ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள் (09)
அரபு மூலம்:
அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம்
முஹம்மது கைஸான் (தத்பீகி)
கர்பலா மண் பற்றி ராபிழாக்களின் நிலைப்பாடு
கர்பலாவிலுள்ள ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ரின் மண்ணையே ராபிழாக்கள் கும்பிடுகின்றனர். அல்மிஸார் எனும் நூலில் ஷெய்குல் முபீத் எனும் முஹம்மது நுஃமான் அல் ஹாரிஸ் என்பவர், அப்துல்லாஹ் சொன்தாக குறிப்பிடுகிறார். 'எல்லா நோய்களுக்கும் ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ரின் மண்ணில் நிவாரணமுள்ளது. அது தான் ஆகப் பெரிய நிவாரணம் ஆகும்.'
'ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ருடைய மண்ணினால் உங்கள் குழந்தைகளை 'தஹ்னீக்' செய்யுங்கள்' என அப்துல்லாஹ் என்பவர் கூறுகிறார்.
'ஹுராஸான் நாட்டிலிருந்து அபூ ஹஸன் ரிழாவுக்கு ஓர் ஆடை அனுப்பப்பட்டது. அதன் இடையிடையே மண் இருந்தது. இது என்ன? என தூதுவரிடம் கேட்கப்பட்டதற்கு, அவர் ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ரின் மண் என்றார். ஆடையோ, வேறு ஏதாவதோ யாருக்காவது கொடுத்தால் அதில் மண்ணை தூவுவார்' என்றார். அதற்கு அவர், 'இது இறைவனின் அனுமதி மூலம் நம்பிக்கைக்குரிய செயலாகும்' என்று கூறினார்.
சாதிக் என்பவரிடம் ஹுஸைன் (ரழி) அவர்களின் கப்ர் மண்ணைப் பயன் படுத்துவது பற்றி ஒரு மனிதர் கேட்டார். அதற்கு அவர் 'நீ பயன்படுத்தும் போது, 'இறைவா! நீ கைப்பற்றிய அரசனின் பொருட்டாலும், கவலைப்பட்ட நபியின் பொருட்டாலும், நபியவர்களின் குடும்பத்தவர்கள் மீது ஸலவாத்து சொல்வதற்குத் தகுதியான வசிய்யத் செய்யப்பட்டவரின் பொருட்டாலும், எல்லா பயன்பாடுகளுக்குப் பாதுகாப்பாகவும், எல்லா கெடுதிகளுக்கும் பாதுகாப்பாகவும் ஆக்கு' என்ற துஆவைக் கேள்' என்றார்;.
அபூ அப்தில்லாஹ்விடம் 'ஹம்ஸா, ஹுஸைன் ஆகியோரின் கப்ர் மண்ணைப் பயன்படுத்துவது பற்றி ஏற்றத்தாழ்வு கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'ஹுஸைனின் கப்ர் மண் தஸ்பீஹ் செய்யாதவனுடைய கையையும் தஸ்பீஹ் செய்ய வைக்கிறது' என்றார்.
ஷீஆக்கள் விஷேட மண்ணாலும், அஹ்லுஸ் ஸுன்னாக்கள் வேறு ஒரு மண்ணாலும் படைக்கப்பட்டுள்ளதாக ராபிழாக்கள் கருதுகின்றனர். குறிப்பிட்ட விதத்தில் இரு மண்களும் கலக்கப்படுகின்றன. ஷீஆக்களிடம் காணப்படும் குற்றச் செயல்கள் ஸுன்னிக்களின் மண்ணினால் ஏற்பட்ட தாக்கமே. ஸுன்னிக்களிடம் காணப்படும் நம்பிக்கை, நேசம், ஷீஆக்களின் மண்ணால் ஏற்பட்ட தாக்கமே. மறுமை நாளில் ஷீஆக்களின் பாவங்கள் அஹ்லுஸ் ஸுன்னாக்களுக்கு கொடுக்கப்படும். அஹ்லுஸ் ஸுன்னாக்களின் நன்மைகள் ஷீஆக்களுக்குக் கொடுக்கப்படும் எனவும் நம்புகின்றனர்.
அஹ்லுஸ் ஸுன்னாக்கள் பற்றி ராபிழாக்களின் நிலை
அஹ்லுஸ் ஸுன்னாக்களின் உயிர்,சொத்து ராபிழாக்களுக்கு 'ஹலால்' என நம்புகின்றனர். 'இலல்' எனும் நுாலில் சதூக் என்பவர் பரகத் என்பவர் கூறுவதாகக் கூறுகிறார். 'நான் அபூ அப்துல்லாஹ்விடம் 'நாசிபுகள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்' என்று கேட்டேன். அதற்கு அவர் 'உன்னைப் பாதுகாத்துக் கொள்! அவர்களின் இரத்தம் ஹலாலாகும். அவர்களைக் கடலில் தள்ளுவதும் ஆகுமானதே என்றார்.
ஏனையவர்களின் பிள்ளைகளை விட தங்கள் பிள்ளைகளை பரிசுத்தவான்களாக ராபிழாக்கள் கருதுகின்றனர். புர்கான் எனும் தப்ஸீரில் ஹாஸிம் அல் பஹ்ரானி என்பவர் ஜஃபர் பின் முஹம்மது சொன்னதாக பின்வரும் விடயத்தைக் குறிப்பிடுகின்கிறார். 'எந்தக்; குழந்தை பிறப்பினும் ஷைத்தான் அதன் அருகில் இருக்கிறான். அக்குழந்தை ஷீஆக் குழந்தை என்பதை அவன் அறிந்தால் ஷைத்தான் அதனைத் தீண்டமாட்டான். ஏனைய குழந்தைகளானால் தனது ஆட்காட்டி விரலை ஆண்குழந்தையின் பின்புறத்திலும்,பெண் குழந்தையாயின் அதன் பிறப்புறுப்பிலும் நுழைப்பான். ஆதனால்,ஆண் குழந்தை ஓர்பால் இன உணர்வுள்ளதாகவும், பெண் குழந்தை விபச்சாரியாகவும் ஆகிவிடும். இதனால் தான் குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியேறும் போது கடுமையாக அழுகின்றது என்கிறார்.
ஷீஆக் குழந்கைதளைத் தவிர ஏனைய மனிதர்கள் அனைவரும் விபச்சாரத்தின் மூலம் பிறந்த குழந்தைகளே என ராபிழாக்கள் கருதுகின்றனர். அர்ரவ்ழா மினல் காபி' எனும் நூலில், குலைனி என்பவர்: அபூ ஜஃபரிடம், 'அபூ ஹம்ஸாவே! எங்கள் தோழர் சிலர் அவர்களுக்கு மாறு செய்தவர்களை ஏசுகின்றார்கள் என்றார். அதற்கு அவர், அதைத் தடுப்பது மிக நன்று. இறைவன் மீது ஆணையாக அபூ ஹம்ஸாவே! 'ஷீஆக்களைத் தவிர ஏனைய மனிதர்கள் விபச்சாரத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற குழந்தைகளே'என்றார்.
யூத,கிறிஸ்தவர்களை நிராகரிப்பதை விட அஹ்லுஸ் ஸுன்னாக்களை ஷீஆ(ராபிழா)க்கள் வெறுக்ககின்றனர்.
யூத,கிறிஸ்தவர்கள் அடிப்படையில் காபிர்கள் ஆவார்கள். அஹ்லுஸ் ஸுன்னாக்கள் மதம் மாறிய காபிர்கள் என ஷீஆக்கள் நினைக்கின்றனர். மதம் மாறிய நிராகரிப்பு கடுமையானது என்று நினைத்து முஸ்லிம்களுக்கு எதிராக காபிர்களுடன் இவர்கள் கைகோர்த்துள்ளார்கள். இதற்கு வரலாறு சான்றுபகர்கிறது.
வஸாயிலுஸ் ஷீஆஎன்ற நுாலில் யசார் சொல்கிறார், 'நான் ராபிழாப் பெண்ணை ஒரு அஹ்லுஸ் ஸுன்னாவை சார்ந்தவனுக்கு திருமணம் முடித்துக் கொடுக்கலாமா?' என்று அபூ ஜஃபரிடம் கேட்டேன், அதற்கு அவர், 'நாசிபுகள் காபிர்களே' என்றார்.
அஹ்லுஸ் ஸுன்னாக்களிடம், 'நாசிபுகள்' என்போர் அலி (ரழி) அவர்களை வெறுப்பவர்களே!. ஆனால், ராபிழாக்கள், அஹ்லுஸ் ஸுன்னாக்களுக்கே 'நாசிபுகள்' என்கின்றனர்.
இவர்கள் அலி (ரழி)யை விட அபூ பக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரின் இமாமத்தை முற்படுத்துவதோடு, நபியவர்கள் காலத்தில் அலியை விட, அபூ பக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரின் சிறப்பையும் முதன்மைப்படுத்துகின்றனர். இதற்குப் பின்வரும் இப்னு உமர் அவர்களின் சொல்லை ஆதாரமாகக் கொள்கின்றனர்.
'நபியவர்கள் காலத்தில் மக்களிடையே நாம் முதன்மை நிலை கொடுப்போம். முதலில் அபூ பக்கரையும், பின் உமரையும், அதன் பின் உஸ்மானையும் முதன்மைப் படுத்துவோம்.' ஆதாரம்(புகாரி)
'நபியவர்கள் இதனை அறிவார்கள். ஆனால், நிராகரிக்க மாட்டார்கள்' என்று தப்ராணியில் மேலதிக வாசகம் உள்ளது.
இப்னு அஸாஹிர் அவர்கள், 'நாம் அபூ பக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) ஆகியோரை முதன்மைப் படுத்துவோம்' என்கிறார்.
அலி (ரழி) கூறியதாக இமாம் அஹ்மத் (ரஹ்) சொல்கிறார்கள் 'நபி அவர்களுக்குப் பின் இந்த சமூகத்தில் சிறந்தவர் அபூ பக்கர் (ரழி), பின் உமர் (ரழி) நீர் நாடினால் மூன்றாமவரையும் பெயர் சொல்' என்றார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !