Wednesday, May 9, 2012


ஷீஆக்களின் சீர்கெட்ட கொள்கைகள் (12)

அரபு மூலம்:

அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது (அஸ்ஸலபி)

தமிழாக்கம் :

முஹம்மது கைஸான் (தத்பீகி)

அஹ்லுஸ் சுன்னாவிற்கும், ஷீஆக்களுக்குமிடையிலுள்ள
கருத்து முரண்பாடுகள்

எமக்கும், அவர்களுக்கும் பிக்ஹ் சட்டங்களில் மாத்திரமன்றி, அடிப்படை விடயங்களிலும் கருத்து முரண்பாடுகள் உள்ளன என நிழாமுத்தீன் முஹம்மது அல் அஃழமி தனது 'அஷ்ஷீஆ வல்முத்ஆ' எனும் நூலின் முன்னுரையில் பின்வரும் அகீதா தொடர்பான முரண்பாடுகளைக் குறிப்பிடுகிறார்.
அல்குர்ஆன் திரிபுக்குட்படுத்தப்பட்டு, அதில் குறையுள்ளது என ராபிழாக்கள் நம்புகின்றனர்.
அல் குர்ஆன் எந்தக் குறையுமின்றி, அது பூரணத்துவமிக்கதாக உலகம் முடியும் வரை எந்த விதமான மாற்றமோ,குறைகளோ வர முடியாதவாறு பாதுகாக்கப்பட்டுள்ளது என நாம் கூறுகிறோம்.

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ (9) سورة الحجر            
நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம். (அல்குர்ஆன் : 15:09)
 'சில ஸஹாபாக்களை தவிர ஏனைய அனைத்து ஸஹாபாக்களும் நபியவர்களின் மரணத்தின் பின் மதம் மாறி, வந்த வழியே போய், மார்கத்திற்கும், தமது பொறுப்புகளுக்கும் சதி மோசம் செய்து விட்டனர்' என ராபிழாக்கள் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக அபூபக்கர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) போன்றவர்களை  காபிர்கள் என்கின்றர்.
நபியவர்களுக்குப் பின் ஸஹாபாக்கள் தான் மனிதர்களில் சிறந்தவர்கள். அவர்கள் அனைவரும் நீதமானவர்கள். ஒரு போதும் நபியின் மீது பொய் சொல்லாதவர்கள்.அவர்களின் அறிவிப்புக்கள் நம்பகத்தன்மை கொண்டவை என நாம் சொல்கிறோம்.

12 இமாம்களும் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள். மறைவானவற்றை அறிந்தவர்கள். மலக்குகள், நபிமார்கள், ரஸுல்மார்கள் பெற்ற அனைத்து அறிவையும் அவர்கள் பெற்றவர்கள். நடந்தது, நடக்விருப்பது, உலக மொழிகள் அனைத்தையும் அறிந்தவர்கள். அவர்களுக்கு எதுவும் மறையாது. முழுப் பூமியும் அவர்களுக்கே சொந்தம் என ராபிழாக்கள் கூறுகின்றனர்.
அவர்களும் எம்மைப் போன்ற மனிதர்கள்தான். அவர்களில் கலீபாக்கள்,அறிஞர்கள், சட்டத்துறை சார்ந்தோர் உள்ளனர். அவர்களிடம் இல்லாத அம்சங்களை நாம் அவர்களுடன் சேர்ப்பதில்லை. நம்மைப் போன்ற அந்த மனிதர்களுக்கு இறையம்சங்களை வழங்கி, அவர்களிடம் 
பரகத் தேடுவதும் இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது -ஹராம் - என்கிறோம் 

வளரும் இன்ஷா அல்லாஹ்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger