Tuesday, October 30, 2012


பேரீச்சம் பழத்தின் பலன்கள்!

பூமிக்கு நிறமும் அழகும் சேர்ப்பவை தாவரங்கள் தாவரங்களும் புல் பூண்டுகளும் இல்லாத ஒரு பூமி எவ்வாறு இருக்கும் என்றுயோசித்துப் பாருங்கள் மிகவும் கொடுமையான உஷ்ண மிகுதியாகவும், மறைந்து கொள்ள நிரந்தர மரங்களே இல்லாமல்விலங்கினங்களும் மனிதனும் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கும். அத்தகைய பெருமை வாய்ந்த தாவரங்கள் பூமிக்குகுளிர்ச்சியூட்டி பூமிக்கு பெருமை சேர்க்கின்றன. அத்தகைய தாவர இனத்திற்கே பெருமை சேர்ப்பவை பேரீச்சம்பழங்கள்.

மனிதன், முதன் முதலாக பயிரிட ஆரம்பித்த ஒரு சில தாவரங்களுள் முதன்மையானது பேரீச்ச மரங்களாகும்.

சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னதாக மெசபடோமியா பகுதியில் வாழ்ந்த மனிதன் முதலில் இம்மரங்களை பயிரிட ஆரம்பித்ததாககுறிப்புகள் தெரிவிக்கின்றன. அகழ்வாராய்ச்சிகளிலும் பாறைப் படிவங்களிலும் பேரீச்சம் மரம், இலை, காய்கள் போன்றவைகண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முகமது நபி அவர்கள் பேரீச்சம் பழத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கடவுள் முதல் மனிதனான ஆதாமை மண்ணிலிருந்துஉருவாக்கினார். அந்த மண்ணின் மீதியிலிருந்து பேரீச்சம் பழங்களை உருவாக்கினார் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆரம்பத்தில் மெசபொட்டேமியா எகிப்து ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டு வந்த பேரீச்சம்பழம் பிற்காலங்களில் தான் பல நாடுகளுக்கும்பரவியுள்ளது. 1765க்கு பின்னர் தன் அமெரிக்க தீவுகளில் பயிரிடப்பட்டு உள்ளது. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக அரேபியபாலைவனங்களில் பயிரடப்பட்டு வந்துள்ளது. பாலைவனங்களில் பிரயாணம் செய்யும் பிரயாணிகளுககு தாகத்தை தீர்த்திடும் பழமாகதிகழ்ந்துள்ளது.

அரபு நாட்டவர்களுக்கு பிரதான பழமாக விளங்கும் பேரீச்சம்பழம் இந்தியர்களும் ஒரு முக்கியமான பழமாகும் நம்மில் பலரும் ஏதோசுவைக்காகவோ அல்லது அதிகமான விளம்பரத்திற்காகவோ அல்லது சாப்பிட வேண்டுமே என்று அதன் மருத்துவ குணங்களும்நன்மைகளும் தெரியாமலேயே அதனை சாப்பிட்டு வருகிறோம். பேரீச்சைகளில் அதன் சுவையை விடவும் அதிக நற்பலன்களும்மருத்துவ குணங்களும் நிரம்பியுள்ளன.

பேரீச்ச மரங்கள் மிகவும் பசுமையானவை மிகக் குறைந்த நீரில் இருந்தாலே உயிர் வாழக் கூடியவை. அதே சமயம் ஒருஹெக்டேருக்கு அதிக மகசூல் தரக்கூடிய மரங்களுள் முதன்மையானதும் பேரீச்சமரங்களேயாகும். ஒரு ஆண்டின் உலக பேரீச்சம்பழஉற்பத்தி சுமார் முப்பது லட்சம் டன் ஆகும்.

பேரீச்சம்பழங்கள் மிகவும் சத்தானவை, உடலுக்கு சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிப்பவை. ஒரு கிலோ பேரீச்சம்பழம் சுமார்3000 கலோரிக்கும் அதிகமான எரி சக்தியை தரக்கூடியது.

இது பிற உணவுகளையும் பழங்களையும் விட பல மடங்கு அதிகமானதாகும். இதில் மாவுச்சத்து பல விதமான சர்க்கரை ரகங்களாகக்காணப்படுகிறது. குளூகோஸ் ஃப்ரக்டோஸ்களாக பிரிக்கக் கூடிய மாவுச்சத்துக்கள் அடங்கியுள்ளது. சில ரகங்களில் முழுவதுமேமாவுப்பொருட்கள் உடல் எளிமையாக எடுத்துக் கொள்ளக் கூடிய விதத்தில் கிடைக்கின்றது. இத்தகைய பழங்களை உட்கொள்ளும்பொழுது உடல் அதிக சக்தியை எளிமையாக பெற்றிட முடியும்.

பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் மெக்னீசியம் காணப்படுகின்றது. (600மி.கி. 1 கிலோ பேரீச்சம்பழத்தில்) இது உடல் ஆரோக்கியத்திற்குமிகவும் உகந்தது பேரீச்சம்பழத்தை ஒரு நுண்ணூட்டச்சத்து சுரங்கம் என்றே அழைக்கலாம். ஏனெனில் அதில் எண்ணற்றநுண்ணூட்டச்சத்துக்களும், தாதுப்பொருட்களும் உள்ளது.

பேரீச்சம்பழத்தை எரித்து சாம்பலாக ஆக்கி அந்த சாம்பலில் என்ன என்ன உலோகங்கள் தாதுப்பொருட்கள் உள்ளன என கண்டறிந்ததில்கீழ்க்கண்டவை இருப்பது தெரியவந்துள்ளது.
பொட்டாசியம்-50%, குளோரின்-15%, பாஸ்பரஸ்-8%, கால்சியம்-5%, இரும்பு-0.25%, மெக்னீசியம்-12% சல்பர்-10%.
மருத்துவ குணங்கள்
எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், உடனடி சக்தி தரும் ஊட்ட உணவு ஆகும். தொடர்ந்து பேரீச்சம் பழம்உண்பவர்களுக்கு வயிறு, குடல் நோய்கள் குணமடையும். வயிற்றில் உள்ள தூண் கிருமிகள் வெளியேறும். அதிக நார்ச்சத்துகொண்டதால் மலத்தை இளக்கி மலச்சிக்கலை போக்கிடும். ஆண்மை சக்தியையும் பெண்மை சக்தியையும் பெருக்கிடும்.

பெண்களுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்திட உதவும். இரத்த சோகையை தவிர்த்திடும். நன்கு பழுத்த உலர்ந்தபழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது. பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம். பழங்களைஇரண்டாக நறுக்கி தேனில் ஊறப்போட்டு வைத்துக் கொண்டு தினசரி இரவு உண்ணலாம். பிற உணவுகளில் இனிப்பு சுவைக்காகபேரீச்சம் பழங்களை அரைத்து கலந்து உபயோகிக்கலாம். பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வர எடை மற்றும் வளர்ச்சிஅதிகரிக்கும்.

மலச்சிக்கல் நீங்கிட இரவு 5 பழங்களை நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைத்து அதிகாலையில் அதனை மசித்து பழரசமாக பருகலாம்.குழந்தைகளுக்கு பேதி நீங்கிட ஒரு பேரீச்சம்பழத்தை ஒரு தேக்கரண்டி தேனில் சேர்த்து அரைத்து கொடுக்கலாம்.

பேரீச்சம்பழங்களை பெரும்பாலும் திறந்த வெளிகளில் உலர வைப்பதால் அவற்றில் அதிகளவு தூசி படிந்திருக்கும். எனவே அவற்றைநன்கு சுத்தம் செய்து உண்பது மிக அவசியம். பேரீச்சம்பழங்கள் மிக அதிக சர்க்கரை கொண்டவை எனவே, அவற்றை சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு உடையவர்கள் உண்பதை அவசியம் தவிர்த்திட வேண்டும்.

சமையல் முறைகள்

பேரீச்சம்பழ கேசரி

தேவை
பேரீச்சம்பழம்-10
டூட்டி புரூட்டி-50கிராம்
ரவை-1கப்
சீனி-2கப்
தண்ணீர்-2கப்
வென்னிலா எசன்ஸ்-1டீஸ்பூன்
முந்திரி, கிஸ்மிஸ்-1/2கப்
நெய்-2டே.ஸ்பூன்
எண்ணெய்-தேவையான அளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு சீனியை போட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு அதனை கொதிக்க வைக்கவும். கொதிவந்தவுடன் அதில் பேரீச்சம்பழம், டூட்டி புரூட்டி, முந்திரி, கிஸ்மிஸ் போன்றவற்றை போட்டு பின்னர் அதில் ரவையை போட்டுகிளறவும். இடையிடையே சிறிது சிறிதாக நெய்யை ஊற்றி ரவை நன்றாக வெந்து கேசரி பதத்திற்கு வந்தவுடன் எசன்ஸ் ஊற்றிகிளறவும்.

பேரீச்சம்பழ பானம்
தேவை
பால்-250மி.லி.
தேன்-2டீஸ்பூன்
குங்குமப்பூ-சிறிது
ஏலக்காய்-2

செய்முறை
பாலை நன்றாக காய்ச்சி வைத்துக் கொண்டு அதில் பேரீச்சம்பழத்தை நன்றாக சுத்தம் செய்து சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டுஊற விடவும். அதில் குங்குமப்பூ மற்றும் ஏலக்காயைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த அரைத்த விழுதை சூடானபாலில் கலந்து விடவும்.


பேரீச்சம் பழ சூப்
தேவை
பேரீச்சம் பழம்-5
வெள்ளரிக்காய்-1
கேரட்-2
தேங்காய்-2கீற்று
புதினாஇலை-5
மிளகு-2
பச்சைமிளகாய்-1
கொத்தமல்லி    -சிறிது

செய்முறை
வெள்ளரிக்காய், கேரட், பச்சைமிளகாய் முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து மிக்ஸியில் அரைத்து சாறுஎடுத்து தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க விடவும், கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பேரீச்சம் பழ அல்வா
தேவை
விதையில்லாத பேரீச்சம் பழம்-200கிராம்
சீனி-200கிராம்
பால்-100மிலி
நெய்-100கிராம்
ஏலக்காய் பொடி அல்லது எசன்ஸ்-1/2டீஸ்பூன்
முந்திரி-சிறிது

செய்முறை
பேரீச்சம் பழத்தை பால் ஊற்றி குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் இதனை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் சீனி கரையும் அளவு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பிசுக்குப் பதம் வரும் பொழுதுஅரைத்த பேரீச்சம் பழ விழுதைச் சேர்த்துக் கிளறவும். நடுவில் நெய் சேர்த்துக் கிளறவும். அல்வா பதம் வந்தவுடன், ஏலக்காய் பொடிஅல்லது ஏதாவது ஓரு எஸன்ஸ், முந்திரி சேர்த்து இறக்கவும்.


பேரீச்சம் பழ ஜுஸ்
தேவை
பேரீச்சம் பழம்-50கிராம்
எலுமிச்சம்பழம்-1
உப்பு-1சிட்டிகை
சீரகத்தூள்-சிறிது
இஞ்சி-1துண்டு

செய்முறை
பேரீச்சம் பழத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்துகொள்ளவும். பேரீச்சம் பழத்தையும், இஞ்சியையும் பேரீச்சம் பழம் ஊற வைத்த தண்ணீர் சிறிது சேர்த்து அரைக்கவும். அரைத்தவிழுதுடன் மீதியுள்ள ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின் எலுமிச்சம் ஜுஸ், உப்பு, சீரகத்தூள், ஐஸ் கட்டிகள் சேர்த்து கலக்கி பருகவும்.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger