாயாக!

Tuesday, October 30, 2012


ஆலிவ் எண்ணெயின் பயன்பாடுகள்


ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 
ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது. இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோ ஆன்சாச்சுலேரேட்டர்ஃபேட்டி ஆசிட் MUFA ஆனது கெட்ட கொழுப்புகளையும் மேலும் டிரைகிளிசரைட்ஸ் போன்றவைகளையும் இது குறைக்கிறது. இது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும் பாதுகாக்கிறது. 
ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளது. இது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் கற்கள் உருவாவதையும் கட்டுப்பத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


பேரீச்சம் பழத்தின் பலன்கள்!

பூமிக்கு நிறமும் அழகும் சேர்ப்பவை தாவரங்கள் தாவரங்களும் புல் பூண்டுகளும் இல்லாத ஒரு பூமி எவ்வாறு இருக்கும் என்றுயோசித்துப் பாருங்கள் மிகவும் கொடுமையான உஷ்ண மிகுதியாகவும், மறைந்து கொள்ள நிரந்தர மரங்களே இல்லாமல்விலங்கினங்களும் மனிதனும் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கும். அத்தகைய பெருமை வாய்ந்த தாவரங்கள் பூமிக்குகுளிர்ச்சியூட்டி பூமிக்கு பெருமை சேர்க்கின்றன. அத்தகைய தாவர இனத்திற்கே பெருமை சேர்ப்பவை பேரீச்சம்பழங்கள்.

மனிதன், முதன் முதலாக பயிரிட ஆரம்பித்த ஒரு சில தாவரங்களுள் முதன்மையானது பேரீச்ச மரங்களாகும்.

சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னதாக மெசபடோமியா பகுதியில் வாழ்ந்த மனிதன் முதலில் இம்மரங்களை பயிரிட ஆரம்பித்ததாககுறிப்புகள் தெரிவிக்கின்றன. அகழ்வாராய்ச்சிகளிலும் பாறைப் படிவங்களிலும் பேரீச்சம் மரம், இலை, காய்கள் போன்றவைகண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள் (17)

Add caption

ஷீஆக்கள் நம்பும் பாத்திமாவின் ஏடு

தனது ஒளி, தூதுவர், நபி, அதிகாரி ஆகிய முஹம்மது அவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஏடுதான் பாத்திமாவின் ஏடு ஆகும். முஹம்மதே! எனது பெயர்கள் சிறப்படைந்து விட்டது. எனது நிஃமத்துகளுக்கு நீ நன்றி செலுத்து. நான் தான் அநியாயக்காரர்களை அழிப்பவன். என்னைக் தவிர வணக்கத்துக்குரியவர்கள் யாருமில்லை. எவர் எனது சிறப்பையன்றி வேறு ஒன்றை எதிர்பார்த்தால்,எனது நீதியைத் தவிர வேறு ஒன்றுக்குப் பயப்பட்டால் உலகில் யாருக்கும் கொடுக்காத வேதனையை கொடுப்பேன். என்னையே வணங்குங்கள். என்மீதே தவக்குல் வையுங்கள்.

Saturday, October 27, 2012

நபி வழியில் நம் வுழு (05)

முஹம்மது கைஸான் (தத்பீகி

வுழு எப்போது கடமையாக்கப்பட்டது?

இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் வணக்க வழிபாடுகள் இவை யாவும் நபிகள் நாயகம் (ஸல்அவர்களுக்கு மொத்தமாக ஒரே தருனத்தில் அருளப்பட வில்லை படிப்படியாகத்தான் அருளப்பட்டது என்பதை எல்லோரும் நாம் அறிந்து வைத்துள்ளோம்அந்த அடிப்படையில் வுழு எனும் வணக்கம் இஸ்லாத்தில் எப்போது மார்க்கமாக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம் இது குறித்து அறிஞர்கள் மத்தியில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றனசில அறிஞர்கள் மதினாவில் மார்க்கமாக்கப்பட்டதாகவும் மற்றும் சிலர் மக்காவில் மார்க்கமாக்கப்பட்டதாகவும் கருதுகின்றனர்.  எனவே அவர்களின் வாதங்களையும்  ஆதாரங்களையும் முதலில் பார்ப்போம்மதினாவில் மார்க்கமாக்கப்பட்டது என்ற கருத்தில் உள்ள அறிஞர்கள் நேரடியாக எந்த சான்றையும் முன் வைக்கவில்லை.

Friday, October 26, 2012


ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள்(16)
அரபு மூலம்
அறிஞர் அப்தல்லாஹ் (ஸலபி)
தமிழ் வடிவம் முஹம்மது கைஸான் (தத்பீகி)


ஷீஆக்கள் நம்பும் சூரா விலாயத்


(கீழ்வரும் அத்தியாயம் அல்குர்ஆனில் இல்லாத ஒன்று. எனினும், ஷீஆக்கள் அவர்களது வேதத்தில் உள்ளதாக நம்புகின்றனர்.)
பஸ்லுல் ஹிதாப் எனும் நூலிலிருந்து இது எடுத்தாளப்பட்டுள்ளது.
 'அந்த நாளின் வேதனையை உங்களுக்கு எச்சரிக்கின்றோம். அந்த இரு ஒளிகளையும் நீங்கள் நம்புங்கள். யார் தூதருக்கு வழிப்படுகிறாறோ, அவருக்கு சுவர்க்கமும், யார் நம்பிக்கை கொண்டு நபியோடு செய்த ஒப்பந்தங்களை கிழித்து நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு நரகமும் உண்டு. ங்களுக்கு அநியாயம் செய்து, தூதரினால் வசிய்யத்து செய்யப்பட்டவர்களுக்கு மாறுசெய்தவர்களுக்கும் நரகத்தில் சூடான பானம் உண்டு.பீஜே பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்

ஆக்கம் முஹம்மத் ஆஷிக்


எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர் நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல... 'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும்மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!நான் பிறந்த இடமான, பாபநாசம்-பண்டாரவாடையில், இமாம் அபூ ஹனிபா ரஹ் அவர்களை பழிக்கும் கொடியவராக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். பின்னர், நான் படித்து வளர்ந்த இடமான, அதிராம்பட்டினத்தில்... இமாம் ஷாஃபி ரஹ் அவர்களை அவமானப்படுத்தும் இஸ்லாத்தின் வில்லனாக மீண்டும்  எனக்கு சொல்லப்பட்டவர் இவர். ஊருக்கு நாலு பேர், இப்படி 'நஜாத்துக்காரன்' என்று இருந்த அக்காலத்திய அவரின் ஆதராவளர்களை 'அஞ்சாம் மதஹப்'காரர்கள் என்று சொல்லி, பள்ளியின் வாசலில், 'நான்கு மதஹபுகளில் ஒருவரையாவது பின்பற்றாதவருக்கு இப்பள்ளியில் அனுமதி இல்லை' என்று பலகை மாட்டி... பள்ளியை விட்டு, தள்ளிவைத்து... இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக எனக்கு காட்டப்பட்ட போது... அத்தோடு 'வேண்டாம்பா இந்த விரோதிகள் சகவாசம்' என்று மெய்யாலுமே மூடத்தனமாக நான் நம்பி... என்பதுகளின் இறுதியில் இவர்களை வெறுத்து ஒதுங்கி விட்டேன்.உளமார்ந்த பிரார்த்தனைகள் வேண்டி ...
சத்தியமார்க்கம்.காம் என்ற இணையதளம் அறிஞர் பீஜேவின் சுகவீனம் பற்றி வெளியிட்டுள்ள செய்தியை நன்றியுடன் இங்கு வெளியிடுகின்றேன்.
 முஹம்மது கைஸான் (தத்பீகி)


ண்பதுகளின் மத்தியில் தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ விழிப்புணர்வுப் புரட்சிக்கு வித்திட்டவர்களுள், "PJ" என்று அன்புடன் அழைக்கப்படும் சகோ. P. ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தலையானவர். இஸ்லாமியப் பேரவைஅஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்ஜம்யிய்த்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாஅனைத்துத் தவ்ஹீது ஜமாஅத் கூட்டமைப்புதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகிய சன்மார்க்க-சமுதாய அமைப்புகளில் பெரும் பங்காற்றியவர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிறுவனர். நாவன்மை மிக்க பிரச்சாரகர். அரபு மொழியில் தேர்ந்தவர். மறைவிளக்கம்வரலாறுஹதீஸ் கலைஃபிக்ஹுச் சட்டம் ஆகியவற்றில் ஆய்வுரை வழங்கத்தக்க நம் சமகாலத் தமிழறிஞர்பன்னூலாசிரியர். அந்நஜாத்அல்ஜன்னத் ஆகிய மாத இதழ்களில் ஆசிரியராக இருந்தபோதுஇவர் எழுதிய தலையங்கங்கள் மாற்றுக் கருத்துடையோராலும் விரும்பிப் படிக்கப்பட்டவை.

Thursday, October 18, 2012


ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள்.(15)
அரபு மூலம்
அறிஞர் அப்துல்லாஹ் (அஸ்ஸலபி)
தமிழ் வடிவம்
முஹம்மது கைஸான் (தத்பீகி)


அஹ்லுஸ் ஸுன்னா,ராபிழா ஆகியோரிடையே தக்ரீப் பற்றிய  கண்ணோட்டம்

 ஷீஆக்களுடன் நெருங்கிப் பழகுவது தொடர்பாக பேராசிரியர் நாஸிர் அல்கபாரி என்பவரின் 'மஸ்அலத்துல் தக்ரீப்' ஏழாவது கட்டுரை மாத்திரம் இது பற்றி விளக்குவதற்குப் போதுமானதாக உள்ளது. அதிலிருந்து சில கருத்துக்களை நோக்குவோம்.
அல்லாஹ்வுடைய வேதத்தில்  குறைகாண்கின்ற வேத வசனங்களுக்குப் பொருந்தாத கருத்துக்களை கொடுக்கின்ற அல்குர்ஆனுக்குப் பின் இனோர் வேதம் தங்களது இமாம்களுக்கு இறக்கப்பட்டதாக சொல்கின்றவர்களுடன் எப்படி இணைய முடியும்?
   'இமாமத், நபித்துவத்திற்கு ஒப்பானது, இமாம்கள் அவர்களிடத்தில் நபிமார்களைப் போன்று சிறப்பானவர்கள்' என ஷீஆக்கள் நம்புகின்றனர். தூதுத்துவம் பற்றி உண்மைக்கு மாற்றமான கருத்துக்களை கொடுக்கின்றனர். தூதுத்துவம் என்பது இமாம்களுக்கு வழிப்படுவதே! ஷிர்க் என்பது ஏனையோருக்கு வழிப்படுவதே என்கின்றனர். நபியவர்களின் சிறப்புக்குரிய ஸஹாபாக்களை காபிர் என்கின்றனர். 3 பேர், அல்லது 4 பேர், அல்லது 7 பேரைத் தவிர எல்லா ஸஹாபாக்களையும் மதம் மாறியவர்கள் என நிந்திப்பதோடு,  இஸ்மத், இமாமத் போன்ற அம்சங்களில் எமது தூய கொள்கையை விமர்சித்து, அவர்களின் ரஜ்இய்யா, ,அல் பதா தகிய்யா,போன்ற தவறான கோட்பாடுகளை முதன்மைப்படுத்துகின்றனர்.

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger