ஷீஆக்களின்சீர் கெட்ட கொள்கைகள் (07)
அரபு மூலம்:
அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம்
முஹம்மது கைஸான் (தத்பீகி)
இமாமிய்யா பற்றி ராபிழாக்களின் நிலைப்பாடு
தங்கள் இமாம்கள் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள், மறைவானவற்றையும் அறிகின்றவர்கள் என ராபிழாக்கள் நம்புகின்றனர்.
'உஸுலுல் காபி' எனும் நூலில் 'இமாம்கள் தாம் விரும்பினால் எதையும் அறிவார்கள்' என்ற தலைப்பில் குலைனி என்பவர், 'இமாம்கள் தாம் அறிந்துகொள்ள விரும்பினால் அறிவர்கள். தாம் எப்போது மரணிப்போம் என்பதையும் அறிவதோடு, அவர்களின் விருப்பமின்றி மரணிக்கவும் மாட்டார்கள் என்று குறிப்பிடுகிறார்.
'தஹ்ரீருல் வஸீலா' எனும் நூலில் குமைனி என்பவர் 'இமாம்களுக்கு புகழப்பட்ட இடமும், உயர்ந்த அந்தஸ்தும், உலக அணுக்கள் உட்பட அனைத்தையும் அதிகாரத்தின் கீழ் வைத்துக்கொள்ளும் ஆட்சியும் உண்டு' என்கிறார்.
அத்தோடு, '12 இமாம்களான எங்களுக்கு மலக்கோ, நபியோ அல்லாஹ்வுடன் வைத்துக்கொள்ள முடியாத உறவு உண்டு' என்றும் அதில் குறிப்பிடுகிறார்.
ராபிழாக்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உட்பட ஏனைய அனைத்து நபிமார்களை விடவும் தங்கள் இமாம்களை உயர்த்திப் பேசும் நிலைக்கு ஆளாகியுள்ளார்கள்.
'மிர்ஆத்துல் உகூல்' என்ற நூலின் ஆசிரியர் மஜ்லிஸீ என்பவர், 'முஹம்மது (ஸல்) அவர்களைத் தவிர உள்ள ஏனைய அனைத்து நபிமார்களையும் விட ஷீஆ இமாம்கள் சிறப்பானவர்கள்' என்கிறார்.
ராபிழாக்களின் எல்லை மீறிய புகழ் இத்தோடு நிற்க வில்லை.படைக்கும் ஆற்றலையும் தமது இமாம்களுக்குக் கொடுத்துள்ளனர் .
'மிஸ்பாஹுல் பகாஹா' எனும் நூலின் ஆசிரியர் ஹவ்யிஈ என்பவர் ' இமாம்கள் படைப்புக்கள் அனைவரையும் அதிகாரம் செலுத்தும் தன்மையில் உள்ளனர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. காரணம் அப்படைப்புக்களை உண்டாக்குவதற்கு அவர்களே காரண கர்த்தாக்களாவர்.
அவர்கள் இல்லையெனில் மனிதர்கள் படைக்கப்பட்டிருக்கமாட்டார்கள். அவர்களுக்காகவே மனிதர்கள் படைக்கப்பட்டுள்ளார்கள். அல்லாஹ்வைத் தவிர இப்பூலோக அதிகாரத்திற்கு அவர்களே ஊன்றுகோலாக உள்ளனர்.இந்த விலாயத் அல்லாஹ்வின் படைப்புக்கள் மீது கொண்டுள்ள விலாயத்திற்கு ஒப்பானதாகும்.
இத்திறிபுபடுத்துதல் எல்லை மீறிய செயலை விட்டும் நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோம்.
படைப்புக்களை உண்டாக்குவதற்கு இமாம்கள் எப்படி உதவியாக இருக்க முடியும்?.இமாம்கள் தான் காரணம் என்று எப்படி சொல்லமுடியும்?
இமாம்களுக்காக மனிதர்கள் படைக்கப்படவில்லை என்று அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிட்டுள்ளான்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْأِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ (الذاريات: 56 )
'ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை'
(அல் குர்ஆன் 51:56)
என்று குறிப்பிடுகின்றான்.
அல் குர்ஆனையும், சுன்னாவையும் விட்டு மிகத் தூரமான இந்த கேடு கெட்ட கொள்கையை விட்டும் அல்லாஹ்விடம் நாம் பாதுகாப்புத்தேட வேண்டும்.
'இமாம்கள் ஹலாலாக்கியவை அனைத்தும் ஹலால், இமாம்கள் ஹராமாக்கியவை அனைத்தும் ஹராம், இமாம்கள் சொன்னவைகளே மார்க்கம் என ராபிழாக்கள் நினைக்கின்றனர்' என இமாம் இப்னு தையிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சகோதரர்களே!
இவர்களின் எல்லை மீறிய இணைவைப்பையும், நிராகரிப்பையும் நீங்கள் பார்க்க விரும்பினால் அலி (ரழி) பற்றி அவர்களின் சமகால அறிஞர் இப்றாஹீம் அல் ஆமிலி என்பவன் பாடியுள்ள பின்வரும் பாடல்களை வாசித்துப்பாருங்கள்.
அபுல் ஹசனே!
நீ தான் கடவுள்
உயர்ந்த அவன் வல்லமையின் முகவரி
நீ தான் மறைவான ஞானங்களை சூழ்ந்தவன்
உன்னை விட்டும் எதுவும் மறையாது.
நீ தான் இவ்வுலக ஓட்டத்தின் நாயகன்
உயர்ந்த இவ்வுலகின் அலங்காரங்களும் உனக்குத்தான்
அதிகாரம் உன் கையில்
நீ விரும்பினால்தான் நாளை உதயம்
நீ விரும்பினால் முன் நெற்றியால் பிடிப்பாய்.
அலி (ரழி) அவர்கள் பற்றி அலி பின் சுலைமான் அல் மசீதி என்பவன் பாடிய பாட்டு
அபுல் ஹஸனே நீதான் பாத்திமாவின் கணவன்
கடவுளின் விலாவும் தூதரின் மூச்சும் நீதான்
நீதான் பூரண சந்திரனும்,அறிவும் ஒளியும்.
கடவுளின் உடமையும்,அரசனும் நீதான்
சோகமான தினத்தில் நபி அழைத்தவர் நீதான்
துரோகியைப் (அபூபக்கர்) பற்றி உனக்குச் சொன்னவர்
நீர்தான் முஃமின்களின் தலைவர்
அதிகாரம் உனக்குஅணிவிக்கப்பட்டுள்ளது
எல்லாம் உன்னாலே நடக்கிறது
கப்ரில் உள்ளவர்களை எழுப்புபவனும் நீதான்
மறுமையின் தீர்ப்புக்குச் சொந்தக்காரனும் நீதான்
நீதான் உள்ளங்களை அறிந்தவன்
நீ பார்ப்பவன்
நீ கேட்பவன்
நீ எல்லாவற்றுக்கும் ஆற்றல் பெற்றவன்
நீ இல்லையென்றால்
ஓடும் நட்சத்திரங்கள் இல்லை
பூலோகம் உன்னை தலைவராக ஆக்காவிட்டால்
எந்த வீடும் இல்லை
நீ எல்லா நிரபராதிகளையும் அறிந்தவன்
குகைவாசிகளுடன் பேசியவனும் நீயே
நீ இல்லையேல் மூஸா கலீம் இல்லை
உன்னைப் படைத்தவன் தூய்மையாகி விட்டான்
இவ்வுலகில் உனது பெயரின் ரகசியம் காப்பாய்
உன்னை நேசிப்பது நெற்றிமேல் சூரியன் இருப்பது போல்
கோபப்படுபவர்களின் முகத்தில் உனது கோபம் கரியைப் போன்றது
உன்னை நிந்தித்தவன் வெற்றியடையமாட்டான்
எது நடந்தாலும்
எது நடக்க இருந்தாலும்
நபியென்ன? ரஸுல் என்ன?
எழுதுகோலென்ன? ஏடு என்ன?
உலகத்தார்கள் என்ன?
எல்லாம் உனக்கு அடிமைகளே!
அபுல் ஹஸனே!
உண்டு பண்ணுபவனே!!
மலர்கள் பூக்கும் நாளில்
உன் அன்பை பொழிபவன்
உன்னை நிராகரித்தவன்
மறுமையில் நிராகரிக்கப்படுவான்
அபுல் ஹஸனே!
பெருமைக்குரியவனே!!
எனக்கு நீ இல்லையேல் நான் ஒளியில்லாதவன்
எனக்கு உனது பெயர்
கடல் சந்திக்கும் இடமாகும்
உன்னை நான் விரும்புவது
என்னை சுவர்க்கம் செலுத்தும்
உனக்கு அதிகமான நண்பர்கள் உண்டு
இறைவன் கட்டளையிட்டால்
பிரயாணிகளே பிரயாணிகளே என அழைக்கப்படும்
உனக்கு உதவி செய்தவனை விட்டு விடாதே!
இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒரு முஸ்லிம் இப்படிப்பட்ட பாடல்களை படிப்பானா? இறைவன் மீது ஆணையாக ஜாஹிலிய்யா மக்கள் விழாத இணைவைப்பிலும், நிராகரிப்பிலும், எல்லை மீறலிலும் அழிந்து போன ராபிழாக்கள் விழுந்துள்ளனர்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !