Monday, June 11, 2012


 
நபி வழியில் நம் வுழு (02)

முஹம்மது கைஸான் (தத்பீகி)


917- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ : حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبْدٍ الْقَارِيُّ الْقُرَشِيُّ الإِسْكَنْدَرَانِيُّ قَالَ : حَدَّثَنَا أَبُو حَازِمِ بْنُ دِينَارٍ أَنَّ رِجَالاً أَتَوْا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ وَقَدِ امْتَرَوْا فِي الْمِنْبَرِ مِمَّ عُودُهُ فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ وَاللَّهِ إِنِّي لأَعْرِفُ مِمَّا هُوَ ، وَلَقَدْ رَأَيْتُهُ أَوَّلَ يَوْمٍ وُضِعَ وَأَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَرْسَلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِلَى فُلاَنَةَ - امْرَأَةٍ قَدْ سَمَّاهَا سَهْلٌ - مُرِي غُلاَمَكِ النَّجَّارَ أَنْ يَعْمَلَ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ إِذَا كَلَّمْتُ النَّاسَ فَأَمَرَتْهُ فَعَمِلَهَا مِنْ طَرْفَاءِ الْغَابَةِ ثُمَّ جَاءَ بِهَا فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَأَمَرَ بِهَا فَوُضِعَتْ هَاهُنَا ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صَلَّى عَلَيْهَا وَكَبَّرَ وَهْوَ عَلَيْهَا ثُمَّ رَكَعَ وَهْوَ عَلَيْهَا ثُمَّ نَزَلَ الْقَهْقَرَى فَسَجَدَ فِي أَصْلِ الْمِنْبَرِ ثُمَّ عَادَ فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ أَيُّهَا النَّاسُ إِنَّمَا صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا وَلِتَعَلَّمُوا صَلاَتِي.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் எனும் மேடை மீது ஏறி நின்று தொழுது காட்டினார்கள்அதில் நின்றபடியே அதிலேயே ருகூவு செய்தார்கள்பின்னர் பின்வாங்கி நகர்ந்து அதன் அடித்தளத்தில் ஸஜ்தா செய்தனர்தொழுது முடித்ததும், "மக்களே! எனது தொழுகையை நீங்கள் அறிந்து பின்பற்றுவற்காகவே இவ்வாறு செய்தேன்'' என்றும் கூறினார்கள்.  (புகாரி - 917, 377)


தன்னைப் பின்பற்றி தன்னைப் போலவே மக்கள் தொழ வேண்டும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவு சிரத்தை எடுத்துள்ளனர் என்பதை இதிலிருந்து அறியலாம்.மற்றவர்கள் தொழுவதையும் உன்னிப்பாகக் கவனித்து திருத்திக் கொடுப்பதிலும் அவர்கள் அதிக அக்கரை செலுத்தியுள்ளார்கள்

757- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ : حَدَّثَنَا يَحْيَى ، عَنْ عُبَيْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَرَدَّ وَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ فَرَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ ثَلاَثًا فَقَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي فَقَالَ إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا وَافْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا.
ஒருவர் பள்ளிவாசலுக்கு வந்து தொழுது விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார்.  "நீ தொழவே இல்லைஎனவே திரும்பிச் சென்று மீண்டும் தொழு!'' என்றார்கள்அவர் திரும்பிச் சென்று மீண்டும் தொழுது விட்டு வந்து ஸலாம் கூறினார்.  "நீ திரும்பிச் சென்று மீண்டும் தொழு! நீ தொழவே இல்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) மீண்டும் கூறினார்கள்.  "உண்மையுடன் உங்களை அனுப்பியவன் மேல் ஆணையாக! இதைத் தவிர வேறு எப்படித் தொழுவது என்பது எனக்குத் தெரியவில்லைஎனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்'' என்று அவர் கேட்டார்நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் முறையைக் கற்றுக் கொடுத்தார்கள் என்ற விபரம் புகாரி 757, 973, 6251, 6667 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாமும் கற்றுக் கொடுத்து, மற்றவர்களின் தொழுகை முறையையும் கவனித்து நபிகள் நாயகம் (ஸல்) திருத்தியுள்ளதால் அவர்கள் காட்டித் தந்த முறையில் மட்டுமே நமது தொழுகை அமைவது அவசியமாகும்.

நாம் எவ்வாறு இப்போது தொழுகின்றோமோ அது தான் சரியானது, அது தான் நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்தது, அவர்கள் கற்றுத் தராத ஒன்றை நமது முன்னோர்களும் மார்க்க அறிஞர்களும் கூறியிருக்க மாட்டார்கள் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த நம்பிக்கையின் காரணமாக தொழுகையில் தாங்கள் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்ள மறுக்கின்றார்கள்.
தொழுகையில் நபிவழியைப் புறக்கணிப்பது இன்று நேற்றல்லஹிஜ்ரி முதல் நூற்றாண்டிலேயே இந்தச் சமுதாயத்தில் நுழைந்து விட்டது என்பதை விளங்கிக் கொண்டார்கள் என்றால் இவ்வாறு வாதிட மாட்டார்கள்.

529- حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ قَالَ : حَدَّثَنَا مَهْدِيٌّ عَنْ غَيْلاَنَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : مَا أَعْرِفُ شَيْئًا مِمَّا كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم قِيلَ الصَّلاَةُ قَالَ أَلَيْسَ ضَيَّعْتُمْ مَا ضَيَّعْتُمْ فِيهَا.

"நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இருந்த எதனையும் இப்போது நான் காணவில்லை'' என்று அனஸ் (ரலி) கூறினார்கள்அப்போது அவர்களிடம் "தொழுகை இருக்கின்றதே!'' எனக் கேட்கப் பட்டதுஅதற்கு அனஸ் (ரலி, "அதையும் வீணாக்க வேண்டிய அளவுக்கு வீணாக்கி விட்டீர்களே!'' என்று விடையளித்தார்கள்.  (புகாரி 529, 530)

நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்கு அடுத்த காலத்தில் வாழ்ந்தவர்களே நபிகள் நாயகம் (ஸல்) தொழுத முறையில் பலவற்றைக் கை கழுவி விட்டார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றதுநபித்தோழர்களில் சிலர் உயிருடன் வாழும் போதே இந்த நிலை என்றால் நமது முன்னோர்கள் தொழுத முறை நபிவழியில் தான் அமைந்திருக்கும் என்று கருத முடியாதுநமது முன்னோர்கள் நமக்குக் கற்றுத் தந்தவை நபிவழியில் உள்ளது தானா என்று ஆய்வு செய்தே ஆக வேண்டும்.

956- حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ : أَخْبَرَنِي زَيْدٌ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي سَرْحٍ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ وَالأَضْحَى إِلَى الْمُصَلَّى فَأَوَّلُ شَيْءٍ يَبْدَأُ بِهِ الصَّلاَةُ ثُمَّ يَنْصَرِفُ فَيَقُومُ مُقَابِلَ النَّاسِ وَالنَّاسُ جُلُوسٌ عَلَى صُفُوفِهِمْ فَيَعِظُهُمْ وَيُوصِيهِمْ وَيَأْمُرُهُمْ فَإِنْ كَانَ يُرِيدُ أَنْ يَقْطَعَ بَعْثًا قَطَعَهُ ، أَوْ يَأْمُرَ بِشَيْءٍ أَمَرَ بِهِ ثُمَّ يَنْصَرِفُ قَالَ أَبُو سَعِيدٍ فَلَمْ يَزَلِ النَّاسُ عَلَى ذَلِكَ حَتَّى خَرَجْتُ مَعَ مَرْوَانَ وَهْوَ أَمِيرُ الْمَدِينَةِ فِي أَضْحًى ، أَوْ فِطْرٍ فَلَّمَا أَتَيْنَا الْمُصَلَّى إِذَا مِنْبَرٌ بَنَاهُ كَثِيرُ بْنُ الصَّلْتِ فَإِذَا مَرْوَانُ يُرِيدُ أَنْ يَرْتَقِيَهُ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَجَبَذْتُ بِثَوْبِهِ فَجَبَذَنِي فَارْتَفَعَ فَخَطَبَ قَبْلَ الصَّلاَةِ فَقُلْتُ لَهُ غَيَّرْتُمْ وَاللَّهِ فَقَالَ أَبَا سَعِيدٍ قَدْ ذَهَبَ مَا تَعْلَمُ فَقُلْتُ مَا أَعْلَمُ وَاللَّهِ خَيْرٌ مِمَّا لاَ أَعْلَمُ فَقَالَ إِنَّ النَّاسَ لَمْ يَكُونُوا يَجْلِسُونَ لَنَا بَعْدَ الصَّلاَةِ فَجَعَلْتُهَا قَبْلَ الصَّلاَةِ.

ஒரு பெருநாள் தொழுகையில் அன்றைய ஆட்சியாளராக இருந்த மர்வான் மிம்பர் எனும் மேடை அமைக்கின்றார்மேலும் தொழுகைக்கு முன் மிம்பரில் ஏற முயற்சிக்கின்றார்அவரது ஆடையைப் பிடித்து இழுத்து, அபூஸயீத் (ரலி) தடுத்து நிறுத்துகின்றார்கள்அதையும் மீறி, மர்வான் மேடையில் ஏறி உரை நிகழ்த்திய பின்பே தொழுகை நடத்தினார்நபிகள் நாயகம்(ஸல்) தொழுகைக்குப் பின் தான் உரை நிகழ்த்துவார்கள் என்று அபூஸயீத் (ரலி) மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தினார்கள். (புகாரி 956)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து சில ஆண்டுகளிலேயே பெருநாள் தொழுகையில் இரண்டு தவறுகள் ஏற்பட்டு விட்டனபெருநாள் தொழுகைக்கு நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மிம்பர் எனும் மேடை அமைக்கப் படவில்லைமேலும் தொழுகைக்குப் பின்பே உரை நிகழ்த்தப்பட்டதுஇவ்விரு முறைகளும் நல்லோரின் எதிர்ப்பையும் மீறி நடைமுறைப் படுத்தப்பட்டதை இந்நிகழ்ச்சியில் காண்கின்றோம்.
அப்படியானால் நம் முன்னோர்கள் கற்றுத் தந்த தொழுகை முறை நூறு சதவிகிதம் சரியாகவே இருக்கும் என்று எவ்வாறு நாம் கருத இயலும்?

549- حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ قَالَ : أَخْبَرَنَا عَبْدُ اللهِ قَالَ : أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عُثْمَانَ بْنِ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ : سَمِعْتُ أَبَا أُمَامَةَ يَقُولُ صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ الظُّهْرَ ثُمَّ خَرَجْنَا حَتَّى دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَوَجَدْنَاهُ يُصَلِّي الْعَصْرَ فَقُلْتُ يَا عَمِّ مَا هَذِهِ الصَّلاَةُ الَّتِي صَلَّيْتَ قَالَ الْعَصْرُ وَهَذِهِ صَلاَةُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم الَّتِي كُنَّا نُصَلِّي مَعَهُ

நாங்கள் உமர் பின் அப்துல் அஜீஸ் அவர்களுடன் லுஹர் தொழுதோம்உடனே புறப்பட்டு அனஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம்அவர் அஸர் தொழுது கொண்டிருக்கக் கண்டோம்.  "என் சிறிய தந்தையே! இது எந்தத் தொழுகை?'' என்று கேட்டேன்.  "அஸர் தொழுகைநபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இந்த நேரத்தில் தான் நாங்கள் தொழுவோம்'' என்று விடையளித்தார்கள்.  (புகாரி 549)

உமர் பின் அப்துல் அஜீஸ் நான்கு கலீபாக்களுக்குப் பிறகு நல்லாட்சி நடத்தியவர்களில் மிகச் சிறந்தவர்ஆனால் அவரே லுஹர் தொழுகையை அதன் கடைசி நேரம் வரை தாமதம் செய்து தொழுதிருக்கின்றார்கள்லுஹர் தொழுது முடித்தவுடன் அஸர் நேரம் ஆரம்பமாகும் அளவுக்கு தாமதம் செய்திருக்கின்றார்கள் என்றால் மற்ற தலைவர்களும் அறிஞர்களும் எப்படியெல்லாம் மாற்றங்கள் செய்திருப்பார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
உமர் பின் அப்துல் அஜீஸ் மட்டும் தான் இப்படி நடந்து கொண்டார் என எண்ணக் கூடாதுஇத்தகைய ஆட்சியாளர்கள் அதிமதிகம் தோன்றுவார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.

1497 - حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ح قَالَ وَحَدَّثَنِى أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِىُّ وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِىُّ قَالاَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَبِى عِمْرَانَ الْجَوْنِىِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الصَّامِتِ عَنْ أَبِى ذَرٍّ قَالَ قَالَ لِى رَسُولُ اللَّهِ « كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلاَةَ عَنْ وَقْتِهَا أَوْ يُمِيتُونَ الصَّلاَةَ عَنْ وَقْتِهَا ». قَالَ قُلْتُ فَمَا تَأْمُرُنِى قَالَ « صَلِّ الصَّلاَةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ فَصَلِّ فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ ».

"தொழுகையை அதன் நேரத்தை விட்டும் பிற்படுத்தும் அல்லது சாகடிக்கும் அதிகாரிகளை அடைந்தால் எவ்வாறு நடந்து கொள்வாய்?'' என்று நபிகள் நாயகம் (ஸல்) என்னிடம் கேட்டனர்.  "நீங்கள் என்ன கட்டளையிடுகின்றீர்கள்?'' என்று நான் கேட்டேன்அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "உரிய நேரத்தில் அத்தொழுகையைத் தொழுது விடுஅவர்களின் தொழுகையை நீ அடைந்தால் அவர்களுடன் தொழுஅது உனக்கு உபரியாக அமையும்'' என விடையளித்தார்கள்.  (முஸ்லிம் 1027)

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அவர்கள் தொழுது காட்டிய முறை மக்களால் மறக்கடிக்கப்படும், புறக்கணிக்கப்படும் என்பதை இந்த நிகழ்ச்சிகளில் இருந்து அறிந்து கொள்கின்றோம்.
காலம் செல்லச் செல்ல ஒவ்வொரு அறிஞரும் தமக்குத் தோன்றியவாறெல்லாம் தொழுகை முறைகளை உருவாக்கினார்கள்மக்களும் கண்களை மூடிக் கொண்டு அதை அப்படியே பின்பற்றலானார்கள்அதன் காரணமாகவே தொழுகை முறையில் நம்மிடையே இவ்வளவு வேறுபாடுகள் உள்ளன.
ஆனாலும் தங்கள் நடவடிக்கைகளைத் தான் மக்கள் மாற்றி விட்டனரே தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத முறை எது என்பதைக் கண்டு பிடிக்கும் வகையில் ஹதீஸ்கள் பாதுகாக்கப் பட்டுள்ளன.
நமது தொழுகையில் நாம் செய்யும் எந்தச் செயல் சரியானது? எது தவறானது? என்பதை இப்போதும் நம்மால் கண்டு பிடிக்க முடியும்நம்மைத் திருத்திக் கொள்ள முடியும்.
இந்த அடிப்படையில் தான் வுழுவின் சட்டங்கள் இங்கே விளக்கப் படவுள்ளன.
வளரும் இன்ஷா அல்லாஹ்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger