Friday, August 19, 2011


ஷீஆக்களின்சீர் கெட்ட கொள்கைகள் (04)



அரபு மூலம்:
அறிஞர் அப்துல்லாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் :
முஹம்மது கைஸான் (தத்பீகி)



அல்குர்ஆன் பற்றி ராபிழாக்களின் நம்பிக்கைக் கோட்பாடு

தற்காலத்தில் ஷீஆக்கள் என்று சொல்லப்படக்கூடிய ராபிழாக்கள் எம்மிடத்தில் இருக்கும் அல்குர்ஆன்,முஹம்மது நபியவர்களுக்கு அல்லாஹ்வால் இறக்கப்பட்ட அல்குர்ஆன் அல்ல. அது மாற்றப்பட்ட, கூட்டிக் குறைக்கப்பட்ட குர்ஆனாகும் என சொல்கிறார்கள். அதிகமான ஷீஆ ஹதீஸ் கலை அறிஞர்கள் அல்குர்ஆன் திரிபு படுத்தப்பட்டுள்ளது என நம்புகிறார்கள்.இது பற்றி ஷீஆ அறிஞர் அன்னூரி அத் திப்ரிசீ என்பவர் தனது فصل الخطاب في تحرف كتاب رب الأرباب என்ற நுலில் குறிப்பிட்டுள்ளார்.


முஹம்மது பின் யஃகூப் அல்குலைனீ என்பவர் தனது 'உஸூலுல் காபி' என்ற நூலில் 'நிச்சயமாக ஷீஆ இமாம்களாலன்றி அல்குர்ஆன் முழுமையாக ஒன்று சேர்க்கப்படவில்லை'  என்ற தலைப்பில் பின் வரும் விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

'மனிதர்களில் யாராவது அல்லாஹ் இறக்கியது போன்று அல்குர்ஆன் முழுவதும் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது என்று சொன்னால், அவர் பொய்யர் எனப்படுவார். அல்லாஹ் இறக்கியது போன்று, அலி (ரழி)யும் அவருக்குப் பின் வந்த இமாம்களையும் தவிர வேறு யாரும் அதனை மனனம் செய்யவுமில்லை, ஒன்று சேர்க்கவுமில்லை என அபூ ஜஃபர் சொன்னதை தான் கேட்டதாக ஜாபிர் என்பவர் கூறுகிறார்.

இன்னும், அபூ ஜஃபர் சொன்னதாக ஜாபிர் என்பவர்: 'அல்குர்ஆனிலுள்ள அனைத்தும் ஒருவரிடத்தில் உள்ளது என்று அவ்சியாக்கள்  தவிர யாராலும் பரகசியமாகவும் இரகசியமாகவும் வாதிடமுடியாது' என்று குறிப்பிடுகிறார்.

அபூ அப்தில்லாஹ் சொன்னதாக ஹிஸாம் பின் சாலிம் குறிப்பிடுகையில், நபியவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கொண்டு வந்து கொடுத்தது 10,000 அல்குர்ஆன் ஆயத்துக்கள் ஆகும்.

அதாவது, அல்லாஹ்வினால் முறையாக பாதுகாக்கப்பட்டு எமது கரங்களில் உள்ள  அல்குர்ஆன் வசனங்களை விட, ராபிழாக்களிடம் உள்ள குர்ஆன் வசனங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. அல்லாஹ் அவர்களிடமிருந்து எம்மைப் பாதுகாப்பானாக.!
      
இஹ்திஜாஜ் என்ற கிதாபில், அஹ்மத் அத்திப்ரிசீ என்பவர் குறிப்பிடுகையில்,'உமர் (ரழி) அவர்கள் ஸைத் பின் தாபித் (ரழி) அவருக்கு பின்வருமாறு கூறினார்.

அலி (ரழி)அவர்கள் கொண்டுவந்துள்ள குர்ஆனில் முஹாஜிரீன்களையும், அன்ஸாரிகளையும் இழிவுபடுத்தப்பட்டுள்ளது. நாம் அல் குர்ஆனை ஒன்று சேர்க்கும் போது, முஹாஜிரீன்களையும், அன்ஸாரிகளையும் இழிவுபடுத்தும் விடயங்களை நீக்கிவிடுவோம்.

அதற்கு ஸைத் பின் தாபித் பின்வருமாறு கூறினார்கள்: 'நான் நீங்கள் கேட்டபிரகாரம் குர்ஆனை ஒன்று சேர்த்ததன் பின், அலி  ஒன்று சேர்த்த குர்ஆனை எனக்குக் காட்டினால்  நான் நீங்கள் செய்தவற்றை அழித்தவனாக மாட்டேனா? என வினவினார்.அதற்கு உமர் 'அப்படியென்றால் என்ன தீர்வு?' அப்போது, ஸைத் நீங்கள் தான் தந்திர தீர்வு மிகவும் அறிந்தவர் என்றார். அதற்கு உமர் (ரழி) அவரை கொலை செய்வதைத் தவிர எந்தத் தந்திரமும்மில்லை. அதன் பின் நாம் அவரிடமிருந்து நிம்மதி அடைவோம்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் மூலம் கொலை செய்வதற்குத் திட்டமிட்டார். இருப்பினும் அது நடைபெற வில்லை. உமர் (ரழி) கலிபாவானதும், அலி (ரழி)  வைத்திருந்த குர்ஆனை தன்னிடம் ஒப்படைக்கும் படியும், அதை அழித்துவிடும் படியும் வேண்டினார், உமர்(ரழி).அபுல் ஹஸனே! 'அபூ பக்கரிடம் நீர் கொண்டு வந்த குர்ஆனை கொண்டுவாருங்கள் எம்மால் அதை ஒன்று சேர்க்க முடியும்' என்றார்.  அதற்கு அலி அது ஒரு போதும் நடக்கவே நடக்காது. அபூ பக்கரிடம் நான் கொண்டு வருவது அவருக்கு எதிராகவே மறுமை நாளில் 'நிச்சயமாக இதை விட்டும் நாம் கவனமற்று இருந்துவிட்டோம்'(7:172) என்று சொல்ல வேண்டும், அல்லது 'எங்களிடம் அது வரவில்லை' என்று சொல்ல வேண்டும். பரிசுத்தமானவரும்,எனது குழந்தைகளில் வஸிய்யத் செய்யப்பட்டவர்களையும் தவிர யாரும் அக் குர்ஆனை தொட மாட்டார்கள். அப்போது உமர் (ரழி)அவர்கள் அதைக் கொண்டுவருவதற்கு குறிப்பிடட நாள் உள்ளதா? எனக்கேட்டார்.அதற்கு அலி ஆம்! எனது குழந்தைகளில் ஒருவன் அதை சுமந்து மக்கள் முன் வெளிப்படுத்துவார் என்றார்.


அன்னவ்ருத் திப்ரிசி என்ற கிதாபில் குறிப்பிட்டாலும் அவர்களின் உலமாக்கள் மூலம் எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கருத்துக்களை இப்புத்தகம் தன்னகத்தே கொண்டுள்ளது. அவர்கள் திரிபுபடுத்தியதை உறுதிப்படுத்துகின்றனர். அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாது இருப்பினும் அல்குர்ஆன் பற்றி அவர்களின் நம்பிக்கையில் எந்த மாற்றத்தையும் கான முடியவில்லை.
                                                                                                                               
அவர்களிடம் இரண்டு குர்ஆன்கள் உள்ளன. அதில் ஒன்று தற்போதுள்ளது.மற்றது மறைக்கப்பட்டுள்ளது.அதில் தான் سورةالولاية சூராதுல் விலாயத் என்ற ஓர் அத்தியாயம் உள்ளது. நூறித் திப்ரிசி என்பவர் தனது நூலின், பஸ்லுல் கிதாப் பீ தஹ்ரீபில் கிதாப் ரப்பில் அர்பாப் என்ற அத்தியாயத்தில்;, 'உனது மருமகன் அலி மூலம் உமது புகழை உயர்த்தினோம்' என்பது அலம் நஷ்ரஹ் என்ற சூராவிலிருந்து விடப்பட்டதாக ஷீஆக்கள் நம்புகிறார்கள்.
இது, மக்கி சூராவாகும். மாக்காவில் நபியவர்களுக்கு அலி (ரழி) அவர்கள் மருமகனாக இருக்கவில்லை என அறிந்தும் இப்படி சொல்வதற்கு அவர்களுக்கு வெட்கமில்லையா?

இன்ஷா அல்லாஹ் வளரும்


  






Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger