Friday, October 26, 2012


ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள்(16)
அரபு மூலம்
அறிஞர் அப்தல்லாஹ் (ஸலபி)
தமிழ் வடிவம் முஹம்மது கைஸான் (தத்பீகி)


ஷீஆக்கள் நம்பும் சூரா விலாயத்


(கீழ்வரும் அத்தியாயம் அல்குர்ஆனில் இல்லாத ஒன்று. எனினும், ஷீஆக்கள் அவர்களது வேதத்தில் உள்ளதாக நம்புகின்றனர்.)
பஸ்லுல் ஹிதாப் எனும் நூலிலிருந்து இது எடுத்தாளப்பட்டுள்ளது.
 'அந்த நாளின் வேதனையை உங்களுக்கு எச்சரிக்கின்றோம். அந்த இரு ஒளிகளையும் நீங்கள் நம்புங்கள். யார் தூதருக்கு வழிப்படுகிறாறோ, அவருக்கு சுவர்க்கமும், யார் நம்பிக்கை கொண்டு நபியோடு செய்த ஒப்பந்தங்களை கிழித்து நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு நரகமும் உண்டு. ங்களுக்கு அநியாயம் செய்து, தூதரினால் வசிய்யத்து செய்யப்பட்டவர்களுக்கு மாறுசெய்தவர்களுக்கும் நரகத்தில் சூடான பானம் உண்டு.
இறைவன் தான் விரும்பிய பிரகாரம் வானங்களையும், பூமியையும் ஒளியாக்கியுள்ளான், மலக்குகளை தேர்ந்தெடுத்து  அவர்களை முஃமினாக்கினான். இறைவன் தான் விரும்பியதைச் செய்கிறான். அவனைத் தவிர அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் வேறுயாருமில்லை.
அவர்களுக்கு முன் தம் தூதர்களுக்கு மாறுசெய்தவர்களுக்கு இறைவனின் வேதனை கடுமையானது. ஆத், தமூத் சமூகத்தவர்களின் செய்கைகளால் அவர்களை அழித்து உங்களுக்குப் படிப்பினையாக ஆக்கியுள்ளான். எனவே, நீங்கள் பயப்படமாட்டீர்களா?
 அதிகமானவர்கள் கெட்டவர்கள்தான். எனவே, அவைகளை உங்களுக்குப் படிப்பினையாக ஆக்கினேன். மறுமையில் இப்படிப்பட்டவர்களை ஒன்று சேர்த்து, அவர்களிடம் கேள்வி கேட்கப்படும். பதில் சொல்லமுடியாமல் நிலைகுலைவார்கள். இதனால், அவர்கள் ஒதுங்கும் தளம் நரகமாகும். அல்லாஹ் மிக அறிந்தவன். தூதரே! எனது எச்சரிக்கையை நீங்கள் எத்திவையுங்கள். பின் அவர்கள் அறிவார்கள். எனது அத்தாட்சிகளை பொய்ப்பித்தவர்கள் நஷ்டமடைந்தவர்கள்.
உமது உடன்படிக்கைகளை நிறைவேற்றுபவர்களுக்கு சுவர்க்கமும், பாவமன்னிப்பும், கூலியும் உண்டு. நிச்சியமாக அலி அல்லாஹ்வை பயந்தவர். மறுமையில் அவருக்குரியதை நாம் பூரணமாகக் கொடுப்போம். அவருக்கு அநியாயம் செய்பவர்களை மறக்கமாட்டோம். உனது குடும்பத்தை விட அவரை கண்ணியப்படுத்தினோம். அவருடைய   குடும்பத்தவர்கள் பொறுமைசாலிகள். அவர்களின் பகைவன் பாவம் செய்யும் இமாமே.
  ஈமான் கொண்டு நிராகரித்தார்களே! அவர்கள் உலக இன்பங்களை வேண்டி, அதற்கு அவசரப்பட்டவர்கள். இறைவனும் அவனது தூதரும் வாக்களித்தவைகளை  மறந்து ஒப்பந்தங்களை முறித்தார்கள். இதனால், தான் நீங்கள் நேர் வழி பெற உங்களுக்கு சில உதாரணங்களைக் கூறினோம்.
தூதரே! யார் முஃமினாக மரணிப்பவர், யார் எதிர்காலத்தில் ஆட்சியில் அமர்பவர் என்ற எல்லாவற்றின் தெளிவான அத்தாட்சிளையும் நாம் உங்களுக்கு இறக்கினோம். அவர்கள் நிராகரிப்பவர்கள். எனவே, அவர்களை நீர் நிராகரித்துவிடும். இறக்கப்படாத எதுவும் பிரயோசனம் கொடுக்காத அந்நாளில் அவர்கள் கொண்டுவரப்பட்டு நரகிலே தள்ளப்படுவர்கள். ஒருபோதும் மீளமாட்டார்கள். நீர் உனது இறைவனின் பெயரை தஸ்பீஹ் செய்து, ஸுஜுது செய்வீராக.
மூஸாவுக்கும்,ஹாரூனுக்கும் கிலாபத்தை வழங்கினோம். ஹாரூனுக்கு அவர்கள் மாறு செய்தனர். இதனால், அவர்களை நாம் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றினோம். மறுமை வரை அவர்களை நாம் சபித்தோம். யார் எனது கட்டளைகளை மறுக்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களது குப்ரை சுவைக்கச் செய்யப்படும்.
தூதரே! ஈமான் கொண்டவர்களிடம் ஒரு உடன்படிக்கையை நாம் உமக்கு ஆக்கினோம். அதை நீர் எடுத்துக் கொளவீராக! அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக. அலி என்பவர் உறுதிமிக்கவராகவும், இரவில் ஸுஜுது செய்பவராகவும், மறுமையைப் பயந்தவராகவும் உள்ளார். அநியாயம் செய்தவர்கள் சமமா? என்னுடைய தண்டனையை அவர்கள் அறிவார்கள்.
 உமக்கும், ஸாலிஹான உமது குடும்பத்திற்கும் உமது ஏவல்களுக்கும் அவர்கள் ஒரு போதும் மாறு செய்யமாட்டார்கள் என நன்மாறாயம் கூறினோம்.மரணித்த ஒருவரை உயிரோடுள்ள அவர்கள் அனைவர் மீதும் எனது ஸலாத்தும்,அருளும் இருக்கும். உமக்குப் பின் அவர்கள் மீது யார் கோபம் கொள்கிறார்களோ, அவர்கள் நஷ்டம் அடைந்த தீய சமூதாயமாகும். யாரெல்லாம் என் மூலம் பெற்ற அப்பாதைப் படி நடக்கின்றார்களோ, அவர்களுக்கு அருள் உண்டு. அவர்கள் தம் அறைகளிலே பாதுகாப்பாக இருப்பார்கள்.
புகழனைத்தும் உலகைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கே!
       வளரும் இன்ஷா அல்லாஹ்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger