ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள்.(15)
அரபு மூலம்
அறிஞர் அப்துல்லாஹ் (அஸ்ஸலபி)
தமிழ் வடிவம்
முஹம்மது கைஸான் (தத்பீகி)
அஹ்லுஸ் ஸுன்னா,ராபிழா
ஆகியோரிடையே தக்ரீப் பற்றிய கண்ணோட்டம்
ஷீஆக்களுடன் நெருங்கிப் பழகுவது தொடர்பாக பேராசிரியர்
நாஸிர் அல்கபாரி என்பவரின் 'மஸ்அலத்துல் தக்ரீப்' ஏழாவது கட்டுரை மாத்திரம் இது பற்றி விளக்குவதற்குப்
போதுமானதாக உள்ளது. அதிலிருந்து சில கருத்துக்களை நோக்குவோம்.
அல்லாஹ்வுடைய வேதத்தில் குறைகாண்கின்ற வேத வசனங்களுக்குப் பொருந்தாத கருத்துக்களை
கொடுக்கின்ற அல்குர்ஆனுக்குப் பின் இனோர் வேதம் தங்களது இமாம்களுக்கு இறக்கப்பட்டதாக
சொல்கின்றவர்களுடன் எப்படி இணைய முடியும்?
'இமாமத், நபித்துவத்திற்கு ஒப்பானது, இமாம்கள் அவர்களிடத்தில் நபிமார்களைப் போன்று சிறப்பானவர்கள்'
என ஷீஆக்கள் நம்புகின்றனர்.
தூதுத்துவம் பற்றி உண்மைக்கு மாற்றமான கருத்துக்களை கொடுக்கின்றனர். தூதுத்துவம் என்பது
இமாம்களுக்கு வழிப்படுவதே! ஷிர்க் என்பது ஏனையோருக்கு வழிப்படுவதே என்கின்றனர். நபியவர்களின்
சிறப்புக்குரிய ஸஹாபாக்களை காபிர் என்கின்றனர். 3 பேர், அல்லது 4 பேர், அல்லது 7 பேரைத் தவிர எல்லா ஸஹாபாக்களையும் மதம் மாறியவர்கள்
என நிந்திப்பதோடு, இஸ்மத், இமாமத் போன்ற அம்சங்களில் எமது தூய கொள்கையை விமர்சித்து,
அவர்களின் ரஜ்இய்யா,
,அல் பதா தகிய்யா,போன்ற தவறான கோட்பாடுகளை
முதன்மைப்படுத்துகின்றனர்.






