பிறர் மானம் காப்போம்! (04)
முகம்மது கைஸான் (தத்பீகி)
பல் வேறு கோணங்களில் இஸ்லாம் மனிதனின் மானத்தை காத்துள்ளது என்பதை சென்ற தொடர்களின் தகவல்களில் இருந்து புரிந்து கொண்டோம். அடுத்து மனிதனின் மானத்தை காவு கொல்லும் தீய பண்புகளையும் அதற்க்கு மறுமையில் கிடைக்கும் தன்டனைகளையும் சற்று நோக்குவது மிகவும் பயனாய் இருக்கும் என நினைக்கின்றேன்.
பிறர் குறை மறைப்போம்!
மனிதனின் மானத்தை சிதைக்கச்கூடிய காரியங்களில் அவனது குறைகளை வெளிப்படுத்துவதும் ஒன்றாகும்.இதை இஸ்லாம் வண்மையாக தடை செய்கின்றது.காரணம் மனிதர்கள் அனைவரிடமும் குறைகள் காணப்படுவது இயல்பே. ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோ வித்தியசமான குணப்பண்புகளும் குறைகளும் காணப்படுகின்றன. இக்குறைகளை சமூக மயப்படுத்திஇ மற்ற சகோதர முஸ்லிமைக் கொச்சைப்படுத்துவதை இஸ்லாம் பெரும் பாவமாகக் கருதுகிறது. மற்றவரின் குறையைத் தேடித்திருயும் மனிதர்களை இழிந்தவர்களாவும் பிணத்தைத் திண்ணும் செயலுக்குச் சமமானதாகவும் இஸ்லாம் கருதுகிறது. இத்தகைய செயலை அல்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கிறது.









