Wednesday, July 18, 2012



ஷீஆக்களின் சீர்கெட்ட கொள்கைகள் (13)


அரபு மூலம்

அறிஞர் அப்துல்லாஹ் பின் முஹம்மது (அஸ்ஸலபி)

ஆஷூரா தினத்தின் சிறப்பு பற்றி
ராபிழாக்களின் நிலைப்பாடு

ராபிலாக்கள் 'ஹுஸைன் (ரழி) அவர்களின் இறந்த நாள் ஞாபக தினத்தில் களியாட்டங்கள், மாரடிப்புக்கள், உணவுப் பரிமாறல் அனைத்தையும் செய்வதோடு, அத்தினத்தில் பாதை நெடுகிலும், பொது இடங்களிலும் கறுப்பு ஆடைகளை அணிந்து தங்கள் துக்கத்தை வெளிக்காட்டி வலம் வருகின்றனர். இது ஒவ்வொரு வருடமும் முஹர்ரம் ஆரம்ப பத்து நாட்களில் நடை பெறும் வைபவங்கள். 
   
இதை இபாதத்தாக இவர்கள் கருதுவதால், தங்கள் கைகளால் கண்ணங்களுக்கும், முதுகு, நெஞ்சு போன்ற பகுதிகளுக்கும் அடித்தும், சட்டைப் பைகளை கிழித்தும் யா ஹுஸைன்! யாஹுஸைன்! என்று சத்தமிட்டு அழுகின்றனர்.முஹர்ரம் 10வது நாள் மிக விஷேடமாக இந்த மடத்தனமான வழிபாட்டைச் செய்து வருகின்றனர்.
சங்கிலிகளால் அடித்தும், கூரிய ஆயுதங்களால் தமது உடம்பை இரத்தம் வரும் அளவிற்கு கிழித்தும் தமது துக்கத்தை வெளிப்படுத்துகின்றனர். ஈரான் போன்ற நாடுகளில் ராபிழாக்கள் இதை செய்து வருவதை எம்மால் அவதானிக்க முடிகிறது.
ஒரு சமூகத்தை வீணாக இரத்தம் சிந்தச் செய்யும் இது போன்ற இழிவான நிகழ்வுகளுக்கு ஷீஆக்களின் தலைவர்களும் ஊக்கமளிக்கின்றனர்.
தங்களை தாங்களே இவ்வாறு அடித்துக குத்திக் குதறுவது பற்றி, முஹம்மது ஹஸன் ஆல் காஷிப்  என்பவரிடம் வினவப்பட்டது. அதற்கு அவர் இது அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துவதாகும்' என்று பதிலழித்துள்ளார்.
ذَلِكَ وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ (32) سورة الحج
'இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) யார் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறாரோ, அது உள்ளங்களில் உள்ள இறையச்சத்தின் வெளிப்பாடாகும்.' என அல்லாஹ் கூறுகின்றான.(22:32)

இன்ஷா அல்லாஹ் வளரும்
                                    
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger