Saturday, October 27, 2012

நபி வழியில் நம் வுழு (05)

முஹம்மது கைஸான் (தத்பீகி

வுழு எப்போது கடமையாக்கப்பட்டது?

இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் வணக்க வழிபாடுகள் இவை யாவும் நபிகள் நாயகம் (ஸல்அவர்களுக்கு மொத்தமாக ஒரே தருனத்தில் அருளப்பட வில்லை படிப்படியாகத்தான் அருளப்பட்டது என்பதை எல்லோரும் நாம் அறிந்து வைத்துள்ளோம்அந்த அடிப்படையில் வுழு எனும் வணக்கம் இஸ்லாத்தில் எப்போது மார்க்கமாக்கப்பட்டது என்பதைப் பார்ப்போம் இது குறித்து அறிஞர்கள் மத்தியில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றனசில அறிஞர்கள் மதினாவில் மார்க்கமாக்கப்பட்டதாகவும் மற்றும் சிலர் மக்காவில் மார்க்கமாக்கப்பட்டதாகவும் கருதுகின்றனர்.  எனவே அவர்களின் வாதங்களையும்  ஆதாரங்களையும் முதலில் பார்ப்போம்மதினாவில் மார்க்கமாக்கப்பட்டது என்ற கருத்தில் உள்ள அறிஞர்கள் நேரடியாக எந்த சான்றையும் முன் வைக்கவில்லை.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ وَإِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا وَإِنْ كُنْتُمْ مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِنْكُمْ مِنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ مِنْهُ مَا يُرِيدُ اللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُمْ مِنْ حَرَجٍ وَلَكِنْ يُرِيدُ لِيُطَهِّرَكُمْ وَلِيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ (6) سورة المائدة
மேலே உள்ள சூறதுல் மாயிதாவின் வுழுவுடய வசனம் மதினாவில் அருளப்பட்டதால் வுழுவும் மதினாவில் தான் அருளப்பட்டது என அவர்கள் கருதுகின்றனர்இந்த வசனம் மதினாவில் அருளப்பட்டது என்பதில் எந்தச்சந்தேகமும் இல்லை புஹாரியில் 4608 என்ற இலக்கத்தில் ஆயிஷா (ரலிஅவர்க்ளை  தொட்டும் பதிவாகியுள்ள செய்தி இதை  வலுப்படுத்துகின்றது
.   
அதே நேரம் அவர்களின் இந்த வாதம் தான் சறியானதன்று       ஏனெனில் நபிகளாரும் அவர் தம் தோழர்களும் மக்காவில் வுழு இன்றியே கடமையான மற்றும் நஃபிலான தொழுகைகளை தொழுதுள்ளார்கள் என்ற விபரீதமான அர்த்தம் வந்து விடும்துய்மையின்றி தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது என்பது நபிகளாரின் வாக்கு                                           
 557 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِىُّ - وَاللَّفْظُ لِسَعِيدٍ - قَالُوا حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ قَالَ دَخَلَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَلَى ابْنِ عَامِرٍ يَعُودُهُ وَهُوَ مَرِيضٌ فَقَالَ أَلاَ تَدْعُو اللَّهَ لِى يَا ابْنَ عُمَرَ. قَالَ إِنِّى سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « لاَ تُقْبَلُ صَلاَةٌ بِغَيْرِ طُهُورٍ وَلاَ صَدَقَةٌ مِنْ غُلُولٍ ». أخرجه مسلم
துய்மையின்றி நிறைவேற்றப்படும் தொழுகையும் மோசடிப்பொருட்களில் இருந்து செய்யப்படும் தர்ம்மும் ஏற்றுக் கொள்ளப்படாத                   
ஆதாரம்::(முஸ்லிம்557)                                           
மக்காவில் நபிகள் நாயகம் (ஸல்அவர்கள்  வுழு செய்துள்ளார்கள் என்பதற்கு நேரடியான ஆதாரம் இருப்பதால் மக்காவில் வுழு கடமையாக்கப்பட்டது என்ற அறிஞ்களின் கருத்தே சறியானதும் ஆதாரத்திற்கு உட்பட்டதுமாகும்           ஹாகிமில் பதிவாகியுள்ள பின்வரும் செய்தியில் இருந்து .இதை அறிந்து கொள்ளலாம்.                          
583 - حدثنا الحاكم أبو عبد الله محمد بن عبد الله الحافظ إملاء في شهر ربيع الأول سنة أربع و تسعين و ثلاث مائة أنبأ أبو جعفر محمد بن علي بن رحيم الشيباني بالكوفة ثنا أحمد بن حازم بن أبي عروة ثنا محمد بن سعيد بن الأصبهاني ثنا يحيى بن سليم ثنا عبد الله بن عثمان بن خثيم عن سعيد بن جبير عن ابن عباس قال : دخلت فاطمة على رسول الله صلى الله عليه و سلم و هي تبكي فقال : يا بنية ما يبكيك ؟ قالت : يا أبت مالي لا أبكي و هؤلاء الملأ من قريش في الحجر يتعاقدون باللات و العزى و مناة الثالثة الأخرى لو قد رأوك لقاموا إليك فيقتلونك و ليس منهم رجل إلا و قد عرف نصيبه من دمك فقال : يا بنية أئتني بوضوء فتوضأ رسول الله صلى الله عليه و سلم ثم خرج إلى المسجد فلما رأوه قالوا : هاهو ذا فطأطأوا رؤوسهم و سقطت أذقانهم بين يديهم فلم يرفعوا أبصارهم فناول رسول الله صلى الله عليه و سلم قبضة من تراب فحصبهم بها و قال : شاهت الوجوه فما أصاب رجلا منهم حصاة من حصاته إلا قتل يوم بدر كافرا
 هذا حديث صحيح قد احتجا جميعا بيحيى بن سليم و احتج مسلم بعبد الله بن عثمان بن خثيم و لم يخرجاه و لا أعرف له علة و أهل السنة من أحوج الناس لمعارضة ما قيل أن الوضوء لم يكن قبل نزول المائدة في حجة الوداع و النبي صلى الله عليه و سلم بعرفات
 و له شاهد ناطق بأن النبي صلى الله عليه و سلم كان يتوضأ و يأمر بالوضوء قبل الهجرة و لم يخرجاه
تعليق الذهبي قي التلخيص : صحيح
பாத்திமா (ரலிஅவர்கள் அழுத வன்னம் நபி (ஸல்அவர்களிடம் சென்று குரைஷிகள் உங்களை கொலை செய்ய திட்டமிடுகின்றனர் எனக் குறிப்பிட்டார்கள்அப்போது நபிகள் நாயகம் வுழு செய்யவதற்கு தண்னீர் கொண்டு வரச்சொல்லி வுழுச்செய்தார்கள் பின்னர் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றார்கள்(நீண்ட செய்தியின் சுருக்கம்)                                  
ஆதாரம் ஹாகிம் 583
இந்த செய்தி மக்காவிலும் வுழு எனும் வணக்கம் நடை முறையில் இருந்துள்ளது என்பதற்கு போதிய சான்றாகும் எனவே மக்காவில் தொழுகையுடன் சேர்த்து அதற்க்கான துய்மையும் கடமையாக்கப்பட்டு இருந்தது என்பதை இதிலிருந்து அறியலாம்அவ்வாறே சூரதுல் மாயிதாவின் வுழுவுடைய வசனம் இறங்கிய சந்தர்ப்பத்தை நாம் கவனமாக சிந்தித்தால் இதில் இன்னும் கூடுதல் தெளிவு கிடைக்கும்.                  
4608- حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ ، قَالَ : حَدَّثَنِي ابْنُ وَهْبٍ قَالَ : أَخْبَرَنِي عَمْرٌو ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ حَدَّثَهُ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، سَقَطَتْ قِلاَدَةٌ لِي بِالْبَيْدَاءِ وَنَحْنُ دَاخِلُونَ الْمَدِينَةَ فَأَنَاخَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَزَلَ فَثَنَى رَأْسَهُ فِي حَجْرِي رَاقِدًا أَقْبَلَ أَبُو بَكْرٍ فَلَكَزَنِي لَكْزَةً شَدِيدَةً وَقَالَ حَبَسْتِ النَّاسَ فِي قِلاَدَةٍ فَبِي الْمَوْتُ لِمَكَانِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَقَدْ أَوْجَعَنِي ثُمَّ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَيْقَظَ وَحَضَرَتِ الصُّبْحُ فَالْتُمِسَ الْمَاءُ فَلَمْ يُوجَدْ فَنَزَلَتْ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاَةِ} الآيَةَ فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ لَقَدْ بَارَكَ اللَّهُ لِلنَّاسِ فِيكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ مَا أَنْتُمْ إِلاَّ بَرَكَةٌ لَهُمْ./ أخرجه البخاري
நாங்கள் (பனூ முஸ்தலிக் போர் முடிந்தது) மதீனாவிற்கு வந்து கொண்டிருந்தபோது (மதீனாவுக்கருகில் உள்ள) 'பைதாஎனுமிடத்தில் என் கழுத்து மாலையொன்று (அவிழ்ந்து) விழுந்துவிட்டது. நபி(ஸல்) அவர்கள் அங்கே தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்துஇறங்கிஎன்னுடைய மடியில் தலை வைத்து உறங்கினார்கள். (அப்போது என் தந்தை) அபூ பக்ர்(ரலி) என்னை நோக்கி வந்துஎன்னை வேகமாகக் குத்தி, 'ஒரே கழுத்து மாலைக்காக தடுத்து நிறுத்திவிட்டாயேஎன்று கூறினார்கள். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என் மடிமீது தலைவைத்துப் படுத்து) இருந்த காரணத்தால் நான் (அசையாமல்) உயிரற்(ற சடலம் போன்)று இருந்துவிட்டேன். அதனால் எனக்குக் கடும்வேதனை ஏற்பட்டது. பிறகு (நபி(ஸல்) அவர்கள் விழுத்தெழுந்தார்கள். சுப்ஹுத் தொழுகை (நேரம்) வந்துவிட்டது. உளு (அங்கச் சுத்தி) செய்வதற்காக தண்ணீர் தேடப்பட்டது. அது கிடைக்கவில்லை. அப்போதுதான், 'இறைநம்பிக்கையாளர்களே! தொழுகைக்காகச் செல்லுமூபோது உங்கள் முகங்களையும்முழங்கைகள் வரை உங்களுடைய கரங்களையும் கழுவிக் கொள்ளுங்கள்என்று தொடங்கி 'தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தித் 'தயம்மும்செய்து கொள்ளுங்கள்என்று கூறும் (திருக்குர்ஆன் 05:6 வது) வசனம் அருளப்பட்டது. அப்போது உசைத் இப்னு ஹுளைர்(ரலி), 'அல்லாஹ் உங்களால் மக்களுக்கு அருள்வளம் பொழிந்துள்ளான்அபூ பக்ரின் குடும்பத்தாரே! நீங்களே அவர்களுக்கு ஓர் அருள்வளம்தான்என்று கூறினார்கள்.                           அதாரம் புஹாரி (4608)

மேலே உள்ள சூறதுல் மாயிதாவின் வுழுவுடய வசனம் மதினாவில் அருளப்பட்டவதற்க முன்னறே தொழுகைக்காக வுழு செய்யும் வழுக்கம் நடை முறையில் இருந்துள்ளது என்பதை மேலே உள்ள செய்தியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.அதனால் தான் தொழுகைக்கான நேரம் வந்த்தும் தன்னீரைத் தேட ஆரம்பித்தனர்எனவே சூறத்துல் மாயிதாவுடைய வசனம் வுழு செய்வதற்கோ  அல்லது கடமையான குளிப்பை நிறைவேற்றுவதற்க்கோ தண்ணீர் கிடைக்காவிட்டால் அல்லது தண்ணீறை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் தயம்மும் செய்து கொள்ளுங்கள் என்ற அனுமதியை தெளிவுபடுத்தவே அருளப்பட்டது      
எனவே இந்த வசனத்தையும் அது இறங்கிய பின்ணனியையும் வைத்துப்பார்க்கும் போது  மதினாவில் தான் வுழுவுடைய சட்டம் இறங்கியது என்ற அறிஞர்களின் கருத்துக்கு எதிராகவே இந்த வசனம்   அமைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம் வளரும் இன்ஷா அல்லாஹ்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger