Thursday, October 13, 2011


ஷீஆக்களின்சீர் கெட்ட கொள்கைகள் (08)



அரபு மூலம்:

அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி

தமிழாக்கம் 
    முஹம்மது கைஸான் (தத்பீகி)


மரணித்தவர்களின் மீள் வருகை பற்றி ராபிழாக்களின் நம்பிக்கை


'ரஜ்இய்யா' என்ற கோட்பாட்டை முதன் முதலில் உருவாக்கியவர்கள் ராபிழாக்களே ஆவர்.   'மரணித்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள்' என இமாமிய்யாக்கள் நம்புகின்றனர் என முபீத் என்பவர் கூறுகிறார்.

அவர்களின் இறுதி இமாம் காயிம் என்பர் குகையிலிருந்து உலக முடிவின் போது வெளியாகி வருவார் என்றும் அவர் எல்லா அரசியல் எதிரிகளையும் பழிதீர்ப்பார் என்றும் வரலாற்று நெடுகிலும் பறிக்கப்பட்ட ஷீஆக்களின் உரிமைகளை அவர்களுக்கு மீளப் பெற்றுக் கொடுப்பார் என நம்புகின்றனர்.

'அபூபக்கர், உமர் ஆகியோர் மஹ்தியின் காலத்தில் மரத்தில் அறையப்படுவார்கள். அறைவதற்கு முன் பசுமையாக இருந்த மரம் அறைந்த பின் காய்ந்து விடும்' என்று 'அல்மஸாயிலுன் நாஸிரிய்யா' என்ற தனது நூலில் முர்தழா என்பவர் எழுதுகின்றார்.

'மஹ்தி (அலை) தோன்றியவுடன் ஆயிஷா (ரழி) எழுப்பப்பட்டு, ஹத் - தண்டனை நிறைவேற்றப்படும்' என்று 'ஹக்குல் யகீன்' எனும் நூலில் முஹம்மது பாகிர் சொன்னதாக மஜ்லிஸி என்பவர் எழுதுகிறார்.


'ரஜ்இய்யா' பற்றிய கருத்துக்கள் வளர்ச்சியுற்றுள்ளன. 'ஷீஆக்களும் அவர்களது இமாம்களும், அவ்விமாம்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டவர்களும் மீண்டும் எழும்புவார்கள்'  என்று நம்புகின்றனர். இது போன்ற அவர்களின் மூட நம்பிக்கைகள்,  அவர்களின் மறைவான குரோதத்தை வெளிப்படுத்துகிறது.

 மறுமை வாழ்க்கையை நிராகரிப்பதற்கு சபஇய்யாக்கள் கைக்கொண்ட வழிமுறைகளைத் துணையாக இவர்கள் கொண்டுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.

'ரஜ்இய்யா' என்பது ஷீஆக்களுடன் தர்க்கித்தவர்கள் மீள்வருதல் என்றால், ஷீஆக்களுடன் தர்கித்தவர்கள் யார்?


ராபிழாக்கள், அஹ்லுஸ் ஸுன்னாக்களுடன் உள்ள குரோதத்தை, அவர்களின் இந்த நம்பிக்கை தெளிவுபடுத்துகிறது. பிஹாருல் அன்வார் எனும் தனது நூலில் மஜ்லிசி என்பவர், அப்துல்லாஹ் சொன்னதாக சொல்கிறார்:  'காயிம் தனது குடும்பத்தாருடன் சஹ்லா எனும் பள்ளிவாசலில் இறங்குவதை நான் கண்டேன்.அந்த சந்தர்ப்பத்தில் அஹ்லுத் திம்மாக்களின் நிலை என்ன? என்று கேட்டேன.; அதற்கு அவர் நபிகள் எப்படி சமாதானமாக நடந்துகொண்டார்களோ அது போன்று அவரும் நடந்து கொள்வார். அவருக்குக் கட்டுப்பட்டு 'ஜிஸ்யா'வைக் கொடுப்பார்கள் என்றார். அதற்கு நான் 'உங்களுடன் யார் விரோதம் கொண்டுள்ளனர்? என்று கேட்டேன். அதற்கு அவர், எங்களுக்கு யார் மாறுசெய்கிறார்களோ அவர்களுக்கு எமது நாட்டில் எந்தப் பங்கும் கிடையாது. காயிம் என்பவர் வரும் போது, அவர்களின் இரத்தங்கள் எங்களுக்கு ஹலாலாக்கப்படும். தற்போது எங்களுக்கும், உங்களுக்கும் அது தடுக்கப்பட்டுள்ளது. நீ இவை எதையும் மறக்கவேண்டாம். காயிம் வந்தால், அவர் அல்லாஹ்வுக்காகவும், அவனது தூதருக்காகவும், எங்கள் எல்லோருக்காகவும் பலி தீர்ப்பார் என்று கூறினார்.


இஸ்லாமிய சகோதரனே!. ஷீஆக்களின் மஹ்தி என்பவர் யூத கிறிஸ்தவர்களுடன் சமாதானம் செய்வதாகவும், அவர்களுக்கு எதிரான அஹ்லுஸ் ஸுன்னாக்களுடன் போர் புரிவார் என்றும் ஷீஆக்கள் நம்புகின்றனர்.

'யாருடன் பகைத்துக் கொண்டவர்களுக்கு இந்த எச்சரிக்கை' என்று ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு அவர், 'ஒரு போதும் அஹ்லுஸ் ஸுன்னாக்கள், அஹ்லுல் பைத்துக்களை பகைத்துக் கொள்ளவில்லை.  அதனால், மஹ்தியின் முன் இவர்களின் இரத்தம் ஆகுமானதல்ல. இந்த எச்சரிக்கை இவர்களுக்குரியதல்ல என்று கூறினார்.

'நாஸிபா' என்பது அஹ்லுஸ் ஸுன்னாக்களில் ஒரு பகுதியினரைக் குறிக்கும் என்பதை ராபிழாக்களின் அறிவிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன.

இத்தலைப்பில் மேலதிக தகவல்களை பெற ஹுஸைன் ஆல உஸ்பூர் பஹ்ரானியின் (அல் மஹாசினுல் நப்ஸானிய்யா
المحاسن النفسانية ) என்ற நூலையும், யூசுப் பஹ்ரானி என்பவரின் (அஷ்ஷிஹாபுஸ்தாகிபு பீ பாயானி மஃனன் நாசிப்
 الشهاب الثاقب في بيان معنى الناصب) என்ற நூலையும் பார்க்கவும்.

தகிய்யா பற்றிய ராபிழாக்களின் நிலைப்பாடு

தக்கிய்யா பற்றி அவர்களின் சமகால அறிஞர் ஒருவர், 'தனது சொத்து, உயிர், கண்ணியம் போன்றவற்றுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இல்லாததை சொல்வதும் செய்வதும் தகிய்யாவாகும்'  என்று வரைவிலக்கணப்படுத்துகிறார்.

முனாபிக் அப்துல்லாஹ் பின் உபை இப்னு சலூல் மரணித்த போது, நபி அவர்கள் இப்படி நடந்து கொண்டார்கள் என ராபிழாக்கள் குறிப்பிடுகின்றனர். 'அவனுக்கு தொழுகை நடாத்த நபியவர்கள் வந்த போது, உமர் (ரழி) அவர்கள் இறைவன் இதை உங்களுக்கு தடுக்க வில்லையா?' என்று கேட்டார். உடனே நபி அவர்கள், 'உனக்கு நாசம் உண்டாகட்டும்'; 'இறைவா! இவனது வயிற்றை நெருப்பால் நிரப்பு, கப்ரையும் நிரப்பு, அவனை நரகில் சேர்த்துவிடு' என்று நான் பிரார்த்தித்ததை நீர் காணவில்லையா? என நபியவர்கள் மறுப்புத் தெரிவித்ததாக இவர்கள் கூறுகின்றனர்.

இஸ்லாமிய சகோதரனே!
நபியவர்கள் மீது இவர்கள் எப்படி பொய்யை சோடிக்கின்றனர். நபித் தோழர்கள், முனாபிக் மீது  இரக்கம் காட்டியிருப்பார்களா? நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை சபித்தார்களா? இல்லை என்பது தெளிவான சான்றாக உள்ளது.

'அபூ உமரே! இம்மார்க்கத்தில் 9 அம்சங்களுக்கு தகிய்யா உள்ளது. யாருக்கு தகிய்யா இல்லையோ அவருக்கு மார்க்கம் இல்லை. திராட்சை (மதுபானம்), காலுரையின் மீது மஸ்ஹு வெய்தல் ஆகிய இரண்டையும் தவிர மற்ற அனைத்திலும் தகிய்யா உள்ளது என்று உஸுலுல் காபி எனும் நூலில் குலைனி என்பவர், அபூ அப்தில்லாஹ் சொன்னதாக குறிபிடுகிறார்.

மேலும், 'மார்க்கத்தைப் பயந்து கொள்ளுங்கள், தகிய்யாவினூடாக மார்கத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். யாருக்குத் தகிய்யா இல்லையோ, அவருக்கு ஈமான் இல்லை' என்று தொடர்ந்து அவர் குறிப்பிடுகிறார்.


ராபிழாக்கள் தகிய்யாக் கோட்பாடை பயன்படுத்தி, அல்லாஹ் அல்லாதவர்களைக் கொண்டு சத்தியமும் செய்வார்கள்.
இறiவா! இந்த வழிகேடர்களிடமிருந்து எம்மைப் பாதுகாப்பாயாக!

'வஸாயிலுஷ் ஷீஆ' எனும் நூலின் ஆசிரியர் அல்ஹுருல் ஆமிலீயி சொல்கிரார்: 'சில முகங்களை நாம் சந்திக்கிறோம். அவர்கள் எம்மை எமது சொத்துக்களுக்காக பொறுப்பாக்குகின்றனர். நாமே அவர்களின் ஸகாத்தை நிறைவேற்றியுள்ளோம்  அப்போது அவர், சுராராவே! அவர்களை நீ பயந்தால், விரும்பியவாறு சத்தியம் செய். அப்போது, நான் என்னை விடுவிப்பதன் மூலம் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்;றேன். அதற்கு அவர்,  'ஒரு மனிதன் நிர்பந்ததிற்குட்பட்டு தகிய்யாவை அவன் கைக் கொண்டால் அவனின் மீது எந்த குற்றமுமில்லை' என்று அப்துல்லாஹ் சொல்கிறார்.

ராபிழாக்கள் தகிய்யாவை கட்டாயக் கடமையாகப் பார்ப்பதோடு, எந்த மத்ஹபும் அது இன்றி இருக்க முடியாது என்கின்றனர். இரகசியமாகவும், வெளிரங்கமாகவும் அதை  நடை முறைப்;படுத்துகின்றனர். தமக்கு ஒரு கடுமையான நிலை ஏற்பட்டால் தக்கியாவை அவர்கள் சரியாகப் பயன்படுத்துகின்றனர்.

முஸ்லிம்களே!
ராபிழாக்கள் விடயத்தில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்!

இன்ஷா அல்லாஹ் தொடரும்


Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger