“இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாதத்தை போதிக்கின்றன”. முஸ்லீம்களை மீண்டும் சீண்டியது லக்பிம நியுஸ் ஆங்கில நாளேடு – வன்மையாக கண்டிக்கிறது SLTJ
பல் சமூகத்தவர்களும் வாழும் இலங்கைத் திருநாட்டில் சமூகங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உண்டாக்கும் நோக்கில் சில கீழ்த்தரமான எண்ணங் கொண்டவர்கள் செயல்படுகிறார்கள்.அதில் முதல் இடத்தை ரியாஸ் சாலி (ஆசாத் சாலியில் சகோதரரும் கொழும்பு தெவடகஹ தர்காவின் ட்ரஸ்ட்டியும் ஆவார்) தான் பெருவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
அல்லாஹ்வை வணங்குவதை விட்டு விட்டு கப்ரில் அடக்கப்பட்டுள்ள மரணித்தவர்களை வணங்கும் கொள்கையை கொண்ட ரியால் சாலி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லக்பிம நியுஸ் ஆங்கில நாளேட்டில் Wahhabist terriorist traing in srilanka? THE ISSUES என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.