Wednesday, June 13, 2012


நபி வழியில் நம் வுழு (04)

முகம்மது கைஸான் (தத்பீகி)

சென்ற தொடரில் வுழு என்பது  இந்த உம்மத்துக்குறிய விஷேட வணக்கம் என்ற அறிஞர்களின் ஆதாரங்களையும் அவர்களின் வாதங்களையும் பார்ததோம் இந்த தொடரில் வுழு என்பது முன் சென்ற சில உம்மத்துக்கும் வழங்கப்பட்ட ஒரு பொதுவான வணக்கம் என்ற அறிஞர்களின் ஆதாரங்களையும் அவர்களின் வாதங்களையும் பார்ப்போம் 


ஆதாரம் 01
3436- حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : لَمْ يَتَكَلَّمْ فِي الْمَهْدِ إِلاَّ ثَلاَثَةٌ عِيسَى ، وَكَانَ فِي بَنِي إِسْرَائِيلَ رَجُلٌ يُقَالُ لَهُ جُرَيْجٌ كَانَ يُصَلِّي { فَ } جَاءَتْهُ أُمُّهُ فَدَعَتْهُ فَقَالَ أُجِيبُهَا ، أَوْ أُصَلِّي فَقَالَتِ اللَّهُمَّ لاَ تُمِتْهُ حَتَّى تُرِيَهُ وُجُوهَ الْمُومِسَاتِ ، وَكَانَ جُرَيْجٌ فِي صَوْمَعَتِهِ فَتَعَرَّضَتْ لَهُ امْرَأَةٌ وَكَلَّمَتْهُ فَأَبَى فَأَتَتْ رَاعِيًا فَأَمْكَنَتْهُ مِنْ نَفْسِهَا فَوَلَدَتْ غُلاَمًا فَقَالَتْ مِنْ جُرَيْجٍ فَأَتَوْهُ فَكَسَرُوا صَوْمَعَتَهُ وَأَنْزَلُوهُ وَسَبُّوهُ فَتَوَضَّأَ وَصَلَّى ثمَّ أَتَى الْغُلاَمَ فَقَالَ مَنْ أَبُوكَ يَا غُلاَمُ قَالَ الرَّاعِي قَالُوا نَبْنِي صَوْمَعَتَكَ مِنْ ذَهَبٍ قَالَ : لاََ  إِلاَّ مِنْ طِينٍ وَكَانَتِ امْرَأَةٌ تُرْضِعُ ابْنًا لَهَا مِنْ بَنِي إِسْرَائِيلَ فَمَرَّ بِهَا رَجُلٌ رَاكِبٌ ذُو شَارَةٍ فَقَالَتِ اللَّهُمَّ اجْعَلِ ابْنِي مِثْلَهُ فَتَرَكَ ثَدْيَهَا وَأَقْبَلَ عَلَى الرَّاكِبِ ، فَقَالَ : اللَّهُمَّ لاَ تَجْعَلْنِي مِثْلَهُ ثُمَّ أَقْبَلَ عَلَى ثَدْيِهَا يَمَصُّهُ- قَالَ أَبُو هُرَيْرَةَ كَأَنِّي أَنْظُرُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَمَصُّ إِصْبَعَهُ ، ثُمَّ مُرَّ بِأَمَةٍ فَقَالَتِ اللَّهُمَّ لاَ تَجْعَلْ ابْنِي مِثْلَ هَذِهِ فَتَرَكَ ثَدْيَهَا ، فَقَالَ : اللَّهُمَّ اجْعَلْنِي مِثْلَهَا فَقَالَتْ لِمَ ذَاكَ فَقَالَ الرَّاكِبُ جَبَّارٌ مِنَ الْجَبَابِرَةِ وَهَذِهِ الأَمَةُ يَقُولُونَ سَرَقْتِ زَنَيْتِ وَلَمْ تَفْعَلْ. أخرجه البخاري


மூன்று பேர்களைத் தவிர வேறெவரும் தொட்டிலில் (குழந்தையாக இருக்கும் போது) பேசியதில்லை. (ஒருவர்) ஈசா (அலை) அவர்கள். (மற்றொருவர்) பனூ இஸ்ராயீல்களால் 'ஜுரைஜ்' என்றழைக்கப்பட்டு வந்த (இறைநேசரான) மனிதர் ஒருவர். (ஒரு முறை) அவர் தொழுது கொண்டிருந்தார். அப்போது அவரின் தாயார் வந்து அவரை அழைத்தார். ஜுரைஜ் (தம் மனத்திற்குள்) 'அவருக்கு நான் பதிலளிப்பதா? தொழுவதா?' என்று கூறினார்கள். (பதிலளிக்கவில்லை.) அதனால் கோபமடைந்த அவரின் தாய், 'இறைவா! இவனை விபசாரிகளின் முகங்களில் விழிக்கச் செய்யாமல், மரணிக்கச் செய்யாதே!" என்று கூறிவிட்டார். (ஒரு முறை) ஜுரைஜ் தம் ஆசிரமத்தில் இருந்தபோது அவரிடம் ஒரு பெண் வந்து (தன்னுடன் தகாத உறவு கொள்ளும்படி அழைத்துப்) பேசினாள். அதற்கு அவர் மறுத்துவிட்டார். எனவே, (அவள் அவரைப் பழி வாங்குவதற்காக) ஓர் ஆட்டு இடையனிடம் சென்று அவனைத் தன் வசப்படுத்தி (அவனுடன் விபசாரம் புரிந்து) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பிறகு 'இது ஜுரைஜுக்குப் பிறந்தது' என்று (மக்களிடம்) சொன்னாள். உடனே மக்கள் ஜுரைஜிடம் சென்று அவரின் ஆசிரமத்தை இடித்து அவரைக் கீழே இறங்கி வரச் செய்து அவரை ஏசினார்கள். உடனே, ஜுரைஜ் அவர்கள் உளூச் செய்து தொழுதுவிட்டு, பின்னர் அந்தக் குழந்தையிடம் சென்று, 'குழந்தையே! உன் தந்தை யார்?' என்று கேட்டார். அக்குழந்தை, '(இன்ன) இடையன்" என்று பேசியது. அதைக் கண்டு (உண்மையை) உணர்ந்த அந்த மக்கள், 'தங்கள் ஆசிரமத்தை நாங்கள் தங்கத்தால் கட்டித் தருகிறோம்" என்று கூறினார்கள். அதற்கு அவர், 'இல்லை, களிமண்ணால் கட்டித் தந்தாலே தவிர நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்" என்று கூறிவிட்டார். (மூன்றாமவர்) இஸ்ரவேலர்களில் ஒரு பெண் தன் மகன் ஒருவனுக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது அழகும் பொலிவும் மிக்க ஒரு மனிதன் வாகனத்தில் சவாரி செய்த வண்ணம் சென்று கொண்டிருந்தான். உடனே, அவள், 'இறைவா! என் மகனை இவனைப் போல் ஆக்கு" என் மகனை இவனைப் போல் ஆக்கு" என்று பிரார்த்தித்தாள். உடனே, அந்தக் குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு சவாரி செய்பவனை நோக்கி, 'இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கி விடாதே" என்று கூறியது பிறகு அவளுடைய மார்பை நோக்கிப் பால் குடிக்கச் சென்றது. இந்த இடத்தில் நபியவர்கள் தம் விரலை சூப்புவது போல் தெரிந்தது - பிறகு அக்குழந்தை ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்து கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்தப் பெண், 'இறைவா! என் மகனை இவளைப் போல் ஆக்கி விடாதே" என்று கூறினாள். உடனே, அக்குழந்தை அவளுடைய மார்பைவிட்டுவிட்டு, 'இறைவா! என்னை இவளைப் போல் ஆக்கு" என்று கூறியது. அந்தப் பெண் (வியப்படைந்து), 'ஏன் இப்படிச் சொல்கிறாய்?' என்று கேட்டதற்கு அக்குழந்தை, 'வாகனத்தில் சவாரி செய்து சென்றவன் கொடுங்கோலர்களில் ஒருவன்; இந்த அடிமைப் பெண்ணைக் குறித்து மக்கள் (அவதூறாக) 'நீ திருடிவிட்டாய்; விபசாரம் செய்துவிட்டாய்' என்று கூறுகிறார்கள். ஆனால், இவள் அப்படி எதுவும் செய்யவில்லை" என்று பதிலளித்தது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஆதாரம் புஹாரி 3436
                                                   
ஆதாரம் 02
2217- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم هَاجَرَ إِبْرَاهِيمُ - عَلَيْهِ السَّلاَمُ – بِسَارَةَ فَدَخَلَ بِهَا قَرْيَةً فِيهَا مَلِكٌ مِنَ الْمُلُوكِ ، أَوْ جَبَّارٌ مِنَ الْجَبَابِرَةِ فَقِيلَ دَخَلَ إِبْرَاهِيمُ بِامْرَأَةٍ هِيَ مِنْ أَحْسَنِ النِّسَاءِ فَأَرْسَلَ إِلَيْهِ أَنْ يَا إِبْرَاهِيمُ مَنْ هَذِهِ الَّتِي مَعَكَ قَالَ أُخْتِي ثُمَّ رَجَعَ إِلَيْهَا فَقَالَ : لاََ تُكَذِّبِي حَدِيثِي فَإِنِّي أَخْبَرْتُهُمْ أَنَّكِ أُخْتِي وَاللَّهِ إِنْ عَلَى الأَرْضِ مُؤْمِنٌ غَيْرِي وَغَيْرُكِ فَأَرْسَلَ بِهَا إِلَيْهِ فَقَامَ إِلَيْهَا فَقَامَتْ تَوَضَّأُ وَتُصَلِّي فَقَالَتِ اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ وَأَحْصَنْتُ فَرْجِي إِلاَّ عَلَى زَوْجِي فَلاَ تُسَلِّطْ عَلَيَّ الْكَافِرَ فَغُطَّ حَتَّى رَكَضَ بِرِجْلِهِ قَالَ الأَعْرَجُ قَالَ أَبُو سَلَمَةَ بْنُ عَبْد الرَّحْمَنِ إِنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ : قَالَتِ اللَّهُمَّ إِنْ يَمُتْ يُقَالُ هِيَ قَتَلَتْهُ فَأُرْسِلَ ثُمَّ قَامَ إِلَيْهَا فَقَامَتْ تَوَضَّأُ تُصَلِّي وَتَقُولُ اللَّهُمَّ إِنْ كُنْتُ آمَنْتُ بِكَ وَبِرَسُولِكَ وَأَحْصَنْتُ فَرْجِي إِلاَّ عَلَى زَوْجِي فَلاَ تُسَلِّطْ عَلَيَّ هَذَا الْكَافِرَ فَغُطَّ حَتَّى رَكَضَ بِرِجْلِهِ قَالَ عَبْدُ الرَّحْمَنِ قَالَ أَبُو سَلَمَةَ قَالَ أَبُو هُرَيْرَةَ فَقَالَتِ اللَّهُمْ إِنْ يَمُتْ فَيُقَالُ هِيَ قَتَلَتْهُ فَأُرْسِلَ فِي الثَّانِيَةِ ، أَوْ فِي الثَّالِثَةِ فَقَالَ وَاللَّهِ مَا أَرْسَلْتُمْ إِلَيَّ إِلاَّ شَيْطَانًا ارْجِعُوهَا إِلَى إِبْرَاهِيمَ وَأَعْطُوهَا آجَرَ فَرَجَعَتْ إِلَى إِبْرَاهِيمَ - عَلَيْهِ السَّلاَمُ - فَقَالَتْ أَشَعَرْتَ أَنَّ اللَّهَ كَبَتَ الْكَافِرَ وَأَخْدَمَ وَلِيدَة. أخرجه البخاري

"இப்ராஹீம்(அலை) அவர்கள் ஸாராவுடன் நாடு துறந்தார்கள். மன்னன் ஒருவன் அல்லது கொடுங்கோலன் ஒருவன் - ஆட்சி புரிந்த ஓர் ஊருக்குள் இருவரும் நுழைந்தனர். 'அழகான ஒரு பெண்ணுடன் இப்ராஹீம் வந்திருக்கிறார்!" என்று (மன்னனிடம்) கூறப்பட்டது. மன்னன், இப்ராஹீம்(அலை) அவர்களை அழைத்துவரச் செய்து, 'இப்ராஹீமே! உம்முடன் இருக்கும் இந்தப் பெண் யார்?' எனக் கேட்டான். இப்ராஹீம்(அலை) 'என் சகோதரி' என்றார்கள். பிறகு ஸாராவிடம் திரும்பிய இப்ராஹீம்(அலை), 'நீ என் கூற்றைப் பொய்யாக்கி விடாதே! நீ என் சகோதரி என்று நான் அவர்களிடம் கூறியிருக்கிறேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உன்னையும் என்னையும் தவிர இந்தப் பூமியில் இறைநம்பிக்கையாளர் யாரும் இல்லை' என்றார்கள். பிறகு ஸாராவை மன்னனிடத்தில் அனுப்பினார்கள். அவன், அவரை நோக்கி எழுந்தான். ஸாரா எழுந்து உளூச் செய்து தொழுதுவிட்டு, 'இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், என்னுடைய பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!' என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து (வலிப்பினால்) கால்களால் உதைத்தான். மன்னனின் நிலையைக் கண்ட ஸாரா, 'இறைவா! இவன் செத்துவிட்டால் நானே இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர்' என்று கூறியவுடன் மன்னன் பழைய நிலைக்கு மீண்டு மறுபடியும் ஸாராவை நெருங்கினான். சாரா எழுந்து உளூச் செய்து தொழுதுவிட்டு, 'இறைவா! நான் உன்னையும் உன் தூதரையும் நம்பிக்கை கொண்டிருந்தால், என்னுடைய பெண்மையைக் கணவனைத் தவிர மற்றவர்களிடமிருந்து காப்பாற்றியிருந்தால் இந்தக் காஃபிரை என்னை ஆட்கொள்ள விடாதே!' என்று பிரார்த்தித்தார். உடனே அவன் கீழே விழுந்து கால்களால் உதைத்தான். மன்னனின் நிலையைக் கண்ட ஸாரா, 'இறைவா! இவன் செத்துவிட்டால் நானே இவனைக் கொன்றேன் என்று மக்கள் கூறுவர் என்று பிரார்த்தித்தார். இப்படி மன்னன் இரண்டு அல்லது மூன்று முறை வீழ்ந்து எழுந்து, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஒரு ஷைத்தானைத்தான் அனுப்பியிருக்கிறீர்கள். எனவே, இவரை இப்ராஹீமிடம் அழைத்துச் செல்லுங்கள். இவருக்கு (பணிப்பெண்ணான) ஆஜரைக் கொடுங்கள்' என்று (அவையோரிடம்) சொன்னான். ஸாரா இப்ராஹீம்(அலை) இடம் திரும்பி வந்து, அல்லாஹ் இந்தக் காஃபிரை வீழ்த்தி, நமக்குப் பணிபுரிய ஓர் அடிமைப் பெண்ணையும் தந்துவிட்டான் என்பது உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" 

இஸ்ரவேலர்களிடமும் இப்ஹாஹீம் நபியின் உம்மத்தினரிடமும் வுழு எனும் வணக்கம் நடைமுறையில் இருந்துள்ளது என்பதை மேலே உள்ள இரண்டு ஹதீஸ்களும் தெறிவிக்கின்றன. எனவே வுழு என்பது  இந்த உம்மத்துக்கு மட்டுமின்றி முன் சென்ற சில உம்மத்துக்கும் வழங்கப்பட்ட ஒரு பொதுவான வணக்கம் என்பதுதான் சறியான கருத்தாகும

அதே நேரம் குறிப்பிட்ட அளவைக்காட்லும் கூடுதலாக இந்த உம்மத்தினர் வுழு செய்த்தினால் அவர்களின் உறுப்புக்களில் வேறு எந்த சமுதாயத்திற்க்கும் இல்லாத வகையில் ஒரு ஒளியை இறைவன் ஏற்படுத்தி இந்த உம்மத்தை தனித்து விளங்கச் செய்வான் என்பதே இந்த உம்மத்துக்குறிய விஷெட சிறப்பம்ஷமாகும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதை முஸ்லிமில் பதிவாகியுள்ள பின்வரும் நபி மொழி மேலும்  உறுதிப்படுத்துகின்றது

604 - حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ وَابْنُ أَبِى عُمَرَ جَمِيعًا عَنْ مَرْوَانَ الْفَزَارِىِّ - قَالَ ابْنُ أَبِى عُمَرَ حَدَّثَنَا مَرْوَانُ - عَنْ أَبِى مَالِكٍ الأَشْجَعِىِّ سَعْدِ بْنِ طَارِقٍ عَنْ أَبِى حَازِمٍ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّ حَوْضِى أَبْعَدُ مِنْ أَيْلَةَ مِنْ عَدَنٍ لَهُوَ أَشَدُّ بَيَاضًا مِنَ الثَّلْجِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ بِاللَّبَنِ وَلآنِيَتُهُ أَكْثَرُ مِنْ عَدَدِ النُّجُومِ وَإِنِّى لأَصُدُّ النَّاسَ عَنْهُ كَمَا يَصُدُّ الرَّجُلُ إِبِلَ النَّاسِ عَنْ حَوْضِهِ ». قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَتَعْرِفُنَا يَوْمَئِذٍ قَالَ « نَعَمْ لَكُمْ سِيمَا لَيْسَت لأَحَدٍ مِنَ الأُمَمِ تَرِدُونَ عَلَىَّ غُرًّا مُحَجَّلِينَ مِنْ أَثَرِ الْوُضُوءِ 
» أخرجه مسلم.
"எனது (சுவனத்) தடாக(மான அல்-கவ்ஸரின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென்திசையின்) ஏடன் நகரத்திலிருந்து (வடதிசையின்) ஐலாவைவிட அதிகத் தொலைவுடையதாகும். அதன் நீர், பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையும் பால் கலந்த தேனைவிட இனிமையுமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையை விட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த் தொட்டியில் (பிற)மக்களின் ஒட்டகங்கள் (நீரருந்துவதைத்) தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் சிலரைத் தடுப்பேன்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "ஆம்; வேறெந்த சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். அங்கத் தூய்மை செய்ததன் அடையாளமாக உறுப்புகள் ஒளிர்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதன் மூலம் உங்களை நான் அடையாளம் கண்டு கொள்வேன்)" என்று கூறினார்கள்
                                                                                                          அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


ஆதாரம் (03)
1924 - حدثنا أبو داود قال حدثنا سلام الطويل عن زيد العمى عن معاوية بن قرة عن بن عمر : ان رسول الله صلى الله عليه و سلم توضأ مرة مرة وقال هذا وظيفة الوضوء الذي لا تحل الصلاة الا به ثم توضأ مرتين مرتين وقال هذا وضوء من أراد ان يضاعف له الأجر مرتين ثم توضأ ثلاثا ثلاثا وقال هذا وضوئي وضوء الأنبياء قبلى/  مسند الطيالسي
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வுழுச்செய்யும் போது ஒவ்வொரு உறுப்பையும் ஒரு தடவை கழுவினார்கள்.பின்னர்  இதுதான் தொழுகை செல்லுபடியாகும் வுழுவின் முறையாகும் எனக்குறிப்பிட்டார்கள். பின்னர் உறுப்புக்களை இரண்டு தடவை கழுவி இதுதான் இருமடங்கு நன்மையைப் பெற்றுத்தரும் வுழுவின் முறையாகும்.எனக்குறிப்பிட்டார்கள். பின்னர் உறுப்புக்களை மூன்று தடவை கழுவி இது எனது வுழுவும் எனக்கு முன் சென்ற நபிமார்களின் வுழுவும் .எனக்குறிப்பிட்டார்கள். என இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.                                             
ஆதாரம் முஸ்னத் அத்தயாலிஸி 1924
முன் சென்ற நபிமார்களின் உம்மத்துக்கும் வுழு எனும் வணக்கம் வழங்கப்பட்டிருந்த்து என்பதற்கு மேலே உள்ள இந்த நபிமொழியையும் சில அறிஞர்கள் ஆதாரமாக முன் வைப்பதாக இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) பத்ஹுல் பாரியில் குறிப்பிடுகின்றார்  .                                           மேற்கண்ட கருத்தில்  அப்துல்லாஹ் பின்  உமர் (ரலி) அனஸ் பின் மாலிக் (ரலி)   மற்றும் உபை பின் கஃப் (ரலி) ஆகியோர் வழியாக  பல  அறிவிப்புக்கள்  வந்துள்ளன. ஆனால் இந்த கருத்தில் இடம் பெரும் ஹதீஸ்களில் எதுவுமே ஆதரைப்புர்வமானதாக இல்லை அவற்றில் சில ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டவையாகவும். வேறு சில ஹதீஸ்கள் பலகீனமானவையாகவும் உள்ளன.                              
என்றாலும் இந்த அறிவிப்புக்கள் பலகீனமானவையாக இருந்தாலும்  அவர்களின் வாதத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஏனெனில் அவர்கள் முன்வைத்த  புஹாரியில் வந்துள்ள இரண்டு ஹதீஸ்களும் முன்சென்ற நபிமார்களின் உம்மத்துக்கும் வுழு எனும் வணக்கம் வழங்கப்பட்டிருந்த்து என்பத வழுவான சான்றாகும்.                                                   


வளரும் இன்ஷா அல்லாஹ்

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger