எம். ஏ. ஹபீழ் ஸலபி
இந்த கட்டுரை மவ்லவி எம் ஏ ஹபீல் (ஸலபி்) அவர்கள் அழைப்பு இதழின் ஆசிரியர் குழாமாக பொறுப்பு வகித்த போது எழுதிய ஆக்கம். காலம் கடந்து வெளியிடுவதால் .இணையதள வாசகர்களைப் பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். ( முகம்மது கைஸான் (தத்பீகி)
அன்று 14.04.2007 காலை நேரம் மவ்லவி எஸ் எல் மீரான் பாஸி (ரஹ்) அவர்களின் மரணச் செய்தி கேட்டு என் மனம் கவலையடைந்தது. அதே போல் இச்சோகச் செய்தி தவ்ஹீத் நெஞ்சங்களை எல்லாம் ஆட்கொண்டது.
இலங்கை தவ்ஹீத் தஃவாக் களத்தில் ஒரு தனித்துவமான சுபாவமுடைய அவர் இறுதி வரை சிறந்த பிரசாரகராகவே திகழ்நதார். நான் ஸலபிய்யாக் கலாபீடத்தில் நுழையும் போது அவர் அங்கிருந்து விலகிச் சென்றிருந்தார். அவரிடம் கல்வி கற்கக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைக்காவிட்டாலும் தஃவாக் களத்தில் நான் அவருடன் மேடைகளில் ஒன்றாக சொற்பொழிவாற்றியுள்ளேன். அப்போதெல்லாம் அவரிடம் சிறந்த குணவியல்புகளை அவதானிக்க முடிந்தது. பிரரைப்பற்றி யார் எதைச் சொன்னாலும் சப்பந்தப்பட்டவருடன் நேரடியாகத் தெளிவு பெற முனையும் அவரது பண்பு என்னில் அவர் மீதான மரியாதையை அதிகரிக்கச்செய்தது.
பேராதெனிய பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கற்கின்ற வேளை ஹோரப்பொல என்ற கிராமத்தில் ஒரு சன்மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்ற நான் சென்றிருந்தேன். அவரும் ஒரு பேச்சாளராக அங்கு வந்திருந்தார். நான் அவசரத் தேவை காரணமாக உடனே திரும்ப வேண்டி ஏற்பட்டதால் எனக்கு முதல் உரையை கேட்டுப் பெற்றுக்கொண்டு நான் உரையாற்றினேன். எனது உரையை அவர் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்துவிட்டு அடுத்து அவரது உரையின் துவக்கத்தில் எனது உரையைப் பாராட்டிப் பேசினார். அதேபோல் பலரிடம் அவ்வுரையை சிலாகித்துப் பேசியதை பலரும் என்னிடம் கூறினார்கள்.
தஃவாவில் முதிர்ச்சியான அனுபவமிக்க ஓர் ஆலிம் அப்போதுதான் தஃவாக் களத்தில் கால்பதித்த என்னை அவர் பாராட்டிய விதம் எனக்கு மேலும் உட்சாகத்தையும் ஊக்கத்தையும் இடைவிடாத ஆர்வத்தையும் வழங்கியது. நான் மடுல்போவை தஃவா நிலையத்தில் வார இறுதியில் வகுப்புகள் நடாத்தி வந்தபோது அடிக்கடி அங்கு வருவார். நான் ரியாத் மன்னர் ஸவூத் பல்கலைக்கழகத்தில் கற்று வந்த பின்னர் அவரும் நானும் அரநாயக தல்கஸ்பிடியவில் மூன்றாம் வாரம் மாதம் விட்டு மாதம் குத்பாப்பேருரை நிகழ்த்தி வந்தோம். அவர் இறையடி சேர்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர் நான் நீண்ட நாட்களின் பின்னர் கொழும்பில் தற்செயலாக அவரை சந்தித்தேன். அப்போது அவர் என்னைப் பற்றி என்ன செய்கிறீர்கள் தஃவாவெல்லாம் எவ்வாறு எத்தனை குழந்தைகள் உள்ளன என்றெல்லாம் மிகவும் பாசத்தோடு விசாரித்தார். என்னோடு நீண்ட நேரம் உரையாட வேண்டும் என்றெல்லாம் கூறினார். நான் முக்கிய தேவை ஒன்றிற்காகச் சென்றிந்ததால் எனக்கு நேரம் இடம் கொடுக்கவில்லை. அவர் அருகாமையில் இருந்து பகல் உணவருந்தும் வரை உரையாடிவிட்டு நான் விடைபெற்றேன். ஆனால் அவர் இப்போதுஎம்மனைவரைவிட்டும் விடைபெற்றுவிட்டார்.
தஃவாவில் முழுமையான ஈடுபாடும் மற்றவர் நலனில் அக்கறையுமுள்ள ஒரு சிறந்த பிரசாரகரின் மறைவு தவ்ஹீத் தஃவாக் களத்திற்குப் பெரிய இழப்பே!
அன்னவரது பிழைகளைப் பொறுத்து சுவனச்சோலையை அல்லாஹ் வழங்க நாம் அனைவரும் அவருக்காகப் பிரார்த்திப்போமாக.!
தெரிந்து கொள்ளுங்கள்.
ReplyDeleteஇதோ வியப்பான உண்மை தகவல்கள்.
வாசகர்களின் கனிவான பார்வைக்கு !
சுட்டியை சொடுக்கி படியுங்கள்.
1.****
அதிசயத்தக்க வரலாறு. இந்தியாவில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித். இந்தியாவின் இந்து மன்னர் சேரமான் பெருமாள் முதலில் இறை தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை சந்தித்து இஸ்லாத்தை தழுவினார்.. இறை தூதர் நிலவை இரண்டு பகுதிகளாக பிரித்து காட்டிய நிகழ்வு ****
2. **** ஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம் *****
3. **** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காணத்தவறாதீர்கள்.
மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும், சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்……எல்லா சூழ்நிலைகளிலும் அகிலத்தில் ஒவ்வொரு விநாடியும் அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ****
.