Sunday, October 23, 2011

நாவின் விபரீதங்கள் (01)




       முஹம்மது கைஸான் (தத்பீகி)

மனிதனது உடல் உறுப்புக்கள் யாவும் இறைவனால் அவனுக்கு வழங்கப்பட்ட மாபெரும் அருட் பேராகும்.சிந்திப்பதற்கு மூளை எண்னுவதற்க்கு இதையம் பேசுவதற்கு நாவு கேட்பதற்கு காது பார்ப்பதற்க்கு கண்கள் நடப்பதற்;கு கால்கள் பணி செய்ய கைகள் என பல் வேறு உறுப்புக்களை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான்.

இவ்வுறுப்புக்கள் அனைத்தும் இறைவனுக்குறியவை. இறைவனே இவற்றின் உரிமையாளன்.இறைவனின் பேரருளால்தான் இவைகள் நமக்கு கிடைத்துள்ளன என நாம் ஒவ்வொறுவரும் உணர கடமைப்பட்டுள்ளோம்.


எனவே இந்த உறுப்புக்களின் உரிமையாளனுக்கு உகந்ததாக அவற்றைப் பாவிப்பதும் அவனுக்கு இகந்ததாக பாவிக்காமல் இருப்பதுமே நாம் அவனுக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.இறைவன் அருளிய உறுப்புக்களைக் கொண்டு இறைவனுக்கே விரோதமாக செயல்படுவது எவ்வளவு பெரிய வன்குற்றம் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.

இந்த வகையில் இறைவன் நமக்கு நாவெனும் உறுப்பை வழங்கி கால்நடைகளில் இருந்து எம்மை வேறுபடுத்தி தனித்து விளங்கச் செய்துள்ளான்.நாம் பார்த்து மகிழ்ந்ததை கேட்டு ரசித்ததை உண்டு சுவைத்ததை நுகர்ந்து அறிந்ததை சிந்தித்து விளங்கியதை என எல்லாவற்றையும் பிறரிடம் பகிர்ந்து கொள்ள உதவுவது எமது நாவுதான்.

மனிதனின் உறுப்புக்களில் தனி அந்தஸ்தைப் பிடிக்கும் நாவு இரு முணை கொண்ட ஒரு வாளுக்கு சமமானது எனலாம். நாவு மனித உறுப்புக்களில் பயங்கரமானது அதை கையாளவேண்டிய விதத்தில் கையாள வேண்டும்.இல்லாவிட்டால் இது சுவர்க்கத்திற்கு பதிலாக நரகப் படுகுழிக்கு கொண்டு சென்று விடும்.

இறைவனை தியானித்தல் குர்ஆனை ஓதுதல் அசத்தியத்துக்கெதிராக குரல்கொடுத்தல் சத்தியத்தை ஓங்கச் செய்தல் நீதியை நிலை நாட்டல் அநீதியைத் தட்டிக்கேட்டல் கணிவான வார்தைகளைப் பேசி பாதிக்கப்பட்டவனை ஆறுதல் படுத்துதல் போன்ற இறைவனுக்கு உவப்பான நற்கருமங்களில் நாவை நாம் பயன்படுத்தினால் அது நமக்கு அருளாக ஆகி விடுகின்றது.

புறம் பேசுதல் கோள் சொல்லுதல் பொய் பேசுதல் அவதூறு சொல்லுதல் பொய் சாட்சி சொல்லுதல் செய்த உதவியை சொல்லிக் காட்டுதல் சபித்தல் இறந்தவர்களை ஏசுதல் காலத்தைத் திட்டுதல் போன்ற இறைவனுக்கு வெறுப்பான தீயகாரியங்களில் நாவை நாம் பயன்படுத்தினால் அது நமக்கு மருளாக மாறி விடுகின்றது.

எனவே மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக திகழும் நாவின் விபரீதங்கள் குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும்.

எல்லைக் கொட்டினால் பொறுக்கி விடலாம் சொல்லைக் கொட்டினால் பொறுக்கி விட முடியுமா?

விட்ட அம்பையும் பேசிய சொல்லையும் மீளப் பெற முடியாது


முள்ளால் பட்ட காயம் விரைவில் மாறும் சொல்லால் பட்ட காயம் மாறாது

 உண்மை வீட்டை விட்டுப் புறப்பட முன் பொய் உலகைச் சுத்தி வந்து விடும்


என்றெல்லாம் நாவின் அவலங்களை படம் பிடித்துக் காட்டும் பழமொழிகள் சமுதாயத்தில் நிறையவே நடமாடுகின்றன.

நாவை கட்டுப்படுத்துவதின் அவசியத்தை யதார்த்த ரீதியாக  இவ்வரிகள் உணர்த்துகின்றன.

நாவைப் பேனுவதின் அவசியத்தை மனிதன் அனுபவ ரீதியாக உணர்ந்த போதும் தன் நாவை பயனற்ற வழிகளிலேயே  பயன்படுத்துகின்றான். இதை உணர்ந்த இஸ்லாம் ஆண்மீக ரீதியில் அவனுக்கு நற் போதனைகளை வழங்கி அவனது நாவுக்கு கட்டுப்பாடு விதிக்கின்றது.

எனவே குர்ஆனிலும் சுன்னாவிலும் நாவைப் பேணுவதின் அவசியம் குறித்து வந்துள்ள சில உண்மைகளையும் நல்ல பேச்சுக்களால் கிடைக்கும் நன்மைகளையும் உங்கள் கவனத்திற்க்கும் சிந்தனைக்கும் கொண்டு வருவது இந்த தலைப்பை மேலும் மெருகூட்டும் என நினைக்கின்றேன்.


  இன்ஷா அல்லாஹ் வளரும்

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger