தவ்ஹீத்வாதிகள் கொலை செய்தார்களா? திசை திருப்பப்படும் கெக்கிராவைச் சம்பவம்.
“சந்திரனைப் பார்த்து நாய் குரைத்த” கதையாகிய தப்லீக் ஜமாத்தினர்.
இலங்கை முஸ்லீம்கள் வரலாற்றில் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஏகத்துவப் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சாரக் கலத்தில் எத்தனையோ பிரச்சினைகள், சண்டைகள், சிக்கள்கள் எல்லாம் ஏற்பட்டுள்ளன என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் இந்தப் பிரச்சினைகளில் ஒரு இடத்தில் கூட ஏகத்துவவாதிகள் அடித்தார்கள், கொலை செய்தார்கள் என்று யாராலும் நிரூபிக்க முடியாது.
தவ்ஹீத் வாதிகள் அடிவாங்கிய வரலாறு உண்டு, ஊர் நீக்கம் செய்யப்பட்ட வரலாறு உண்டு, ஏன் கொலை செய்யப்பட்ட வரலாறுகள் கூட உள்ளது. ஒரு இடத்தில் கூட அடித்தார்கள் வெட்டினார்கள் என்ற வரலாறு கிடையாது.
ஆனால் கடந்த வியாழக் கிழமை நடந்த ஒரு சம்பவத்தில் தவ்ஹீத் வாதிகளை கொலை காரர்களாக காட்டுவதற்க்கு முனைகிறது ஒரு கும்பல்.