Sunday, July 17, 2011இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாதத்தை போதிக்கின்றன”. முஸ்லீம்களை மீண்டும் சீண்டியது லக்பிம நியுஸ் ஆங்கில நாளேடு வன்மையாக கண்டிக்கிறது SLTJபல் சமூகத்தவர்களும் வாழும் இலங்கைத் திருநாட்டில் சமூகங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளை உண்டாக்கும் நோக்கில் சில கீழ்த்தரமான எண்ணங் கொண்டவர்கள் செயல்படுகிறார்கள்.அதில் முதல் இடத்தை ரியாஸ் சாலி (ஆசாத் சாலியில் சகோதரரும் கொழும்பு தெவடகஹ தர்காவின் ட்ரஸ்ட்டியும் ஆவார்) தான் பெருவார் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
அல்லாஹ்வை வணங்குவதை விட்டு விட்டு கப்ரில் அடக்கப்பட்டுள்ள மரணித்தவர்களை வணங்கும் கொள்கையை கொண்ட ரியால் சாலி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லக்பிம நியுஸ் ஆங்கில நாளேட்டில் Wahhabist terriorist traing in srilanka? THE ISSUES என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டார்.
அந்தக் கட்டுரையில் இலங்கையில் வெளிநாட்டுப் பணத்தின் உதவியுடன் இயங்கும் இஸ்லாமிய அமைப்புக்கள் தீவிரவாதத்தைப் போதிப்பதாகவும், குறிப்பிட்ட அமைப்புக்களின் பெயர்களை குறிப்பிட்டு அந்த அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அந்தச் செய்தி வெளியிடப்பட்டவுடன் களத்தில் இறங்கில ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அதற்கெதிராக லக்பிம நியுஸ் ஆங்கில நாளேட்டிற்கு தனது கண்டனத்தை தெரிவித்து பதில் கொடுத்ததும், அந்த பதிலை லக்பிம நியுஸ் பத்திரிக்கை பிரசுரம் செய்து மன்னிப்புக் கேட்டதும் நாம் அறிந்ததே!
லக்பிம நாளேடு வெளியிட்ட நமது மறுப்பைப் பார்க்க இங்கு க்லிக் செய்யுங்கள்.
அதைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சகோதரரும் பாதுகாப்பு செயலருமான கோத்தபே ராஜபக்ஷ அவர்களும் இலங்கையில் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இயங்கவில்லை என்ற தகவலைப் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஆரம்பித்த ரியாஸ் சாலி.
பாம்பு தனது விஷத்தைக் கக்குவது போல் ரியாஸ் சாலி மீண்டும் தனது தர்காவின் விசுவாசத்தையும், தவ்ஹீத் எதிர்ப்பு சிந்தனையையும் தீவிரவாதத்தின் பெயரில் லக்பிம நியுஸ் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார்.
Funds received by Muslim religious organizations from foreign donors should be monitored, said Reyyaz Salley of the Islamic Solidarity Front of North America. He added that this should be done to address a growing number of extremist organizations that threaten to disrupt the peaceful co-existence between Muslim and Sinhalese communities.
“There are men who receive large amounts of money from these foreign groups. Some of these men serve state institutions. The president needs to look at this issue in the light of recent incidents in Kathankudi and Beruwala,” Salley.
Salley went on to say that certain Muslim ministers have influenced the appointment of the Waqf Board members by the Department of Muslim Religious and Cultural Affairs, adding that these members have a history of extremism.
“If this department comes under the purview ofthe president such extremism will not take place. These people are trying to spread a new branch of Islam that we should counter,” he said.
வெளிநாட்டவரிடமிருந்து நிதிகளைப் பெறும் முஸ்லிம் நிறுவனங்கள் இலங்கையில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையிலான சமாதான வாழ்வுக்கு தடையாக இருப்பதாகவும் இவ்வாறான தீவிரவாத அமைப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்இந்தக் குழுக்கள் வெளிநாட்டவரிடமிருந்து அதிகமான பணத்தைப் பெற்றுக் கொள்கின்றன.
இந்த அமைப்புகளில் உள்ள சிலர் அரசாங்க நிறுவனங்களிலும் அங்கம் வகிக்கிறார்கள். அண்மைக் காலங்களில் காத்தான்குடி மற்றும் பேருவளை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற சம்பவங்கள் இதன் பின்னணியிலேயாகும். இதுபற்றி ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்”.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழியங்கும் வக்பு சபைக்கான நிர்வாகிகளை நியமிப்பதில் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையீடுகளை மேற்கொண்டுள்ளனர். இதில் நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் தீவிரவாத பின்புலத்தைக் கொண்டவர்கள்.
முஸ்லிம் சமய திணைக்களத்தின் நடவடிக்கைகள் ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டால் இவ்வாறான தீவிரவாத நடவடிக்கைகள் இடம்பெறமாட்டாது. இந்தக் குழுவினர் இஸ்லாத்தில் புதிய பிரிவு ஒன்றை ஏற்படுத்தி அதனைப் பரவலாக்கம் செய்ய முயற்சித்து வருகின்றனர் என்றும் ரியாஸ் சாலி குறிப்பிட்டுள்ளதாக லக்பிம நியூஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையில் பல இஸ்லாமிய அமைப்புகள் செயல்படுகின்றன அந்த அமைப்புகளில் பல அமைப்புகள் வெளிநாட்டு நிதி நிறுவனங்களில் இருந்து பணம் பெற்று இலங்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்படி வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து பணம் பெற்று செயல்படும் அமைப்புகளில் I.I.RO,  SHABAB,  J.A.S.M,  ACTJ போன்றவை குறிப்பிடத் தக்கவைகளாகும்.
(நமது SLTJ அமைப்பைப் பொருத்த வரையில் எந்தக் காரணம் கொண்டும் வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொள்வதில்லை என்ற கொள்கையில் இயங்குவது அனைவரும் அறிந்ததே!)
இவைகள் தவிர தவ்ஹீத் அமைப்புகள் அல்லாத இன்ன பிற அமைப்புகளுக்கும் வெளிநாட்டு உதவிகள் கிடைக்கவே செய்கின்றன.
இப்படி வெளிநாட்டு பண உதவியைப் பெற்றுக் கொள்ளும் இலங்கை இஸ்லாமிய அமைப்புகள் அந்தப் பணத்தின் மூலம் கினறு தோண்டுதல், பள்ளி கட்டுதல், போன்ற செயல்பாடுகளைத் தான் முன்னெடுத்து வருகின்றார்களே தவிர தீவிரவாதத்திற்கும் இந்த அமைப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது நாடறிந்த உண்மை.
ரியாஸ் சாலியின் உள் நோக்கம் என்ன?
இந்த இயக்கங்களை தீவிரவாதத்துடன் தொடர்பு படுத்தி ரியாஸ் சாலி அடிக்கடி எழுதுவதற்கான காரணம் என்ன? என்பது அனைவரினதும் உள்ளத்தில் உள்ள கேள்வியாகும்.
அதாவது என்றைக்கு இலங்கை திருநாட்டிட்குள் தவ்ஹீத் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டதோ அன்றைக்கே ரியாஸ் சாலி போன்றவர்களின் அடி வயிறு ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது.
மரணித்தவர்களின் பெயரால் ஏமாற்றிப் பிழைத்து வந்தார்கள்.
ஏகத்துவப் பிரச்சாரம் அவர்களின் வருமானத்திற்கு தடையாக வந்தது. ஆரம்ப காலத்தில் தெவட கஹ தர்காவுக்கு செல்பவர்களின் நான்கில் ஒரு மடங்கினர் கூட தற்போது போவதில்லை. அதனால் அவர்களுக்கு வருமானம் கிடைப்பதும் இல்லை.
இந்த கோபத்தை தனித்துக் கொள்வதற்காக மனதைத் தேற்றிக் கொள்வதற்காகத் தான் இந்த வெளிநாட்டுப் பணத்தை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்துகிறார் ரியாஸ் சாலி.
SLTJ யின் கண்டனம்.
ஏற்கனவே ரியாஸ் சாலி இப்படிப்பட்ட செய்தி ஒன்றை வெளியிட்டதையும் அதற்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் மறுப்புக் கொடுத்ததையும், லக்பிம நியுஸ் பத்திரிக்கையே அதனை வெளியிட்டதையும் நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால் மீண்டும் மீண்டும் ரியாஸ் சாலி அதையே எழுதுவதையும், லக்பிம நியுஸ் பிரசுரிப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இப்படி தனது இஷ்டத்திற்கு கதையளக்கும் ரியாஸ் சாலியையும், அதற்கு இடம் கொடுக்கும் லக்பிம நியுஸ் பத்திரிக்கையையும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வன்மையாக கண்டிக்கிறது.
இந்த பத்திரிக்கை செய்தி தொடர்பாக ஜமாத்தின் நிர்வாகக் குழு ஒன்று கூடி முடிவெடுத்த பின் மேலதிக் தகவல்கள் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger