Tuesday, November 15, 2011

ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள் (10)

அரபு மூலம்:

அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி

தமிழாக்கம் 
    முஹம்மது கைஸான் (தத்பீகி)


முத்ஆ- வாடகைத் - திருமணம்  அதன் சிறப்புப் பற்றி ராபிழாக்களின் நிலை


முத்ஆ திருமணத்திற்கு ராபிழாக்களிடம் தனிச் சிறப்பு உள்ளது.
இக்கொடூர விபச்சாரத்திலிருந்து அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக!
 'மன்ஹஜூஸ் ஸாதிகீன்' எனும் நூலில் பத்ஹுல்லாஹில் கஷானி என்பவர், ஸாதிக் சொன்னதாக பின்வருமாறு கூறுகிறார்.
 'முத்ஆ எனதும், எனது முன்னோர்களினதும் மார்க்கமாகும், யார் அதனை நடைமுறைப்படுத்துகிராறோ, அவர் எமது மார்க்கத்தை நடைமுறைப்படுத்தியவர் ஆவார்.யார் இதனை நிராகரிக்கிராறோ, அவர் எமது மார்க்கத்தை நிராகரித்தவராவார். அவர் வேறு மார்க்கத்தைப் பின்பற்றுபவர். நிரந்தர மனைவி மூலம் பெறப்படும் குழந்தையை விட, வாடகை மனைவி மூலம் பெறப்படும் குழந்தை மிகச் சிறப்பானது. முத்ஆவை நிராகரிப்பவன் மதம் மாறிய முர்தத் ஆவான்.
 'இறைவன் ஷீஆக்களாகிய எங்களுக்குப் போதையூட்டுபவைகளைத் தடுத்துள்ளான். அதற்கு நிகராக முத்ஆத் திருமணத்தை ஆக்கியுள்ளான்' என 'மன் லா யஹ்லுருஹுல் பகீஹ்' எனும் நூலில் குமி என்பவர் அப்துல்லாஹ் சொன்னதாக இதைக் குறிப்பிடுகிறார்.
'ஒரு விடுத்தம் முத்ஆ திருமணம் செய்தால் மூன்றில் ஒரு பகுதி நரகத்திலிருந்தும், இரண்டு விடுத்தம் செய்தால், மூன்றில் இரண்டு பகுதி நரகத்திலிருந்தும், மூன்று  விடுத்தம் செய்தால், முழமையாக நரகத்திலிருந்து விடுதலை செய்யப்பாடுவார்' என்று 'மன்ஹஜூஸ் ஸாதிகீன்' எனும் தப்ஸீரில் பத்ஹூல்லாஹ் கஸானி எனபவர் கூறுகின்றார்.
ஒரு முறை முத்ஆ திருமணம் செய்தால் இறைவனின் கோபத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவார்,இரண்டு விடுத்தம் செய்தால் மறுமையில் நல்லவர்களுடன் எழுப்பப்டுவார்,மூன்று விடுத்தம் செய்தால் அவருடைய அந்தஸ்து என்னுடைய அந்தஸ்தைப் போன்றது' எனவும் மேற்குறிப்பிடப்பட்ட தப்ஸீரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், 'ஒரு முறை முத்ஆத் திருமணம் செய்தவர் ஹூஸைனுடைய அந்தஸ்தைப் பெற்றவராவார். இரண்டு விடுத்தம் செய்தால் ஹஸனுடைய அந்தஸ்தைப் பெற்றவராவார். மூன்று விடுத்தம் செய்தால், அவருடைய அந்தஸ்து என்னுடைய அந்தஸ்தைப் போன்றது' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதாகவும் அதில் உள்ளது.
ராபிழாக்களிடம் 'முத்ஆ' திருமணத்திற்;கு எல்லையோ, எண்ணிக்கையோ இல்லை.
'அபூ அப்துல்லாஹ் என்பவரிடம் முத்ஆத் திருமணம் நான்கா எனக் கேட்டேன். அதற்கு அவர் அவர்களில் 1000 பேரை வேண்டுமானாலும் முடி, ஏனெனில், அவர்கள் வாடகைப் பெண்களே!' என்றார் என்று புரூவுல் காபி, அத் தஹ்தீப், அல் இஸ்திப்ஸார் போன்ற நூல்களில் உள்ளது.
 'அது நான்குடன் மட்டுப்படுத்தப்படவில்லை. ஏனெனில், அவர்கள் தலாக் சொல்லப்படவோ, அனந்தரக்காரர்களாக்கப்படவோ முடியாது. அவர்கள் வாடகைப் பெண்களே' என்று ஜஃபர் சொன்னதாக முஸ்லிம் சொல்லுகிறார்.
  وَالَّذِينَ هُمْ لِفُرُوجِهِمْ حَافِظُونَ (5) إِلَّا عَلَى أَزْوَاجِهِمْ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ (6) فَمَنِ ابْتَغَى وَرَاءَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْعَادُونَ (7المؤمنون5-8 
'இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர  தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.'  (சூரா அல்முஃமினூன் 5-7)
இந்த வசனம் ஆகுமாக்கப்பட்ட பெண் தான் மனைவி என்பதைத் தெளிவுபடுத்துவதோடு, அதை விட மேலதிகமாத் தேடுவது வரம்பு மீறும் செயல் என்று சொல்கிறது.
 வாடகை - முத்ஆ திருமணப் பெண் மனைவியாகவுமாட்டாள்.  அவள் மூலமாகக் கிடைக்கும் பிள்ளைகள் வாரிசாகவுமாட்டார்கள்.  அவளுக்குத் தலாக்கும் கிடையாது. அவளோ விபச்சாரி. அல்லாஹ் பாதுகாப்பானாக.
   ராபிழாக்கள் முத்ஆ திருமணம் ஆகுமாக்கப்பட்டுள்ளதற்கு சூரா நிஸாவின் பின்வரும் வசனங்களையே ஆதாரமாகக் கொள்வதாக அறிஞர் அப்துல்லாஹ் பின் ஜிப்ரீன்; அவர்கள் கூறுகின்றார்.
'உங்கள் அடிமைப் பெண்களைத் தவிர கணவனுள்ள பெண்களும் (மணமுடிக்க தடுக்கப்பட்டுள்ளனர்.) இது, அல்லாஹ் உங்களுக்கு விதித்த சட்டம். இவர்களைத் தவிர மற்றவர்களை விபச்சாரமாக இல்லாமல் உங்கள் பொருட்களைக் கொடுத்து திருமணம் செய்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் (திருமணத்தின் மூலம்) யாரிடம் இன்பம் அனுபவிக்கிறீர்களோ, அவர்களுக்குரிய மணக் கொடைகளை கட்டாயமாக அவர்களிடம் கொடுத்து விடுங்கள். நிர்ணயம் செய்த பின் ஒருவருக்கொருவர் திருப்தியடைந்தால், உங்களுக்குக் குற்றம் இல்லை. அல்லாஹ் அறிந்தவனாகவும்  ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.
'(சூரா அந்நிஸா 24)

' நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக்கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால்  நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்.

'ஒரு மனைவியை விவாக ரத்துச் செய்து  இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால், அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! அக்கிரமமாகவும்  பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?'

'உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்து முடிந்ததைத் தவிர. இது வெட்கக்கேடானதும்  வெறுப்புக்குரியதும்  கெட்ட வழியுமாகும்'

உங்கள் அன்னையர்உங்கள் புதல்வியர்உங்கள் சகோதரிகள்உங்கள் தந்தையரின் சகோதரிகள்உங்கள் அன்னையின் சகோதரிகள்சகோதரனின் புதல்விகள்சகோதரியின் புதல்விகள்உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர்பால்குடிச் சகோதரிகள்  உங்கள் மனைவியரின் அன்னையர்நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள்  ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும்  (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும்  நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.'

ஆகிய வசனங்கள் திருமணத்தையே கூறுகின்றன.

  'இவர்களைத் தவிர ஏனைய பெண்கள் திருமணம் முடிப்பதற்கு ஆகுமாக்கப்பட்டுள்ளனர்' என அல்லாஹ் கூறியுள்ளான்.
'திருமணம் முடித்தால் அவர்களின் மஹரைக் கொடுத்து விடுங்கள். அதில் அவர்கள் ஏதாவது மனம் விரும்பித் தந்தால் அதை எடுப்பதில் எந்தத் தவறுமில்லை' என மேற்படி குர்ஆன் வசனங்களுக்கு இப்படித்தான் ஸஹாபாக்களும் அவர்களுக்குப் பின் வந்தவர்களும் விளக்கம் கொடுத்துள்ளனர்.
 அதாவது, 'முத்ஆ திருமணம் செய்பவர் சிறந்த குடும்பத்துப் பெண்ணாக இருந்தால், அக்குடும்பத்தினர் தலை குனிவுக்கு ஆளாகுகின்றனர்' என்று தஃதீபுல் அஹ்காம் என்ற நூலின் ஆசிரியர் தூசி என்பவர் கூறுகிறார்.
 இது மாத்திரமன்றி 'பெண்களின் மலத் துவாரத்தில் உறவு கொள்ளலாம்;' எனவும் ராபிழாக்கள் கூறுகின்றனர். 'நான் ரிழாவிடம் உங்கள் அடிமைகளில் ஒருவன் வெட்கத்தின் காரணமாக கேட்க முடியாத ஒரு கேள்வியைக் கேட்கும் படி சொன்னார் என்ற போது, அது என்ன வென்று ரிழா கேட்டார். அதற்கு நான் 'ஓர் ஆண் ஒரு பெண்ணின் பின் துவாரத்தில் ஈடுபட முடியும் தானே என்றேன்.' அதற்கு அவர் 'முடியும்' என்றார்.   

இன்ஷா அல்லாஹ் வளரும்

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger