Thursday, July 21, 2011


நூல் அறிமுகம்  

 முஹம்மது கைஸான் (தத்பீகி)
இமாம்பல்கலைக்கழகம்.ரியாத்.சவூதி அரேபியா 
அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ள அருள்களில் முக்கியமான ஒன்றாக குழந்தைப் பாக்கியம் உள்ளது. குழந்தைப்பேறு இல்லாத வாழ்க்கை பூக்கள் இல்லாத வெறுமையான நந்தவனத்திற்கு ஒப்பானதாகும்.

மனித வாழ்வில் மிக முக்கிய கட்டமாக சிறு பராயம் அமைந்துள்ளது. அப்பருவத்தில் ஊட்டப்படும் பாடமும் காட்டப்படும் வழியும் தான் அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கப்போகிறது. எனவே குழந்தைப் பாக்கியமுடையோர் அவர்களை சரியான வழியில் நெறிப்படுத்த வேண்டும். அப்பாவித்தனம் நிறைந்த சின்னஞ் சிறார்களை வீணே விட்டவிடாது அவர்களை ஒழுக்க சீலமுள்ளவர்களாக நேரிய செல் நெறியில் ஆற்றுப்படுத்துவதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

அவர்கள் மீதுள்ள உரிமைகளை நிறைவேற்றுவதில் மிகுந்த கரிசனை செலுத்துவதோடு அவர்களுக்கு அன்பும் அதரவும் காட்டுவதை மிகவும் வலியுறுத்துகிறது. ஆகவே சிறார்களை இஸ்லாத்தின் நிழலில் ஆரோக்கியமானவர்களாக உருவாக்கினால் அவர்கள் பெற்றோரின் வாழ்வை அழகாக்கி அர்த்தப்படுத்துகிறார்கள்.

எனவே சிறார்களின் சீரான இயல்புகள் பாதிக்கப்படாதவாறு பராமரித்து எதிர்கால சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும். அதற்கான வழிகாட்டல்கள் அவசியம் என்பதை உணர்ந்த நண்பர் பன்னுலாசிரியர் மவ்லவி ஹபீழ் ஸலபி அவர்கள் சிறுவர் இலக்கிய ஆக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுவரை அவர் மூன்று சிறுவர் இலக்கிய நூல்களை கதை வடிவில் வெளியிட்டுள்ளார்.அவற்றில் இரண்டை அண்மையில் சன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது.

சிறார்களின் ஒழுக்க வாழ்வை சீரமைக்கும் வகையிலும் வாசிப்பார்வத்தை அதிகரிக்கும் வகையிலும் நடந்த கதைகள் என்ற சிறுவர்களுக்கான கதை நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.முற்றிலும் நபிமார்கள் மற்றும் நபித்தோளர்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை கதை வடிவாக்கியுள்ளார் நன்பர் ஹபீல் அவர்கள்.
உங்கள் குழந்தைகளின் வாசிப்பார்வத்தை அதிகரிக்கவும் இஸ்லாமிய அறிவை வளர்த்துக் கொள்ளவும் இந்நூல்கள் பெரிதும் துணை புரியும் என்பதால் வாங்கி வாசிக்கத் தூண்டுமாறு  கேட்டுக் கொள்கின்றேன்.



Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger