Saturday, July 16, 2011பிறர் மானம் காப்போம் (02)முகம்மது கைஸான்  ( தத்பீகி )

மானம் உயிரை விட புனிதமானது
யார் தன் பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன்னைப் பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீதாவார்.யார் தன் மார்க்கத்திற்காக கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார்.'என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பர: ஸஈத் இப்னு சைத் (ரலி)
ஆதாரம் :திர்மிதி4772
                                                                                                                               :          நஸாஈ4095                                                                                             
இஸ்லாம் எந்தளவு மனிதனின் மானத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பதற்கு இந்த நபி மொழி சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஒரு முஸ்லிம் தன்னுடைய மானம்மரியாதையை தன் இந்நுயிரை விட மேலாக மதிக்க வேண்டும்.
ஒரு முஃமின் எந்நிலையிலும் தன் மானத்தை இழந்து விடக்கூடாது. தன் மானம் பறிபோக நேறிட்டால் அதற்காக சண்டையிட்டாவது தன் கண்ணியத்தைக் காத்துக் கொள்ள வேண்டும். அந்தச்சண்டையில் அவர் கொள்ளப்பட்டாலும் சரிதான்.அவருக்கு ஷஹீதின் நன்மை கிடைக்கும் என இஸ்லாம் கூருகின்றது. ஒரு மனிதனின் மானத்தில் கை வைப்பது அவனை கொலை செய்ததற்கு நிகரான குற்றம் என்பதை இந்த நபி மொழி உணர்த்துகின்றது.
இதிலிருந்து மானமிழந்து மறியாதையற்று நடைப்பினமாக வாழ்வதை விட கண்னியத்தோடு மாழ்வதயே இஸ்லாம் வரவேற்கின்றது என்பதை அறியலாம்.
மானத்தில் கை வைப்பது கொலைக்கு நிகரான குற்றம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள்.கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டி ருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார்.அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ அவருக்குத் துரோகமிழைக்கவோஅவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்மைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக் குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்றவரின் உயிர் பொருள் மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.
 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: முஸ்லிம் (5010)

ஒரு முஸ்லிமின் உயிரை கொல்வது எவ்வளவு குற்றமோ அதே அளவு குற்றத்தை நபிகளார் மான,மரியாதையை கெடுக்கும் விவகாரத்திற்கும் கொடுத்துள் ளார்கள்.
அகபாவில் ஓர் உடன்படிக்கை
மனிதனின் கன்னியத்திற்கு இஸ்லாம் எந்தளவு கவனம் செலுத்தியுள்ளது என்பதற்கு அகபாவில் நடந்த உடன்படிக்கை சிறந்த சான்றாகும்.
நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரில் ஏகத்துவப்பிரச்சாரத்தை முடுக்கி விட்டதினால் பல இன்னல்களுக்கும் இடர்களுக்கும் ஆளானார்கள் தன் தாய் நாட்டை துறக்குமளவு சோதனைகள் பல அவரைச்சூள்ந்தன.
இந்த நிலையில் மதீனாலிலிருந்து மக்காவுக்கு வருகை தந்த சில மதீனா வாசிகள் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மதீனாவில் அடைக்கலம் தருவதாக வாக்களித்தனர்.இதை யொட்டி அகபா எனும் பல்லத்தாக்கில் அவர்கள் இரகசியமாக அண்ணலாரைச் சந்தித்து அவரின் திருக்கரத்தில் சத்தியப் பிரமாணம் செய்து இஸ்லாத்தை ஏற்றார்கள். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த இந்த முக்கியமான நிகழ்ச்சியில் முக்கியமான சில ஒப்பந்தங்கள் எடுக்கப்பட்டன.அந்த ஒப்பந்தங்களில் மனிதனின் மானம்மரியாதை குறித்தும் பேசப்பட்டது உயிருக்கு ஆபத்தான இக்கட்டான நேரத்தில் கூட நபிகளார் மனிதனின் மானம் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளார்கள் என்றால் மனிதனின் மானம் எவ்வளவு பெருமானம் மிக்கது என்பதையே காட்டுகின்றது.
இதை புகாரியில் பதிவாகியுள்ள பின்வரும் செய்தி உணர்த்துகின்றது                                                        
பத்ருப்போரில் கலந்து கொண்டவரும் இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர் களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்கஇ அல்லாஹ்வுக்கு எதையும் (எவரையும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும்இ திருட மாட்டீர்கள் என்றும்இ விபசாரம் புரியமாட் டீர்கள் என்றும் உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும்இ நீங்களாக அவதூறு எதனையும் புனைந்து கொண்டு வரமாட்டீர்கள் என்றும்இ எந்த நல்ல காரியத் திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்கரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்துஇ அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக்கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனுமொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலகவாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்ற சொன்னார்கள்.உடனே நாங்கள் அவற்றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.
பார்க்க: புஹாரி :18

இன்ஷா அல்லாஹ் வளரும்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger