Tuesday, October 30, 2012


ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள் (17)

Add caption

ஷீஆக்கள் நம்பும் பாத்திமாவின் ஏடு

தனது ஒளி, தூதுவர், நபி, அதிகாரி ஆகிய முஹம்மது அவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட ஏடுதான் பாத்திமாவின் ஏடு ஆகும். முஹம்மதே! எனது பெயர்கள் சிறப்படைந்து விட்டது. எனது நிஃமத்துகளுக்கு நீ நன்றி செலுத்து. நான் தான் அநியாயக்காரர்களை அழிப்பவன். என்னைக் தவிர வணக்கத்துக்குரியவர்கள் யாருமில்லை. எவர் எனது சிறப்பையன்றி வேறு ஒன்றை எதிர்பார்த்தால்,எனது நீதியைத் தவிர வேறு ஒன்றுக்குப் பயப்பட்டால் உலகில் யாருக்கும் கொடுக்காத வேதனையை கொடுப்பேன். என்னையே வணங்குங்கள். என்மீதே தவக்குல் வையுங்கள்.

  ஒரு நபியை நான் அனுப்பினால் அவரின் நாட்களை பூர்த்தியாக்கி, காலத்தை முடித்து, அவருக்கு ஒரு பொறுப்பாளரை ஆக்கிவிடுவேன். உன்னை எல்லா நபிமார்களையும் விட சிறப்பாக்கினேன்.பொறுப்பாளர்களைவி விட உனது பொறுப்பாளரை சிறப்பித்து, உனது பேரர்களான ஹஸனையும், ஹுஸைனையும் சங்கைப்படுத்தினேன் . தனது தந்தையின் காலம் முடிவுற்றதும் ஹஸனை எனது அறிவகமாக மாற்றி, ஹுஸைனை வஹியின் பாதுகாவளராகவும் ஷஹாதத்தைக் கொண்டும், அதிஷ்டத்தைக் கொண்டும் சங்கைப்படுத்தியுள்ளேன்.. ஹுஸைன், ஷஹீதாக்கப்பட்டவர்களில் மிகச் சிறந்தவர். ஷஹீத்களில்  உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றவர்.எனது பூரணவார்த்தைகளையும், உயர்ந்த ஆதாரங்களையும் அவருக்கு ஆக்கினேன்.கூலியும்,தண்டனையும் அவரின் மூலமே வழங்கப்படும்.
   அவர்களில் முதலாமவர் அலி. அவர்  வணக்கவாளர்களின் தலைவர்.கடந்த எனது அவ்லியாக்களில் உயர்ந்தவர். .ஜஃபர் விடயத்தில் சந்தேகம் கொண்டவரும் அலியை நிராகரித்தவரும் அழிவார்கள். உண்மை என்னிடம் உள்ளது. ஜஃபரை சந்தோசப்படுத்துங்கள். நான் அவரின் தோழர்களை சந்தோசப் படுத்துவேன். என்னுடைய அவ்லியாக்கள்,பூரண கிண்ணங்களில் பருகுவார்கள். அவர்களில்  எவரை நிராகரித்தாலும் அவர் எனது நிஃமத்துக்களை நிராகரித்துவிட்டார். எனது வேதத்தில் எதை மாற்றினாலும், அவர் அலிக்குத் துரோகம் செய்தவர்தான்.

அவரின் மகனுக்கு அதிஷ்டத்தை தீர்மானித்தேன்.எனது படைப்புக்களுக்கு அவர்தான்  அதிஷ்டம். அவர்தான் எனது வஹிக்கும்  பொறுப்பாளி. அவரின் மூலம் எனது பாதையில் அழைப்பாளர்களை உருவாக்குவேன்.மூஸாவின் பூரணத்துவம் ஈஸாவின் கவர்ச்சி ஐயூபின் பொறுமை அவருக்கு இருந்தது

தொடரும் இன்ஷா அல்லாஹ்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger