நஸீம் ஜாலியாத் தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்தத் தளத்தில் பதியப்படும் இன்ஷாஅல்லாஹ்...

Wednesday, June 29, 2011


முதலில் போதிக்க வேண்டியது எது? அகீதாவா? கிலாஃபத்தா?



 இம்தியாஸ் ஸலபி

மக்கள் மத்தியில் இஸ்லாமிய பிரச்சாரப் பணியினை கொண்டு செல்லும்போது முதலிடம் கொடுக்க வேண்டிய அம்சம் எது? என்பதில் சிலர் பிரச்சினைப்படுகிறார்கள்.

“இஸ்லாமிய அரசாங்கம்”(கிலாபத்) நிறுவுவது சம்பந்தமாகவே முஸ்லிம்களை வழிநடாத்த வேண்டும். அரசாங்கம் உருவாகினால் தான் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றக் கூடியதாகவும் அதிகாரபூர்வமாக நன்மையை ஏவி தீமையை தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எனவே கிலாபத் அமைப்பது பற்றிய போதனைகளை முதலில் போதிக்கவேண்டும், என்கிறார்கள்.

மார்கக் விவகாரங்கள் பற்றிய முரண்பாடுகளோ அகீதா பற்றிய சீர்குலைவுகளோ ஏனைய விடயங்கள் பற்றிய விளக்கங்களோ பேசி மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படுத்தாமல், மக்கள் எந்தெந்த நம்பிக்கைகளில் -கொள்கைகளில்- இருந்து செயற்படுகிறார்களோ அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு வேண்டும், என்கிறார்கள்.

கரை தாண்டும் கணவனும் கரை படியும் மனைவியும்.Hisham m.i.sc



இன்றைய உலகத்தில் அனைத்து விடயங்களும் பொருளாதாரத்தை மையமாக வைத்து அமைந்து இருக்கிறது.கல்வியாக இருந்தாலும் கல்வி கற்பவா;களின் நோக்கமும் கல்வியை கற்றுகொடுப்பவா;களின் நோக்கமும் பொருளாதாரத்தை மையமாக வைத்து தான் அமைந்து இருக்கின்றது.நாம் நிம்மதியாக வாழவேண்டும் என்றால் அதிகமான பொருளாதரத்தை திரட்டினால் தான் முடியும் என்ற நிலை.எனவே நாம் இந்த பொருளாதாரத்தை திரட்டுவதற்காக பல தியாகங்களை செய்தி பல வழிகளில் திரட்டுகிறோம்.அதிகமானவா;கள் தங்களுடைய ஊh;களில் இருந்து வெளி ஊh;களுக்குச் சென்று பொருளாதாரத்தை திரட்டுகிறாh;கள்.இன்னும் சிலா; தங்களுடைய நாடுகளை விட்டுவிட்டு வெளிநாடுகளில் சென்று பொருளாதாரத்தை திரட்டுகிறாh;கள.
பொருளாதாரம் அல்லாஹ்வின் அருள்
இஸ்லாமிய மாh;க்;கம் பொருளாதாரத்தை அல்லாஹ்வின் அருள் என்றும் அதனை திரட்டுவதற்கு ஆh;வமும் ஊட்டுகிறது.
சிலரைவிட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீh;கள்! ஆண்களுக்கு அவா;கள் பாடுபட்டதில் பங்குண்டு.பெண்களுக்கு அவா;கள் பாடுபட்டதில் பங்குண்டு அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.(அல்குh;ஆன் 4:32)
பொருளாதாரத்தை திரட்டி அதை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தால் மற்றவா;கள் அடையாத நன்மைகளை நமக்கு அடைய முடியும்.எனவே இஸ்லாமிய மாh;க்கம் பொருளாதாரத்தை திரட்டுவதற்கு தடையாக நிற்பதில்லை.ஆனால் பொருளாதாரத்தை திரட்டுவதாக இருந்தால் தான் விரும்பியபடி திரட்ட முடியாது.அதற்கு இஸ்லாம் சில நிபந்தனைகளை இடுகிறது.அந்த அடிப்படையில் தான் நாம் பொருளாதாரத்தை திரட்ட வேண்டும்.வேண்டிய நாட்டிற்கு சென்று பொருளாதாரத்தை திரட்டலாம் ஆனால் அதற்கு இஸ்லாம் வரையரையை விதித்து இருக்கிறது.
அடிப்படையான நிபந்ததை என்னவென்றால் திருமணமானவா; வெளிநாடு சென்று பொருளாதரத்தை திரட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக தன்னுடைய மனைவியையும் அங்கு அழைத்துச் செல்லவேண்டும்.அவ்வாறு அழைத்து செல்ல முடியாத பச்சத்தில் அங்கு சென்று சம்பாhpப்பதை தவிh;த்துக்கொள்ள வேண்டும்.இஸ்லாமிய மாh;க்கம் அதைனை வன்மையாக கண்டிக்கிறது.
திருமணத்தின் அவசியம்
மற்ற மதங்கள் மற்றும் சித்தாந்தங்களைப் போல் இல்லாமல் இஸ்லாமிய மாh;கம் இறைவனை நெருங்குவதற்கு திருமணத்தை தடைக் கல்லாக அமைக்காமல் திருமணத்தை வழியுருத்திகிறது.இதன் காரணத்தினால் இன்று ஆன்மிகத்தின் பெயரால் ஏராளமான தவறுகள் நடப்பதைப் பாh;கலாம்.சாமியாh;களின் பெயரில் எராளமான பாலியல் பலாத்காரங்கள் நிறைந்து காணப்படுகின்றது.ஆனால் இஸ்லாமிய மாh;க்கம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.ஒருவா; எவ்வளவு ஆன்மிகத்தில் மூழ்கிப்போனாலும் திருமணம் செய்யவில்லை என்றால் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றியவராகமாட்டாh;.எனவே இஸ்லாம் இளைஞா;களுக்கு திருமணத்தை வழியுருத்துகிறது.

நானும் அல்கமா மற்றும் அஸ்வத்(ரஹ்) ஆகியோரும் அப்துல்லாஹ் இப்னு மஸ்த்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அப்துல்லாஹ்(ரலி) கூறினார்கள்: நாங்கள் (வசதி வாய்ப்பு) ஏதுமில்லாத இளைஞர்களாக நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் 'இளைஞர்களே! தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். ஏனெனில், அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும்.இயலாதோர் நோன்பு நோற்றுக்கொள்ளட்டும்! ஏனெனில், நோன்பு (ஆசையைக்) கட்டுப்படுத்தக் கூடியதாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவா;: அப்துர் ரஹ்மான் இப்னு யªத்(ரஹ்) அறிவித்தார்
நூல்: புகாhp 5066
திருமணத்தின் நோக்கம்
நம்முடைய பாலியல் உணர;ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்காக தான் இஸ்லாம் திருமணத்தை வழியுருத்துகிறது.ஒருவா; திருமணம் முடிக்க சக்தி உள்ளவாராக இருந்தால் கண்டிப்பாக திருமணம் முடித்தே ஆகவேண்டும்.நம்முடைய ஆசையை கட்டுபடுத்திக் கொள்ள இஸ்லாம் இரண்டு வழிமுறைகளை கற்றுத்தருகிறது.அதாவது ஒன்று திருமணம் மற்றொன்று நோன்பு பிடித்தல்.இந்த இரண்டும் இல்லாமல் யாh; தன் உணர;ச்சிகளைக் கட்டுப்படுத்தி கொள்கிறாh;கள் என்று கூறுகிறாறோ அவா; கண்டிப்பாக பொய்தான் கூறவேண்டும்.யாராக இருந்தாலும் இந்த இரு வழிமுறைகளில் ஒன்றைப் பின்பற்றினால் தான் தன்னுடைய உணர;ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியும்.ஆனால் இன்று நடக்கின்ற கொடுமை என்னவென்றால் திருமணம் முடித்து விட்டு பொருளாதாரத்தை திரட்டுவதற்காக மனைவியை விட்டு விட்டு வெளிநாடு செல்கின்றாh;கள்.ஒருபோதும் இஸ்லாம் அதைனை அனுமதிக்கவே இல்லை.திருமணத்தின் நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் வெளிநாடுகளில் தங்கி இருப்பது தன்னுடைய மனைவிக்கும் செய்கின்ற துரோகமாகும்.

Saturday, June 25, 2011

விலக்கப்பட்ட புறமும் இழக்கப்படும் நன்மைகளும்



முகம்மது கைஸான்  ( தத்பீகி )


பெரும்பாலும் நான்கு பேர் ஒரு சபையில் ஒன்று கூடினால் அடுத்தவரின் குற்றங்குறைகளைப் பற்றிப் பேசாமல் அந்தச் சபையை விட்டும் விலகிச்செல்வதிலலை.தனது சகோதர முஸ்லிமின் குறைகளை அம்பலப்படுத்தி சந்திக்கிழுப்பது அச்சபைக்கு சக்கரைப்பொங்கலாக மாறிவிடும். பொதுவாக மாற்றாரின் விவகாரம் என்றால் அது தேனை விட தித்திப்பாகி விடுகின்றது.தேனாவது கொஞ்ச நேரத்தில் திகட்டி விடும்.ஆனால் இது திகட்டாது. இதனால் தான் புறம் பேசுபவரும் புறம் கேட்பவரும் தேன் அருந்துவதைப் போன்று அடுத்தவரின் குறைகளை ரசித்து ருசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக புறம் பேசப்படுபவர் பகைவராகவோ அல்லது எதிரியாகவோ இருந்தால் அதை சொல்ல வேண்டியதில்லை.தலையிலிருந்து பெறு விரல் வரை பேசி முடிப்பார்கள். சமூகத்தில் உள்ள அத்தனை மட்டத்தாரும் இதில் புகுந்து விளையாடுகின்றனர்.நல்லவன் கெட்டவன் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் இந்த நோய் பரவியுள்ளது


மார்க்கத்தில் பிடிப்பும் பற்றும் உள்ள நல்லடியார்களைக்கூட ஷைத்தான் தனது ஆதிக்கத்தை செலுத்தி இந்த பாவத்தில் விழச்செய்துள்ளான் என்றால் இது எவ்வளவு பெரிய தீமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்

Friday, June 24, 2011

மவ்தூதியை மகானாக்க முயலும் ஜமாஅதே இஸ்லாமியின் முரீதுகள்

எம்.டீ.எம்.பர்ஸான் - சிலாபம்
சத்திய இஸ்லாத்தின் அறிவார்ந்த கருத்துக்களை, தங்கள் கைச்சரக்குகள் மூலம் திரிபுபடுத்தி, முஸ்லிம் சமுதாயத்தின் ஈமானிய அடிப்படையை தகர்த்தெரியும் தரம் கெட்ட திட்டங்களை லாவகமாய் நிறைவேற்றும் தீய சக்திகள் வரலாறு நெடுகிலும் வளர்ந்து வந்திருப்பது உலகறிந்த பேருண்மை.
இஸ்லாத்தை ஒழிப்பதற்காய் இஸ்லாமிய முழாம் புசிய கோடாரிக் காம்புகளை அதற்குள் இருந்தே உற்பத்தி செய்து உலாவிடும் போக்கு யுதர்கள் கைக்கொண்டு வரும் பிரதான உக்திகளில் ஒன்று. இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையான ஏகத்துவம், தூதுத்துவம் உள்ளிட்ட அம்சங்களில் சீர் கெட்ட சிந்தனைகளை நுழைத்து, முஸ்லிம் சமுதாயத்தை கூறுபோடுவதற்காய் உருவாக்கப்பட்ட சில கோடாரிக் காம்புகளே ஷீயாக்களும் தரீகாக்களும் ஆகும்.

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger