Saturday, February 25, 2012


ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள் (11)

அரபு மூலம்:

அறிஞர் அப்துல்லாஹ் பின் முஹம்மது (அஸ்ஸலபி)


தமிழாக்கம் :
முஹம்மது கைஸான் (தத்பீகி)

கர்பலாவைத் தரிசிப்பது பற்றி ராபிலாக்களின் நிலை

ஷீஆக்கள் தங்களின் இமாம்களின் கப்ருகள் எனக் கருதக்கூடிய இடங்களை புனிதமானதாகக் கருதுகின்றனர். கூபா, கர்பலா, கும் போன்ற இடங்களை, மக்காவிலுள்ள முஸ்லிம்களின் கிப்லாவைப் போன்றதாகவே கருதுகின்றனர்.


'அல்லாஹ்வுடைய ஹரம் மக்காவாகும். ரஸுலுடைய ஹரம் மதீனாவாகும், அமீருல் முஃமீனுடைய ஹரம் கூபாவாகும், எம்முடைய ஹரம் கும் ஆகும்' என ஸாதிக் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
கஃபாவை விட கர்பலா மிகச் சிறப்புக்குரியது என ஷீஆக்கள் நினைக்கின்றனர். பிஹாருல் அன்வார் எனும் நூலில் அபூ அப்தில்லாஹ் என்பவர் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி இவ்வாறு கூறுகிறார்.
 'அல்லாஹ், கஃபதுல்லாவைப் பார்த்து, கர்பலாவுடைய மண் இல்லா விட்டால்உனக்கு சிறப்பேதுமில்லை. கர்பலா, பூமியில் இல்லா விட்டால் உன்னை படைத்திருக்கமாட்டேன். எனவே, நீ தாழ்ந்தவனாக, பெருமையில்லாதவனாக, பாவங்கள் செய்யாதவனாக கர்பலாவுக்கு சிரம் தாழ்த்து. இல்லாவிட்டால் உன்னுடன் நான் கோபித்துக் கொண்டு உன்னை நரகில் தூக்கி எறிவேன்'என்று அல்லாஹ் கூறியதாக இவர் கதையளக்கிறார்.

இஸ்லாத்தின்  ஐந்தாவது கடமையான ஹஜ் செய்வதை விட, கர்பலாவை ஸியாரத் செய்வது சிறந்தது என ராபிழாக்கள் நம்புகின்றனர்.
பஷீர் என்பவர் அப்துல்லாஹ் விடம், 'சில போது எனக்கு ஹஜ் தப்பிவிடுகிறது. அப்போது நான் ஹுஸைனுடைய கப்ரில் அதை செய்யவா? எனக் கேட்டேன். அதற்கு அவர், 'பஷீரே! மிக்க நல்லது.' எந்த முஃமினாவது பெருநாள் தினமல்லாத வேறு நாட்களில் ஹுஸைன் (ரழி) அவர்களின் கடமைகளை அறிந்தவராக, அவரின் கப்ரடிக்கு வந்தால் அவருக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட 20 ஹஜ் செய்த நன்மைகளும், 20 உம்ரா செய்த நன்மைகளும், நபியோடு, அல்லது இமாமோடு சேர்ந்து 20 யுத்தம் செய்த நன்மைகளும் வழங்கப்படும். அரபாவுடைய நாளில் கப்ருக்கு வந்தால், 1000 உம்ராக்கள்,1000 ஹஜ்ஜுகள் செய்த, நபியுடன் அல்லது இமாமுடன் சேர்ந்து போர் செய்த நன்மை வழங்கப்படும்' என்று மஜ்லிஸி தனது 'பிஹாருல் அன்வார்' எனும் நூலில் குறிப்பிடுகிறார்.
மஜ்லிஸி என்பவர் தனது நூலில், ஹுஸைனை கர்பலாவில் சந்தித்தவர்கள் பரிசுத்தமானவர்கள் ஆவர். அரபா நாளில் அங்கு இருப்பவர்கள் விபச்சாரத்தின் மூலம் பிறந்தவர்கள். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அப்துல்லாஹ்விடம் அலி பின் அஸ்பாத் கூறுகிறார், அரபா இரவில் ஹுஸைன் அவர்களின் கப்ரடியை தர்சிப்பவர்களை இறைவன் பார்ப்பான் என்றார். அதற்கு நான், அரபாவில் தரிப்பவர்களைப் பார்பதற்கு முன்பா? என்றேன். அதற்கு அவர் 'ஆம்' என்றார். அது எப்படி என்றேன். அவர்கள் விபச்சாரத்தின் மூலம் பிறந்தவர்கள், ஷீஆக்களோ விபச்சாரத்தின்  மூலம் பிறந்தவர்கள் ல்லர்' என்று எழுதியுள்ளார்.
பள்ளியில் தொழுவதை விட அவரின் கப்ரில் தொழுவது சிறப்புமிக்கது. அத்தோடு இமாம்களின் கப்ரடியில் தொழுவது முஸ்ஹப்பாகும்.
ஆலி (ரழி) அவர்களின் கப்ரில் தொழுவது 2000 மடங்கு மிகச் சிறப்பானது எனவும் சீஸ்தானியின் மின்ஹாஜூஸ் ஸாலிஹீன் என்ற நூலில் உள்ளது.

 மஸாபீஹுல் ஜினான் எனும் நூலின் ஆசிரியர் அப்பாஸ் அல்காஷானி என்பவர் கர்பலாவை எல்லை மீறி புகழ்ந்துள்ளதைக் காணலாம்.
'இஸ்லாத்தில், பூமியில் சிறந்த இடம் கர்பலா தான் என்பதில் சந்தேகம் இல்லை.ஏனெனில், மற்ற இடங்களுக்கு இருக்கிற சிறப்புக்களை விட, இந்த இடத்திற்கு சிறப்புச் சேர்க்கும் அறிவிப்புக்கள் நிறையவே உள்ளன என வாதிடுகிறார்.
மேலும் அவர், பரகத் பொருந்திய இறைவனுக்குக் கட்டுப்பட்ட, இறைவனால்   ஹரமாக தேர்ந்தேடுக்கப்பட்ட பூமி கர்பலாவாகும் இது அல்லாஹ்வுடைய அவன் தூதருடைய, இஸ்லாத்தினுடைய, வணக்கம், பிரார்த்தனை செய்வதற்குரிய அல்லாஹ்வினால் விரும்பப்பட்ட இடமாகும். இப்பூமியின் மணலில் அல்லாஹ் நிவாரணத்தை வைத்துள்ளான். உலகில் எந்த இடத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு கர்பலாவுக்குண்டு என எழுதுகிறார்.
 ஷெய்க் முபீத் எனும் முஹம்மது நுஃமான் என்பவர் தனது மிஸார் என்ற நூலில், 'கூபாப் பள்ளியின் சிறப்புப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
'கூபாப் பள்ளியின் சிறப்புக்களை மக்கள் அறிவார்களானால், தூர இடங்களில் இருந்தும் விரைந்து வருவார்கள். அங்கு தொழும் ஒரு பர்ளுத் தொழுகை ஒரு ஹஜ்ஜூக்கு சமன் ஆகும். அங்கு தொழும் ஒரு நபில் தொழுகை உம்ராவுக்குச் சமன் ஆகும்.'
 ஹூசைன் (ரழி) அவர்களின் கப்ரை தரிசிக்க வந்த ஒரு மனிதன், தனது கைகளை உயர்த்தி, 'என்னுடைய கால் பாதங்கள் சறுகாமல் உங்களிடம் ஹிஜ்ரத் வந்துள்ளேன். உங்கள் மூலம் தான் கவலைகள் நீங்குகின்றன. உங்களைத்தான் அல்லாஹ் புகழ்ந்துள்ளான் என்பதை நான் உறுதியோடு சொல்கிறேன். அருளும், பூமியின் பிடிப்பும், மலைகளின் உறுதியும் உங்கள்; மூலமே நடை பெறுகின்றன. உங்கள் பொருத்தத்துடன் எனது அல்லாஹ்வை முன்னோக்கினேன். தலைவனே! எனது பாவங்களை மன்னித்து விடு! எனது தேவைகனை நிவர்த்தி செய்து விடு!
இவ்வாறெல்லாம் கிதாபுல் மிஸாரில் முபீத் என்பவர் எழுதிவைத்துள்ளார்.

அன்பின் சகோதரர்களே!
ஷீஆக்கள் தங்கள் பாவங்களை மன்னிக்கும் படியும், தேவைகளை நிறை வேற்றித் தரும்படியும் மனிதர்களிடம் கையேந்தி எவ்வாறெல்லாம் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றனர்.
 'அல்லாஹ்வைத் தவிர மன்னிப்பு வழங்குபவன் யார் உண்டு?' என்று அல்லாஹ் கேட்கிறான்.
இந்த இணைவைப்பை விட்டும் அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக! 

இன்ஷா அல்லாஹ் வளரும் 
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger