ஷீஆக்களின்
சீர் கெட்ட கொள்கைகள் (05)
அரபு மூலம்:
அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் :
முஹம்மது கைஸான் (தத்பீகி
நபித் தோழர்கள் விடயத்தில் ராபிழாக்களின் நிலை
அல்லாஹ் பொருந்திக்கொண்ட நபித் தோழர்களை ஏசியும்,காபிர்கள் என்றும் உசூலுல் காபி என்ற நுர்லில் அல் குலைனி என்பவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.
ஜஃபர் அவர்கள் கூறுகிறார்கள்: நபித் தோழர்களில் நபியவர்களிடம் மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மதம் மாறியவர்களே. அம்மூவரும் யார் என வினவப்பட்டது.
அதற்கவர்:
01.மிக்தாத் இப்னு அஸ்வத்
02. அபூதர் அல்கிபாரி
03. சல்மானுல் பாரிஸி என்றார்.
பிகாருல் அன்வார் எனும் நுர்லில் மஜ்லிஸி என்பவர் குறிப்பிடும் போது, அலி பின் ஹுஸைன் என்பவரின் அடிமை கூறுகிறார். நான் சில நேரங்கள் அவருடன் தனிமையில் இருந்த வேளை அவரிடம், 'நீங்கள் ஏன்? அபூபக்கர், உமர் இருவரையும் கொலைசெய்ய வேண்டும் என்கிறீர்கள்? என்று கேட்டேன்.
அதற்கு அவர், அவ்விருவரும் காபிர்கள், அவ்விருவரையும் நேசிப்பவர்களும் காபிர்களே.' என்றார்.
ஹம்ஸது தமாலி என்பவர் அலி பின் ஹுஸைன் என்பவரிடம் அபூபக்கர், உமர் பற்றி வினவினார். அதற்கு அவர் அவ்விருவரும் காபிர்களே, அவர்களை பதவியில் அமர்த்தியவர்களும் காபிர்களே!' என்றார்