நஸீம் ஜாலியாத் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்தத் தளத்தில் பதியப்படும் இன்ஷாஅல்லாஹ்...

Thursday, July 28, 2011

ரமழானை அலங்கரிப்போம் (02)

முஹம்மது கைஸான் (தத்பீகி)


ஐங்காலத் தொழுகையைக் கூட்டாக நிறை வேற்றுவோம்.


நம்மில் சிலர் நோன்பு வைப்பார்கள் ஆனால் தொழ மாட்டார்கள் இஸ்லாத்தில் நோன்பு எவ்வாறு கடமையோ அவ்வாறே தொழுகையும் கடமை என்பதை ஏனோ உணர மறுக்கிரார்கள். இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. அதில் இரண்டாவதாக திகழ்வது தொழுகை.தொழுகைதான் காபிருக்கும் முஸ்லிமிற்கும் மிடையே வேறுபாட்டைக் காட்டக்கூடியது என நபிகளார் நவின்றுள்ளார்கள். தொழுகையைப் பேணுவது முஸ்லிமான ஆன் பெண் இரு பாலாருக்கும் கடமையாகும். தொழுகை மார்க்கத்தின் துானும் அமல்களில் மிக உன்னதுமானதுமாகும்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல் தொழுகையை நிலைநிறுத்துதல்இ ஸகாத் வழங்குதல்இ ஹஜ் செய்தல்இ ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஜந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: புகாரி 8இஃதிகாஃபின் சட்டங்கள்இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்’ என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.
நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.
ரமலானில் இஃதிகாப் எதற்காக?
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும்வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் புகாரியின்813 செய்தி ஆதாரமாக உள்ளது.ரமழானை அலங்கரிப்போம் (01)
முஹம்மது கைஸான் (தத்பீகி)

முஸ்லிம்கள் பாவக்கரைகளை விட்டும் ஒதுங்கி  தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் நல்லரங்களில் ஈடுபட்டு தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இறைவன் பல் வேறு  வாய்ப்புக்களை வழங்கியுள்ளான்.
அந்த வாய்ப்புக்களில் புனித ரமழான் மாதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், முஸ்லிம்களுக்கு இறைவன் வழங்கிய மிகப் பெரிய வெகுமதியுமாகும். எனவே குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதமான ரமழான் எம்மை எதிர் நோக்கி வருவதால் இவ்வருட ரமழான் மாதத்தை நாம் சுவர்க்கம் செல்வதற்க்குரிய வழியாக மாற்றி நிறைந்த நற்செயல்களை செய்ய நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

Tuesday, July 26, 2011


பிறர் மானம் காப்போம்! (04)
முகம்மது கைஸான் (தத்பீகி)பல் வேறு கோணங்களில் இஸ்லாம் மனிதனின் மானத்தை காத்துள்ளது  என்பதை சென்ற தொடர்களின் தகவல்களில் இருந்து புரிந்து கொண்டோம். அடுத்து மனிதனின் மானத்தை காவு கொல்லும் தீய பண்புகளையும் அதற்க்கு மறுமையில் கிடைக்கும் தன்டனைகளையும் சற்று நோக்குவது மிகவும் பயனாய் இருக்கும் என நினைக்கின்றேன்.

பிறர் குறை மறைப்போம்!

மனிதனின் மானத்தை சிதைக்கச்கூடிய காரியங்களில் அவனது குறைகளை வெளிப்படுத்துவதும் ஒன்றாகும்.இதை இஸ்லாம் வண்மையாக தடை செய்கின்றது.காரணம் மனிதர்கள் அனைவரிடமும் குறைகள் காணப்படுவது இயல்பே. ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோ வித்தியசமான குணப்பண்புகளும் குறைகளும் காணப்படுகின்றன.  இக்குறைகளை சமூக மயப்படுத்திஇ மற்ற சகோதர முஸ்லிமைக் கொச்சைப்படுத்துவதை இஸ்லாம் பெரும் பாவமாகக் கருதுகிறது. மற்றவரின் குறையைத் தேடித்திருயும் மனிதர்களை இழிந்தவர்களாவும் பிணத்தைத் திண்ணும் செயலுக்குச் சமமானதாகவும் இஸ்லாம் கருதுகிறது. இத்தகைய செயலை அல்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கிறது.

Monday, July 25, 2011
ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள் (02)


அரபு மூலம்:
அறிஞர் அப்துல்லாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் :
முஹம்மது கைஸான் (தத்பீகி) ஷீஆக்களுக்கு ஏன் ராபிழாக்கள் என பெயர் வந்தது?

ஷீஆக்களின் தலைவர்களில் ஒருவரான மஜ்லிஸி என்பவர், தனது 'பிஹாருல் அன்வார்' என்ற நூலில் (ராபிழாக்களின் சிறப்பும்,பெயரின் புகழும்) என்ற தலைப்பில் 'ராபிழா' என்ற பெயர் வருவதற்கான காரணம் என்ன என்பதைக் கூறிப்பிடுகிறார்.

ஸுலைமான் அல் அஃமஷி என்பவர் குறிப்பிடுகையில், 'என்னிடத்தில் எனது தந்தை அப்தில்லாஹ் இப்னு ஜஃபர் பின் முஹம்மத் என்பவர் வந்தார். நான் என்னை உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன். மக்கள் நமக்கு ராபிழாக்கள் எனக் கூறுகிறார்கள். ராபிழாக்கள் என்றால் என்ன? எனக் கேட்டேன். அதற்கு அவர்,'அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் அதற்குப் பெயர் வைக்கவில்லை. அல்லாஹ் தான் தவ்ராத்திலும், இன்ஜீலிலும் ஈஸா, மூஸா ஊடாக அதற்குப் பெயர் வைத்தான்' எனக்கூறினார்.

ராபிழாக்கள் எனப் பெயர் வருவதற்கு பின் வரும் நிகழ்வு காரணமாக அமைந்தது என சில ஷீஆக்களால் சொல்லப்படுகிறது.

Sunday, July 24, 2011


இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்வதைக் கண்டித்து தவ்ஹீத் ஜமாத் போராடாமல் இருப்பது ஏன்?


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உணர்வு வார இதழில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைப்பின் தலைவர் சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் அளித்த பதிலை அப்படியே வெளியிடுகிறோம்.
ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகளுக்குத் தான் மக்களின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப போலிப் போராட்டம் நடத்தும் அவசியம் இருக்கிறது. தவ்ஹீத் ஜமாஅத் ஓட்டுப் பொறுக்கும் அரசியல் நடத்தாத காரணத்தால் போலிப் போராட்டங்களை நடத்துவதில்லை. இது தான் காரணம்.
இந்தியாவுடன் ஒப்பிடும் போது இலங்கை ஒரு குட்டி நாடு. இந்தியாவுடன் மோதிப்பார்க்க அந்த நாட்டுக்குப் பலமோ துணிவோ கிடையாது. இந்திய மீனவர்களைச் சட்ட விரோதமாகப் புகுந்து பிடித்துச் செல்லும் வலிமையோ இலங்கை அரசுக்குக் கிடையாது. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கான அடிப்படைக் காரணத்தை விளங்கிக் கொண்டால் தான் தமிழ் மொழியைச் சொல்லி மக்களை ஏமாற்றுவோரின் போலித்தனம் புரியும்.

Thursday, July 21, 2011


நூல் அறிமுகம்  

 முஹம்மது கைஸான் (தத்பீகி)
இமாம்பல்கலைக்கழகம்.ரியாத்.சவூதி அரேபியா 
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அருள்களில் முக்கியமான ஒன்றாக குழந்தைப் பாக்கியம் உள்ளது. குழந்தைப்பேறு இல்லாத வாழ்க்கை பூக்கள் இல்லாத வெறுமையான நந்தவனத்திற்கு ஒப்பானதாகும்.

மனித வாழ்வில் மிக முக்கிய கட்டமாக சிறு பராயம் அமைந்துள்ளது. அப்பருவத்தில் ஊட்டப்படும் பாடமும் காட்டப்படும் வழியும் தான் அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கப்போகிறது. எனவே குழந்தைப் பாக்கியமுடையோர் அவர்களை சரியான வழியில் நெறிப்படுத்த வேண்டும். அப்பாவித்தனம் நிறைந்த சின்னஞ் சிறார்களை வீணே விட்டவிடாது அவர்களை ஒழுக்க சீலமுள்ளவர்களாக நேரிய செல் நெறியில் ஆற்றுப்படுத்துவதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.


அவ்லியாக்களின் சிறப்புகள்பீ. ஜைனுல் ஆபிதீன்.

புராணங்களில் வரும் நிர்வாணச் சாமியார்கள், ஆபாசக் கடவுளர்களின் அட்டகாசங்களை மிஞ்சும் வகையில் அவ்லியாக்கள் என்று சுன்னத் ஜமாஅத்தினரால் கூறப்படுவோரின் அட்டகாசங்கள் அமைந்திருக்கின்றன. அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல் என்பார்கள். புத்தி பேதலித்தவர்களின் கடைசிப் புகலிடம் தரீக்கா என்ற போலி ஆன்மீகம் என்று கூறலாம். தரங்கெட்டவர்கள், தறுதலைகளின் கடைசித் தலம் தரீக்கா என்பதை இந்தக் குப்பையைப் படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.)

ஒரே இறைவனை மட்டும் வணங்க வேண்டும்; அவனது இறுதித் தூதர் அவர்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை. இந்த இரண்டையும் அழுத்தமாகவும், உறுதியாகவும் நம்புவதுடன் மக்களுக்கும் இதை நாம் போதிக்கிறோம்.
அவ்லியாக்கள், மகான்கள், நாதாக்கள், பெரியார்கள், தரீக்காவின் ஷைகுமார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு அவர்களை வணக்கத்திற்குரியவர்களாக ஆக்கக் கூடாது; அல்லாஹ்வின் ஆற்றலை அவர்களுக்கு வழங்கக் கூடாது என்றும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை மதிப்பது போன்று இவர்களை மதிக்கக் கூடாது என்றும் கூறுகிறோம். அந்தப் பெரியார்களை மதிக்கிறோம் என்ற பெயரால் அவர்களை இழிவுபடுத்தக் கூடாது என்கிறோம்.

Tuesday, July 19, 2011


பிறர் மானம் காப்போம். (03)

முகம்மது கைஸான் ( தத்பீகி )


மானம் காத்த மா நபி.

இன்னும் சொல்லப் போனால் மாஇஸ் (ரழி) அவர்கள் தன் விபச்சாரக் குற்றத்தை நபி (ஸல்) அவர்களிடம் ஒப்புக் கொண்டு அதற்குரிய தண்டனையை வழங்கக் கோரிய மூன்று சந்தர்ப்பங்கிலும் அவரின் மானத்தின் புனிதம் கருதி அவரின் இருண்ட விவகாரத்தை வெளிச்சப்படுத்தாமல் அவரை தண்டிக்காது திருப்பி அனுப்பிவைத்தார்கள் நபிகள் நாயகம்.நான்காவது தடைவ அவரே முன் வந்து அதற்குரிய தண்டனையைப் பெற்று இவ்வுலகிலேயே தன்னை பரிசுத்தப்படுத்திக் கொண்டார்.
பார்க்க : அபூ தாவுத் : 4421

நபி (ஸல்) அவர்கள் ஒரு முஃமினின் மானத்தை எனதளவு புனிதமானதாக கருதியுள்ளார்கள் என்பதற்கு இந்நிகழ்ச்சி சிறந்த எடுத்துக் காட்டாகும்.இது போன்று இன்னும் பல சம்பவங்கள் நபிகளாரின் காலத்தில் நடந்தன என்பதற்க்கு பல சான்றாதாரங்கள் காணப்படுகின்றன.

Sunday, July 17, 2011


ஏகத்துவத்தின் வெளிப்பாடு தொழுகை
அப்பாஸ் அலி
Bû\YàûPV UôùTÚm LÚûQVôp UßûU ùYt±dÏ @¥jR[UôL BÚdLd á¥V GLjÕYd ùLôsûLûV GtÏm Tôd¡VjûR Sôm ùTt±Úd¡ú\ôm. BkR @¥lTûP«p @pXôy DXLj§p YôÝm @û]YûWÙm ®P SmûU úUmTÓj§ BÚd¡\ôu. @pXôy®túL FpXôl×LÝm.
A]ôp ""Bû\YàdÏ BûQ ûYdLôUp BÚkRôp UhÓm úTôÕm Uß DXL Yôr®p ùYt±VûPkÕ ®PXôm'' Fuß Smªp TXo RY\ôL Fi¦dùLôiÓ BÚd¡ú\ôm. ùTÚmTôÛm SpXUpLû[ Sôm ùNnVôUp BÚlTÕ BûRj Rôu DQojÕ¡\Õ.
GLjÕYd ùLôsûLûVd LûPl ©¥jRYàdÏ ¨fNVm ùNôodLm ¡ûPdÏm FuT§p Fs[[Üm NkúRLm BpûX. A]ôp SWLm ùNpXôUp ùNôodLm ùNpYô]ô? Fuß Sôm úVô£dL úYiÓm. Gù]u\ôp BvXôj§u LPûULû[ N¬VôL ¨û\úYt\ôR LôWQj§]ôp RqÍjYô§LÞm UßûU«p SW¡p Ri¥dLl TÓYôoLs Fuß S© (^p) @YoLs á±Ùs[ôoLs.حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُعَذَّبُ نَاسٌ مِنْ أَهْلِ التَّوْحِيدِ فِي النَّارِ حَتَّى يَكُونُوا فِيهَا حُمَمًا ثُمَّ تُدْرِكُهُمُ الرَّحْمَةُ فَيُخْرَجُونَ وَيُطْرَحُونَ عَلَى أَبْوَابِ الجَنَّةِ» قَالَ: «فَيَرُشُّ عَلَيْهِمْ أَهْلُ الجَنَّةِ المَاءَ فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الغُثَاءُ فِي حِمَالَةِ السَّيْلِ ثُمَّ يَدْخُلُونَ الجَنَّةَ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ جَابِرٍ أخرجه  الترمذي

حكم الألباني : صحيح@pXôy®u çRo (^p) @YoLs á±]ôoLs: GLjÕYd ùLôsûLÙûPVYoL°p £Xo SWLj§p @Ól×dL¬Lû[l úTôuß Uôß¡u\ @[®tÏ @eúL úYRû] ùNnVl TÓYôoLs. ©u× (Bû\YàûPV) @Ús @YoLÞdÏd ¡hÓm. (SWLj§-ÚkÕ) @YoLs ùY°úVt\lThÓ ùNôodLj§u YôNpL°p ÅNlTÓYôoLs. ùNôodLYô£Ls @YoLs ÁÕ Ri½ûWj ùR°jRÜPu S§Vôp ÑUkÕ YWlThP ®ûR (LûWúVôWm) Øû[lTûRl úTôp @Yo (קRôL) DÚùYÓjÕ ùNôodLj§p ÖûZYôoLs.
@±®lTYo: _ô©o (W-)  èp: §oª§ 2522இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாதத்தை போதிக்கின்றன”. முஸ்லீம்களை மீண்டும் சீண்டியது லக்பிம நியுஸ் ஆங்கில நாளேடு வன்மையாக கண்டிக்கிறது SLTJபல் சமூகத்தவர்களும் வாழும் இலங்கைத் திருநாட்டில் சமூகங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உண்டாக்கும் நோக்கில் சில கீழ்த்தரமான எண்ணங் கொண்டவர்கள் செயல்படுகிறார்கள்.அதில் முதல் இடத்தை ரியாஸ் சாலி (ஆசாத் சாலியில் சகோதரரும் கொழும்பு தெவடகஹ தர்காவின் ட்ரஸ்ட்டியும் ஆவார்) தான் பெருவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
அல்லாஹ்வை வணங்குவதை விட்டு விட்டு கப்ரில் அடக்கப்பட்டுள்ள மரணித்தவர்களை வணங்கும் கொள்கையை கொண்ட ரியால் சாலி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லக்பிம நியுஸ் ஆங்கில நாளேட்டில் Wahhabist terriorist traing in srilanka? THE ISSUES என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.
ஷீஆக்களின் சீர்கெட்ட கொள்கைகள் (01)
அறிஞர் அப்துல்லாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி என்பவர் ஸவுதி அரேபியாவில் ஷீஆக்களின் சிம்ம சொப்பனமாக திகழக்கூடியவர்.அவர்  தனது அறிவு ஆற்றல் ஆயுற்காலம் அனைத்தையும் ஷீஆக்களுக்கெதிராகவே பயன்படுத்துகின்றார்.அந்த வகையில் ஷீஆக்களின் பொய்முகத்தை தோலுரித்துக்காட்டும் பல நூல்களைத் தொகுத்துள்ளார்.
.من عقائد الشيعة என்ற அவரது நூல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.இன்ஷா அல்லாஹ் வாரம் ஒரு முறை தொடராக எனது தளத்தில் வெளியிடப்படும்.
 (முஹம்மது கைஸான் தத்பீகி )

மூல நூலாசிரியரின் முன்னுரை.
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!. ஸலாத்தும் ஸலாமும் நபியவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தவர்கள் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
இன்று சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள ராபிழாக்களின் பிரசாரத்தின் எழுச்சியையும் அதனால் இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தையும் இந்நுாலைப் படிப்பவர்களால் நன்கு தெரிந்து கொள்ள முடியும்.
இப்பிரிவினால் ஏற்பட்டுள்ள அபாயம் அதன் கொள்கை கோட்பாடுகள் என்ன? அல்குர்ஆன் நபித்தோழர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகள் என்ன? தமது இமாம்கள் மீது அளவு கடந்து இவர்கள் வைத்துள்ள பற்று போன்றவற்றை அறியாத முஸ்லிம்கள் அநேகர் உள்ளனர்.   எனவே இது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் அமைந்துள்ள  
التعليقات على متن لمعة الإعتقاد என்ற இமாம் அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் அல் ஜப்ரீன் அவர்களின் நுாலின் துணையுடனும் ராபிழாக்கள் குறித்து அவர்களின் புகழ் பெற்ற நூல்கள் அவர்களின் மோசமான கொள்கைகள் பற்றிப் பேசும் முக்கிய வரலாற்று நூல்களின் துணை கொண்டும் இந்நூலை தொகுத்துள்ளேன்.

Saturday, July 16, 2011பிறர் மானம் காப்போம் (02)முகம்மது கைஸான்  ( தத்பீகி )

மானம் உயிரை விட புனிதமானது
யார் தன் பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன்னைப் பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன் மார்க்கத்திற்காக கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார்.'என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பர: ஸஈத் இப்னு சைத் (ரலி)
ஆதாரம் :திர்மிதி4772
                                                                                                                               :          நஸாஈ4095                                                                                             
இஸ்லாம் எந்தளவு மனிதனின் மானத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதற்கு இந்த நபி மொழி சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஒரு முஸ்லிம் தன்னுடைய மானம்மரியாதையை தன் இந்நுயிரை விட மேலாக மதிக்க வேண்டும்.

Thursday, July 14, 2011
ஜமாஅதே இஸ்லாமி : ஓட்டுக்காக சத்தியத்திற்கு வேட்டு வைக்கும் அமைப்பு ஒவ்வொரு இயக்கத்தினரும் தாங்கள் தான் சரியான வழியில் இருப்பதாகத் தான் சொல்வார்கள். அப்படிச் சொல்லாவிட்டால் அந்த இயக்கம் செத்து விடும்.

ஆனால் நேர்வழியில் இருப்பதாக ஒரு இயக்கம் சொல்லிக் கொள்வதால் மட்டும் அது நேர்வழியில் இருப்பதாக ஆகாது. குர்ஆனுக்கும் நபிவழிக்கும் உட்பட்டும் குர்ஆன் ஹதீஸுடன் மோதாமலும் அதன் கொள்கை கோட்பாடுகள் அமைந்திருந்தால் மட்டுமே அது நேர்வழியில் இருப்பதாக ஆகும்.

இஸ்லாமிய அரசை நிறுவுவது தான் இஸ்லாத்தின் இலட்சியம் என்ற கொள்கையின் மீது ஜமாஅதே இஸ்லாமி என்ற இயக்கம் நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை முற்றிலும் தவறாகும்.

நாம் சத்திய இஸ்லாத்தைச் சொல்ல வேண்டும். அதன் பால் மக்கள் ஈர்க்கப்பட்டு பெரும்பான்மை பெற்றால் அப்போது இஸ்லாமிய அரசு உருவாகும் வாய்ப்பு உள்ளது என்றால் அதில் நமக்கு மறுப்பு இல்லை.
ஆனால் ஆட்சியை உருவாக்குவது தான் இஸ்லாத்தின் ஒரே கொள்கை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

பிறர் மானம் காப்போம் (01)

Wednesday, July 13, 2011பிறர் மானம் காப்போம் (01)முகம்மது கைஸான் ( தத்பீகி )


மானத்தின் முக்கியத்துவம்

மனிதனின் மானம் வானம் போல் பெரியது மானத்திற்கு முன்னால் மனிதனின் உயிர் மற்றும் உடமைகள் அத்திப்பழத்தின் விதையை விடவும் சிறியவை. மானம் காப்பதும் மரியாதை கேட்பதும் மனிதனின் குருதியில் ஊரிய குணாதிசியங்கள். மானம் இழந்தவன் தன் உயிரை இழந்தான்' என்பார்கள் நம் முன்னோர்கள். மானம் மலையேரும் போது மனிதன் தற்கொலை செய்து கொள்கிறான் அல்லது சமூகத்தை விட்டும் ஓடி ஒழிந்து கொள்கிறான். தன்மானம்; காப்பதற்காக தன் சொத்து சுகங்களைக்கூட தியாகம் செய்யும் அளவுக்கு மனிதன் தன்மானத்தை பெரும் செல்வமாக மதிக்கின்றான்.

ஆதி மனிதர்களான ஆதம் அலை ஹவ்வா அலை ஆகிய இருவரும் சுவர்க்கத்தில் தங்க வைக்கப்பட்ட போது இறை கட்டலையை மீறினார்கள் அதன் விலைவால் அவர்களின் வெட்கத்தலங்கள் தெரிந்தன.உடனே இருவறும் பொங்கி எழுந்து நாணத்துடன் தங்கள் மானத்தை சுவனத்தின் இலை தழைகளைக் கொண்டு மறைக்க விலைந்ததாக குர்அன் கூறுகின்றது.


மக்காவை நோக்கி..............இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ரமழான் நோன்பு 10ல் நஸீம் ஜாலியாத் வழமை போல் உம்ராவுக்கான ஏற்பாட்டை செய்துள்ளது.போக்குவருத்து தங்குமிடம் மற்றும் உணவு முற்றிலும் இலவசம் நிகிழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் ரியாத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் இந்த இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.
 0558836039

Thursday, July 7, 2011


கடந்த (2010) ரமழான் போட்டி நிகழ்ச்சியில்

வெற்றி பெற்றவர்கள்
நஸீம் ஜாலியாத் சென்ற ரமழானில் இஸ்லாத்தில் கொள்கையும் ஒழுக்கமும் என்ற நூலை வெளியிட்டு அதில் ஒரு போட்டி நிகழ்ச்சியையும் அறிவித்தது.

அந்த போட்டியில் பலர் கலந்து கொண்டனர் அவர்களில் வெற்றி பெற்றவர்களின் விபரங்களை இங்கே வெளியிடுகின்றோம்.


வெற்றியாளர்கள்
பரிசில்கள்
இடம்
நாடு
பெயர்
விமான டிக்கட்
01
தமிழ் நாடு
காஜா முஹ்யித்தீன்
1000ம் ரியால்
02
தமிழ் நாடு
காஜா முஹ்யித்தீன்
700 ரியால்
03
இலங்கை
முஹம்மது ஸலீம்
500 ரியால்
04
தமிழ் நாடு
முஹம்மது ஹஸன்
300 ரியால்
05
தமிழ் நாடு
பர் அலி
மொபைல் போன்
06
இலங்கை
முஹம்மத் அர்ஹம்
மொபைல் போன்
07
இலங்கை
முஹம்மத் பாசித்
மொபைல் போன்
08
தமிழ் நாடு
பஹாவுத்தீன்
மொபைல் போன்
09
இலங்கை
சியானா ஹமீத்
மொபைல் போன்
10
இலங்கை
சித்தி மர்லிய்யா
உம்ரா டிக்கட்
11
இலங்கை
கதீஜா புகாரி
உம்ரா டிக்கட்
12
இலங்கை
கதீஜா
உம்ரா டிக்கட்
13
இலங்கை
முஹம்மது பைசல்
உம்ரா டிக்கட்
14
இலங்கை
நிசா மர்யம்
உம்ரா டிக்கட்
15
இலங்கை
முஹம்மது பைசல்
உம்ரா டிக்கட்
16
தமிழ் நாடு
முஹம்மது மரைக்கான்
உம்ரா டிக்கட்
17
இலங்கை
பாத்திமா ஸஹீலா
உம்ரா டிக்கட்
18
தமிழ் நாடு
மாலிக் பாஷா
உம்ரா டிக்கட்
19
தமிழ் நாடு
முஹம்மது ஹனீப்
உம்ரா டிக்கட்
20
தமிழ் நாடு
உபைதுர் ரஹ்மான்குறிப்பு :

இது வரை பரிசில்களை பெற்றுக் கொள்ளாதவர்கள் 0558836039 எனும் இலக்கத்தை தொடர்பு கொண்டு பரிசில்களை பெற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger