Tuesday, June 12, 2012

நபி வழியில் நம் வுழு (03)


முகம்மது கைஸான் (தத்பீகி)



வுழு ஓர் எளிய அறிமுகம்


குறிப்பிட்ட சில வணக்கங்களை நிறைவேற்றுவதற்காக தண்ணீரால் முகம் கை கால் போன்ற மேனியின் குறிப்பிட்ட சில உறுப்புக்களை  தூய்மை செய்து கொள்வதற்க்கு வுழு என்று இஸ்லாமிய வழக்கில் சொல்லப்படுகின்றது.
வுழு என்ற அறபுப் பதம்    الوضاءة   அல்வழாஅத் என்ற வேர் சொல்லில் இருந்து பிறந்ததாகும்.
அகராதியில்  الوضاءة என்றால் பிரகாசித்தல் என்பது சொற்பொருளாகும்.
இந்த அங்கதூய்மைக்கு பிரகாசித்தல் இலங்குதல் எனும் அகராதி அர்த்தம் வழங்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானதே! ஏனெனில் ஒரு நாளைக்கு ஜந்து விடுத்தம் தொழுகைக்காக உறுப்புக்களை சுத்தம் செய்பவர் ஒளி வீசும் வைரத்தைப் போன்று பிரகாசிக்கின்றார் ஆதலால் அகராதி அர்த்தம் நடைமுறை அர்தத்துடன் கச்சிதமாகப் பொருந்திப் போகின்றது.

வரலாற்றில் வுழு

இஸ்லாத்தின் சின்னங்களில் வுழு மிக முக்கியமானதொரு வணக்கமாக கருதப்படுகின்றது.
இந்த வுழு எனும் வணக்கம் நபியவர்களின் உம்மத்திற்க்கு மாத்திரம் உரித்தான விசேட வணக்கமா? அல்லது கடந்த கால நபிமார்களின் உம்மத்திற்க்கும் வழங்கப்ட்ட பொதுவான வணக்கமா? என்பதில் அறிஞர்களிடையே  கறுத்து வேறுபாடு உள்ளது. இது பெரியளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய சர்ச்சையன்று. ஏனெனில் என்றாலும் வுழு குறித்த முழுமையான ஒரு ஆய்வின் தொகுப்பாக இது அமைய வேண்டும் என்பதால் இதிலும் ஒரு சரியான முடிவைக்கான வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
வுழு என்பது நபியவர்களின் உம்மத்திற்க்கு மாத்திரம் உரித்தான விசேட வணக்கம் என அல் ஹலீமி (ரஹ்) என்ற அறிஞர் குறிப்பிடுவதாக இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி (ரஹ்) தனது புஹாரிக்குறிய விரிவுரை நூலான பத்ஹுல் பாரியில் எடுத்தெழுகின்றார்.
انظر/: فتح الباري /دار المعرفة (1/236)
பார்க்க பத்ஹூல் பாரி: 1.பாகம் பக்கம்.236

அவ்வாறே அபூ முஹம்மத் அல் அஸீலி என்ற அறிஞரும் இதே கருத்தைக் கொண்டுள்தாக இமாம் இப்னுல் பத்தால் தனது புஹாரிக்குறிய விரிவுரை நூலில் குறிப்பிடுகின்றார்.
شرح صحيح البخارى ـ لابن بطال/مكتبة الرشد (1/221) انظر/

மறுமை நாளில் நபிகளார் தனது சமுதாயத்தினரை முன் சென்ற
பல சமுதாயத்தினருக்கு மத்தியில் வுழுவின் தடயங்களை வைத்து வேறுபடுத்தி துள்ளியமாக அறிந்து கொள்வார்கள் என்ற அர்தங்களில் வரக்கூடிய பல நபி மொழிகளை தனது வாதத்துக்குறிய சான்றாக முன் வைக்கின்றனர். எனவே இக்கருத்துடையோரின் ஆதாரங்களையும் அவர்களின் வாதங்களையும் முதலில் பார்ப்போம்.

ஆதாரம் (01)
136- حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ : حَدَّثَنَا اللَّيْثُ عَنْ خَالِدٍ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ قَالَ رَقِيتُ مَعَ أَبِي هُرَيْرَةَ عَلَى ظَهْرِ الْمَسْجِدِ فَتَوَضَّأَ فَقَالَ إِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ : إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ آثَارِ الْوُضُوءِ فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ./  أخرجه البخاري
'பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன்.அபூ ஹுரைரா (ரலி)  வுழுச் செய்தார்கள். (வுழுச் செய்து முடித்ததும்) 'நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் வுழுவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்' என்றார்கள்" என நுஅய்ம் அல் முஜ்மிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.                                   
 : (136)  ஆதாரம் புஹாரி
ஆதாரம் (02)
367 - حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَسُرَيْجُ بْنُ يُونُسَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ - قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ - أَخْبَرَنِى الْعَلاَءُ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- أَتَى الْمَقْبُرَةَ فَقَالَ « السَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ وَدِدْتُ أَنَّا قَدْ رَأَيْنَا إِخْوَانَنَا ». قَالُوا أَوَلَسْنَا إِخْوَانَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ « أَنْتُمْ أَصْحَابِى وَإِخْوَانُنَا الَّذِينَ لَمْ يَأْتُوا بَعْدُ ». فَقَالُوا كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ يَأْتِ بَعْدُ مِنْ أُمَّتِكَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ « أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلاً لَهُ خَيْلٌ غُرٌّ مُحَجَّلَةٌ بَيْنَ ظَهْرَىْ خَيْلٍ دُهْمٍ بُهْمٍ أَلاَ يَعْرِفُ خَيْلَهُ ». قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ « فَإِنَّهُمْ يَأْتُونَ غُرًّا مُحَجَّلِينَ مِنَ الْوُضُوءِ وَأَنَا فَرَطُهُمْ عَلَى الْحَوْضِ أَلاَ لَيُذَادَنَّ رِجَالٌ عَنْ حَوْضِى كَمَا يُذَادُ الْبَعِيرُ الضَّالُّ أُنَادِيهِمْ أَلاَ هَلُمَّ. فَيُقَالُ إِنَّهُمْ قَدْ بَدَّلُوا بَعْدَكَ. فَأَقُولُ سُحْقًا سُحْقًا ». أخرجه مسلم.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று 'அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வஇன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்' (மண்ணறையிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடும்போது நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) என்று கூறிவிட்டு, "நம் சகோதரர்களை (இவ்வுலகில்) காண விரும்புகிறேன்" என்று சொன்னார்கள்.

மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் என் தோழர்கள்தாம். (நான் காண விரும்பியது) இதுவரை (பூமியில் பிறந்து) வந்திராத நம் சகோதரர்களை" என்று கூறினார்கள். மக்கள், "உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார்கள்.அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்து, அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்து கொள்ளமாட்டாரா? கூறுங்கள்" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தனர். "(அவ்வாறே) அவர்கள் அங்கத் தூய்மையினால் உறுப்புகள் ஒளிர்பவர்களாக (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்-கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன்.அறிந்து கொள்ளுங்கள்! வழி தவறி (விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து) விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். அவர்களை நான் 'வாருங்கள்' என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது, 'இவர்கள் உங்களுக்குப் பின்னால் (உங்களது மார்க்கத்தை) மாற்றி விட்டார்கள்' என்று சொல்லப்படும். அப்போது நான் "(இவர்களை) இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக;  அப்புறப்படுத்துவானாக!" என்று கூறுவேன் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                            
ஆதாரம் முஸ்லிம் (367)

கறுப்பு நிறம் கொண்ட பல குதிரைக்களுக் கிடையே முகமும் கை கால்களும் வெளுத்த குதிரை ஒன்று இருந்தால் அதை எவ்வாறு நாம் சுலபமாக இனங்கண்டு கொள்வோமோ அவ்வாறே நபிகளார் இந்த உம்மத்தினரையும் மறுமையில் இனங்கண்டு கொள்வார்கள். வுழுச்செய்யும் போது  குறிப்பிட்ட அளவைக்காட்டிலும் கூடுதலாக தூய்மை செய்ததன் விளைவாக  மறுமையில் முகம் மற்றும் கைகால்களில் வெண்மை உள்ளவராக இந்த உம்மத்தினர் வருவார்கள் என மேல் உள்ள நபிமொழிகள் தெரிவிக்கின்றன.

மறுமையில் இந்த பாக்கியம் இந்த சமுதாயத்தினருக்கு மாத்திரம் விஷேடமான சிறப்பாக இருப்பதால் வுழுவும்  இந்த உம்மத்துக்கு மாத்திரம் உரித்தான வணக்கம் என்பது இவர்களின் வாதம்.
மேற்கூறிய நபிமொழிகள் மிகவும் ஆதாரப்பூர்வமானவை என்பதையும் அவர்களின் அக்கருத்துக்கு அவற்றில் இடமுண்டு என்பதையும் எவரும் மறுக்க முடியாது!
எனினும் பல அறிஞர்கள்  முன் சென்ற நபிமார்களின் சமுதாயத்தினருக்கும் வுழு எனும் வணக்கம் வழங்கப்பட்டிருந்தது என்பதற்க்கு அதை விட வலிமையான சான்றுகளை முன் வைக்கின்றனர்.
எனவே  அக்கருத்துடையோரின் ஆதாரங்களையும் அவர்களின் வாதங்களையும்  பார்ப்போம்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger