ஷீஆக்களின்சீர் கெட்ட கொள்கைகள் (06)
அரபு மூலம்:
அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம்
முஹம்மது கைஸான் (தத்பீகி)
யூதர்களுக்கும் ராபிழாக்களுக்குமிடையே உள்ள ஒற்றுமைகள்
ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகையில், 'யூதர்கள் சொன்னார்கள் ஆட்சி, அதிகாரம் என்பன தாவுத் நபியுடைய குடும்பத்திற்குச் சொந்தமானது. அதேபோல், ராபிழாக்கள் சொன்னார்கள் இமாம் அலியுடைய பரம்பரைக்கே ஆட்சி சொந்தமானது ராபிழாக்கள் யூதர்களுடைய வேலையைச் செய்வதே அதற்குரிய அத்தாட்சியாக உள்ளது.
யூதர்கள் தஜ்ஜால் வெளிப்படாதவரை ஜிஹாது இல்லை என்றனர். மேலும் அவர்கள் சந்திரன் மறையும் வரை தொழுகையைப் பிற்படுத்தினார்கள்.அவ்வாறே ராபிழாக்களும் சந்திரன் மறையும் வரை மஃரிபை பிற்படுத்தினார்கள்.
'மஃரிப் தொழுகையை பிற்படுத்தாத வரை எனது உம்மத் இயற்கை இஸ்லாதிலே இருப்பார்கள். நட்சத்திரம் ஒன்றோடு ஒன்று ஒன்றும் வரை யார் மஃரிபை பிற்படுத்தவில்லையோ, அவர் இயற்கை மார்க்கத்தில் உள்ளார். (அஹ்மத் - 146ஃ4)
யூதர்கள் தௌராத்தை திரிவுபடுத்தினர். ராபிழாக்கள் குர்ஆனை திரிபுபடுத்தினர்.யூதர்கள் காலுறையின் மீது மஸ்ஹு செய்யமாட்டார்கள். அவ்வாறே ராபிழாக்களும் செய்வார்கள்.
யூதர்கள், ஜிப்ரீலுடன் கோபப்படுகின்றனர். 'ஜிப்ரீல் எனும் மலக்கு எமது பகைவர் ஆவார் என்கின்றனர்.' அவ்வாறே ராபிழாக்களும், 'முஹம்மதுக்கு ஜிப்ரீல் வஹியைத் தவறாகக் கொடுத்துவிட்டார்' என்கிறார்கள்.
கிறிஸ்தவர்களின் மார்க்க விடயத்திலும் ராபிழாக்கள் ஒத்துப்போகிறார்கள். கிறிஸ்தவர்கள் தங்கள் பெண்களை மஹர் இன்றி குறிப்பிட்ட தவணைக்குத் திருமணம் செய்கின்றனர். அவ்வாறே, ராபிழாக்களும் 'முத்ஆ' எனும் வாடகைத் திருமணத்தை ஹலாலாக்கியுள்ளனர்.
ராபிழாக்களை விட இரண்டு விடயங்களில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் மேல் நிலையில் உள்ளனர். யூதர்களிடம் உங்கள் மதத்தில் சிறந்தவர் யார்? என கேட்கப்பட்டதற்கு, 'மூஸாவின் தோழர்கள் என்றனர். 'கிறிஸ்தவர்களிடம் உங்கள் மதத்தில் சிறந்தவர் யார்? என கேட்கப்பட்டதற்கு, 'ஈஸாவின் சீடர்கள்' என்றனர். ராபிழாக்களிடம் உங்கள் மதத்தில் மிக மோசமானவர்கள் யார்? எனக் கேட்கப்பட்டதற்கு 'முஹம்மதின் தோழர்கள்'என்றனர்.
ராபிழாக்கள், யூதர்களுக்கு ஒத்துப்போகும் விதத்தைக் குறிப்பிடும் போது, 'யூதர்களும் ராபிழாக்களும் அடுத்தவர்களைக் காபிர்கள் என சொல்வதோடு, அவர்களைக் கொலை செய்து விட்டு, அவர்களின் சொத்துக்களை ஹலால் ஆக்கிக் கொள்ளலாம் என்கின்றனர் என அப்துல்லாஹ் அல் ஜுமைலி என்பர்
பத்லுல் மஜ்ஹூத்; பீ முஷாபகதிர் ராபிழா லில்யஹூத்' என்ற கிதாபில் குறிப்பிடுகிறார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடும் போது, 'யூதர்கள் மனிதர்களை இரு வகைப்படுத்துகின்றனர்.
01.யூதர்கள்
02.உமமியூன்கள்
உமமீயூன் என்போர் யூதர்கள் தவிர்ந்த ஏனயோர். யூதர்கள் தங்களை மாத்திரம் தான் முஃமின்கள் என நம்புகின்றனர்.
யூதர்களிடம், உமமியூன்கள் என்போர் 'நிராகரிப்பாளர்கள், உருவ வழிபாடுடையவர்கள், அவ்வாஹ்வை அறியாதவர்கள்.
'தல்மூத்' எனும் கிரந்தத்தில் 'யூதர்களைத் தவிர உள்ள அனைவரும் உருவ வழிபாடு உடையவர்கள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தவப் பாதிரியார்களின் கருத்துக்களும் இதை ஒத்ததாக இருக்கின்றன.. ஈஸா (அலை) அவர்களையும் யூதர்களின் இந்நூல் காபிர் என்கிறது.
ராபிழாக்கள், தாங்கள் மாத்திரம்தான் முஸ்லிம்கள். தங்களைத் தவிரவுள்ள முஸ்லிம்கள் அனைவரும் மதம் மாறியவர்கள். அவர்களுக்கு இஸ்லாத்தில் எந்த பங்குமில்லை' என்கின்றனர்.
ராபிழாக்கள் முஸ்லிம்களைக் காபிர்கள் என்பதற்குக் காரணம், அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான விலாயத்தை நம்ப மறுப்பதே ஆகும். ஒரு விடயத்தை இஸ்லாத்தில் உறுதிப்படுத்த இரண்டு சாட்சிகள் கொண்டுவராதவர், தொழுகையை விட்டவர் எப்படியோ, அதே போன்றுதான் விலாயத்தை நம்பாதவர்கள் அனைவரும் காபிர்களே. விலாயத் என்பது இஸ்லாத்தின் ஏனைய அடிப்படை அம்சங்களைவிட முற்படுத்தவேண்டியதொன்றாகும் என ராபிழாக்கள் நம்புகின்றனர்.
'இப்றாஹீமுடைய மார்க்கத்தில் எங்களையும், எங்கள் கூட்டத்தினரையும் தவிர ஏனை மக்கள் அனைவரும் அம்மார்கத்திலிருந்து நீங்கியவர்களே' என அப்துல்லாஹ் சொன்னதாக பக்ரி என்பவர் குறிப்பிடுகிறார்.
அதேபோல், குமி என்ற தப்ஸீரில் 'இஸ்லாமிய மார்க்கம் மறுமை வரை எங்களையும்,அவர்களையும் (ஷீஆக்களையும் தவிர வேறுயாருக்குமில்லை' என்று அபூ அப்துல்லாஹ் கூறுகின்றார்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !