Friday, June 8, 2012

நபி வழியில் நம் வுழு (01)

தொகுப்பு

முஹம்மது கைஸான் (தத்பீகி)


இஸ்லாத்தின் பெயரால் நாம் எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அக்காரியம் திருக்குர்ஆனிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலிலும் உள்ளபடி அமைந்திருக்க வேண்டும். திருக்குர்ஆனிலும் நபிவழியிலும் இல்லாத காரியங்கள் இஸ்லாத்தின் காரியங்களாக இருக்க முடியாது.

தொழுகை உள்ளிட்ட அனைத்து வணக்க முறைகளையும் நமக்குக் கற்றுத் தருவதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அவர்களும் தமது பணியில் எந்தக் குறைவும் வைக்காமல் முழுமையாக நமக்குச் சொல்லித்தந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் வாழும் போதே இம்மார்க்கத்தை இறைவன் முழுமைப் படுத்தி விட்டான்.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا (سورة المائدة /3 )

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)

4589 - حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَعَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ الْهِلاَلِىُّ جَمِيعًا عَنْ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ قَالَ ابْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ حَدَّثَنَا أَبِى عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ أَحْدَثَ فِى أَمْرِنَا هَذَا مَا لَيْسَ مِنْهُ فَهُوَ رَدٌّ ». أخرجه مسلم / دار الجيل بيروت + دار الأفاق الجديدة ـ بيروت

நமது கட்டளையில்லாமல் எந்தச் செயலையேனும் யாரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (3243)

எனவே நமது தொழுகை முறையும் நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தந்த வழியில் மட்டுமே அமைய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் செய்தார்கள் என்பது தெளிவாகத் தெரியும் போது அதற்கு மாற்றமாக எவ்வளவு பெரிய மேதைகள், இமாம்கள் கூறினாலும் அவற்றை நாம் நிராகரித்து விட வேண்டும்.

824 - حدثنا عبد بن حميد أخبرني يعقوب بن إبراهيم بن سعد حدثنا أبي عن صالح بن كيسان عن ابن شهاب أن سالم بن عبد الله حدثه : أنه سمع رجلان من أهل الشام وهو يسأل عبد الله بن عمر عن التمتع بالعمرة إلى الحج فقال عبد الله بن عمر هي حلال فقال الشامي إن أباك قد نهى عنه فقال عبد الله بن عمر أرأيت إن كان أبي نهى عنها وصنعها رسول الله صلى الله عليه و سلم أأمر أبي نتبع أم أمر رسول الله صلى الله عليه و سلم ؟ فقال الرجل بل أمر رسول الله صلى الله عليه و سلم فقال لقد صنعها رسول الله صلى الله عليه و سلم أخرجه الترمذي / دار إحياء التراث العربي – بيروت


தமத்துஉ முறையில் ஹஜ் செய்வதை உமர் (ரலி) தடை செய்திருந்தார்கள்.  அப்போது அது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர், "அது அனுமதிக்கப்பட்டதே!'' என்று கூறினார். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், "உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!'' என்று கூறினார்.
அதற்கு இப்னு உமர் (ரலி), "என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபி (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்'' என்றார். அப்போது இப்னு உமர் (ரலி), "நபி (ஸல்) அவர்கள் தமத்துஉ முறையில் ஹஜ் செய்துள்ளார்கள்'' என்று விடையளித்தார்.
அறிவிப்பவர் : ஸாலிம், நூல் : திர்மிதீ (824)

உமர் (ரலி) அவர்கள் தமது தந்தையாக இருந்தும், ஜனாதிபதியாக இருந்தும், சொர்க்கத்திற்கு நற்செய்தி சொல்லப்பட்ட பத்து நபர்களில் ஒருவராக இருந்தும், அவரது கருத்துக்கேற்ப சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தி வந்திருந்தும் அவர் கூறுவது நபிகள் நாயகம் (ஸல்) செய்த முறைக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்க முடியாது என்று அவரது மகன் பிரகடனம் செய்கின்றார்.
இது தான் உண்மை முஸ்லிம்களின் உணர்வாக இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பாடம் கற்ற நபித்தோழர்களின் நிலை இப்படித் தான் இருந்தது.

1434 - أخبرنا قتيبة قال حدثنا الليث عن بن شهاب عن عبد الله بن أبي بكر بن عبد الرحمن عن أمية بن عبد الله بن خالد أنه قال لعبد الله بن عمر : إنا نجد صلاة الحضر وصلاة الخوف في القرآن ولا نجد صلاة السفر في القرآن فقال له بن عمر يا بن أخي إن الله عز و جل بعث إلينا محمدا صلى الله عليه و سلم ولا نعلم شيئا وإنما نفعل كما رأينا محمدا صلى الله عليه و سلم يفعل . سنن النسائي بأحكام الألباني / مكتب المطبوعات الإسلامية - حلب

"உள்ளூரில் எவ்வாறு தொழுவது? அச்சமான நேரத்தில் எவ்வாறு தொழுவது என்பதை நாங்கள் குர்ஆனில் காண்கிறோம். ஆனால் பயணத்தில் எவ்வாறு தொழுவது என்பதைக் காணவில்லையே!'' என்று இப்னு உமரிடம் நான் கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி), "என் சகோதரர் மகனே! நாங்கள் எதையுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் எங்களிடம் முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். முஹம்மத் (ஸல்) அவர்கள் எவ்வாறு செய்யக் கண்டோமோ அவ்வாறே நாங்களும் செய்வோம்'' என்று விடையளித்தார்கள்.(நஸயீ 1434)

நமது தொழுகை உள்ளிட்ட அனைத்து வணக்கங்களும் நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழியில் தான் அமைய வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.
மற்ற வணக்கங்களை விட தொழுகையைக் கற்றுக் கொடுப்பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார்கள்.

631- حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ قَالَ : حَدَّثَنَا أَيُّوبُ ، عَنْ أَبِي قِلاَبَةَ قَالَ : حَدَّثَنَا مَالِكٌ أَتَيْنَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ يَوْمًا وَلَيْلَةً ، وَكَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم رَحِيمًا رَفِيقًا فَلَمَّا ظَنَّ أَنَّا قَدِ اشْتَهَيْنَا أَهْلَنَا ، أَوْ قَدِ اشْتَقْنَا سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا فَأَخْبَرْنَاهُ قَالَ ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ فَأَقِيمُوا فِيهِمْ وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ - وَذَكَرَ أَشْيَاءَ أَحْفَظُهَا ، أَوْ لاَ أَحْفَظُهَا - وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ أخرجه البخاري / دار الشعب - القاهرة

மாலிக் பின் ஹுவைரிஸ் (ரலி) தலைமையில் வெளியூர் இளைஞர்கள் இஸ்லாத்தை ஏற்க வந்தனர். அவர்களை 20 நாட்கள் தம்முடன் தங்க வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவ்விளைஞர்கள் திரும்பிச் செல்லும் போது, "என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்'' எனக் கூறி அனுப்பினார்கள். (புகாரி - 631, 6008, 7246)

நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழியில் மட்டும் தான் நமது தொழுகை அமைந்திருக்க வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்.Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger