நபி வழியில் நம் வுழு (07)

Tuesday, November 6, 2012

வுழுவின் சிறப்புக்கள்  

பிரித்துக்காட்டும் வுழு

136- حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ : حَدَّثَنَا اللَّيْثُ عَنْ خَالِدٍ ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ قَالَ رَقِيتُ مَعَ أَبِي هُرَيْرَةَ عَلَى ظَهْرِ الْمَسْجِدِ فَتَوَضَّأَ فَقَالَ إِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ : إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ آثَارِ الْوُضُوءِ فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ./  أخرجه البخاري

'பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூ ஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன்.
அபூ ஹுரைரா (ரலி)  வுழுச் செய்தார்கள். (வுழுச் செய்து முடித்ததும்) 'நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் வுழுவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்' என்றார்கள்" என நுஅய்ம் அல் முஜ்மிர் (ரலி) அவர்கள்  அறிவிக்கிறார்கள்.                                   
ஆதாரம் புஹாரி136


367 - حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَسُرَيْجُ بْنُ يُونُسَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ - قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ - أَخْبَرَنِى الْعَلاَءُ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- أَتَى الْمَقْبُرَةَ فَقَالَ « السَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ وَدِدْتُ أَنَّا قَدْ رَأَيْنَا إِخْوَانَنَا ». قَالُوا أَوَلَسْنَا إِخْوَانَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ « أَنْتُمْ أَصْحَابِى وَإِخْوَانُنَا الَّذِينَ لَمْ يَأْتُوا بَعْدُ ». فَقَالُوا كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ يَأْتِ بَعْدُ مِنْ أُمَّتِكَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ « أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلاً لَهُ خَيْلٌ غُرٌّ مُحَجَّلَةٌ بَيْنَ ظَهْرَىْ خَيْلٍ دُهْمٍ بُهْمٍ أَلاَ يَعْرِفُ خَيْلَهُ ». قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ. قَالَ « فَإِنَّهُمْ يَأْتُونَ غُرًّا مُحَجَّلِينَ مِنَ الْوُضُوءِ وَأَنَا فَرَطُهُمْ عَلَى الْحَوْضِ أَلاَ لَيُذَادَنَّ رِجَالٌ عَنْ حَوْضِى كَمَا يُذَادُ الْبَعِيرُ الضَّالُّ أُنَادِيهِمْ أَلاَ هَلُمَّ. فَيُقَالُ إِنَّهُمْ قَدْ بَدَّلُوا بَعْدَكَ. فَأَقُولُ سُحْقًا سُحْقًا ». أخرجه مسلم.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று 'அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வஇன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்' (மண்ணறையிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடும்போது நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) என்று கூறிவிட்டு, "நம் சகோதரர்களை (இவ்வுலகில்) காண விரும்புகிறேன்" என்று சொன்னார்கள்.
மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?" என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் என் தோழர்கள்தாம். (நான் காண விரும்பியது) இதுவரை (பூமியில் பிறந்து) வந்திராத நம் சகோதரர்களை" என்று கூறினார்கள். மக்கள், "உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டார்கள்.அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்து, அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்து கொள்ளமாட்டாரா? கூறுங்கள்" என்று கேட்டார்கள். மக்கள், "ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே!" என்று பதிலளித்தனர். "(அவ்வாறே) அவர்கள் அங்கத் தூய்மையினால் உறுப்புகள் ஒளிர்பவர்களாக (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்-கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன்.அறிந்து கொள்ளுங்கள்! வழி தவறி (விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து) விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். அவர்களை நான் 'வாருங்கள்' என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது, 'இவர்கள் உங்களுக்குப் பின்னால் (உங்களது மார்க்கத்தை) மாற்றி விட்டார்கள்' என்று சொல்லப்படும். அப்போது நான் "(இவர்களை) இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக;  அப்புறப்படுத்துவானாக!" என்று கூறுவேன் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.                            
ஆதாரம் முஸ்லிம் (367)

.
உடல் முழுவதும் கறுப்பாகவும் முகம் மற்றும் நான்கு கால்கள் மட்டும் வெண்மையாகவும் உள்ள குதிரையை பஞ்ச கல்யாணி என்பார்கள்.  ஐந்து இடங்கள் பளீரென பிரகாசிப்பதால் இவ்வாறு குறிப்பிடுவர்.  இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தினர் உளூச் செய்வதன் காரணமாக முகம், கைகள், கால்கள் ஆகியவை ஒளி வீசும் நிலையில் எழுப்பப்படுவார்கள்.  எனவே விரும்புபவர் இந்த ஒளியை அதிகமாக்கிக் கொள்ளட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளனர் கறுப்பு நிறம் கொண்ட பல குதிரைக்களுக் கிடையே முகமும் கை கால்களும் வெளுத்த குதிரை ஒன்று இருந்தால் அதை எவ்வாறு நாம் சுலபமாக இனங்கண்டு கொள்வோமோ அவ்வாறே நபிகளார் இந்த உம்மத்தினரையும் மறுமையில் இனங்கண்டு கொள்வார்கள். வுழுச்செய்யும் போது  குறிப்பிட்ட அளவைக்காட்டிலும் கூடுதலாக தூய்மை செய்ததன் விளைவாக  மறுமையில் முகம் மற்றும் கைகால்களில் வெண்மை உள்ளவராக இந்த உம்மத்தினர் வருவார்கள் என மேல் உள்ள நபிமொழிகள் தெரிவிக்கின்றன.எனவே இந்த வுழு என்பது நபிகளாரின் உம்மத்தை முந்திய பல உம்மத்துக்களுக்கிடையே தனித்து விளங்கச்செய்யும் ஒரு அற்புத வணக்கம் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.


இறை நம்பிக்கையாளனின் அணிகலன் வுழு

609 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا خَلَفٌ - يَعْنِى ابْنَ خَلِيفَةَ - عَنْ أَبِى مَالِكٍ الأَشْجَعِىَّ عَنْ أَبِى حَازِمٍ قَالَ كُنْتُ خَلْفَ أَبِى هُرَيْرَةَ وَهُوَ يَتَوَضَّأُ لِلصَّلاَةِ فَكَانَ يَمُدُّ يَدَهُ حَتَّى تَبْلُغَ إِبْطَهُ فَقُلْتُ لَهُ يَا أَبَا هُرَيْرَةَ مَا هَذَا الْوُضُوءُ فَقَالَ يَا بَنِى فَرُّوخَ أَنْتُمْ هَا هُنَا لَوْ عَلِمْتُ أَنَّكُمْ هَا هُنَا مَا تَوَضَّأْتُ هَذَا الْوُضُوءَ سَمِعْتُ خَلِيلِى -صلى الله عليه وسلم- يَقُولُ « تَبْلُغُ الْحِلْيَةُ مِنَ الْمُؤْمِنِ حَيْثُ يَبْلُغُ الْوَضُوءُ ». أخرجه مسلم
 தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்து கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பின்னால் நான் இருந்தேன். அப்போது அவர்கள் தமது கையை அக்குள்வரை நீட்டிக் கழுவினார்கள்.
நான், "அபூஹுரைரா அவர்களே! இது என்ன (புது) அங்கத் தூய்மை?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஃபர்ரூகின் மக்களே! நீங்கள் இங்கு இருந்தீர்களா? நீங்கள் இங்கு இருக்கிறீர்கள் என்று தெரிந்திருந்தால் இவ்வாறு அங்கத் தூய்மை செய்திருக்க மாட்டேன். என் உற்ற தோழர் (நபி-ஸல்) அவர்கள், 'இறைநம்பிக்கையாளரின் உறுப்புகளில் எங்கெல்லாம் உளூவின் நீர் படுகிறதோ அங்கெல்லாம் வெண்மை பரவும்  என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூ ஹாஸிம் (ரஹ்).
ஆதாரம் முஸ்லிம் 609

சொட்டும் நீரால் கொட்டும் பாவம்
600 - حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ ح وَحَدَّثَنَا أَبُو الطَّاهِرِ - وَاللَّفْظُ لَهُ - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ عَنْ سُهَيْلِ بْنِ أَبِى صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « إِذَا تَوَضَّأَ الْعَبْدُ الْمُسْلِمُ - أَوِ الْمُؤْمِنُ - فَغَسَلَ وَجْهَهُ خَرَجَ مِنْ وَجْهِهِ كُلُّ خَطِيئَةٍ نَظَرَ إِلَيْهَا بِعَيْنَيْهِ مَعَ الْمَاءِ - أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ - فَإِذَا غَسَلَ يَدَيْهِ خَرَجَ مِنْ يَدَيْهِ كُلُّ خَطِيئَةٍ كَانَ بَطَشَتْهَا يَدَاهُ مَعَ الْمَاءِ - أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ - فَإِذَا غَسَلَ رِجْلَيْهِ خَرَجَتْ كُلُّ خَطِيئَةٍ مَشَتْهَا رِجْلاَهُ مَعَ الْمَاءِ - أَوْ مَعَ آخِرِ قَطْرِ الْمَاءِ - حَتَّى يَخْرُجَ نَقِيًّا مِنَ الذُّنُوبِ » أخرجه مسلم
"ஒரு முஸ்லிமான/முஃமினான (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன்/நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகொண்டு செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) நீருடன்/நீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும் போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீருடன்/நீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. இறுதியில், (அங்கிருந்து) அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராகக் கிளம்புகிறார்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

நுல் முஸ்லிம் 600

601 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَعْمَرِ بْنِ رِبْعِىٍّ الْقَيْسِىُّ حَدَّثَنَا أَبُو هِشَامٍ الْمَخْزُومِىُّ عَنْ عَبْدِ الْوَاحِدِ - وَهُوَ ابْنُ زِيَادٍ - حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ عَنْ حُمْرَانَ عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ 
الْوُضُوءَ خَرَجَتْ خَطَايَاهُ مِنْ جَسَدِهِ حَتَّى تَخْرُجَ مِنْ تَحْتِ أَظْفَارِهِ ».أخرجه مسلم

"ஒருவர் அழகிய முறையில் (முழுமையாக) அங்கத் தூய்மை செய்யும்போது அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறுகின்றன. (உளூவின்) முடிவில், அவருடைய நகக்கண்கள் வழியாக (அவர் செய்த சிறு பாவங்கள்) வெளியேறி விடுகின்றன" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : உஸ்மான் பின் அஃப்பான் (ரலி).

நுல் முஸ்லிம்
282 - حدثنا سويد بن سعيد . حدثني حفص بم ميسرة . حدثني زيد بن أسلم عن عطاء بن يسار عن عبد الله الضابحي  : - عن رسول الله صلى الله عليه و سلم قال ( من توضأ فمضمض واستنشق خرجت خطاياه من فيه وأنفه . فإذا غسل وجهه خرجت خطاياه من وجهه حتى يخرج من يحي أشفار عينيه . فإذا غسل يديه خرجت خطاياه من يديه . فإذا مسح برأسه خرجت من رأسه حتى تخرج من أذنيه . فإذا غسل رجليه خرجت خطاياه من رجليه حتى تخرج من تحت أظفار رجليه . وكانت صلاته ومشيه إلى المسجد نافلة )
[ ش ( أشفار عينيه ) أشفار العين أطراف الأجفان التي بنيت عليها الشعر . جمع شفر . ( نافلة ) أي زائدة على تكفير تلك الخطايا المتعلقة بأعضاء الوضوء . فتكون لتكفير خطايا باقي الأعضاء أن كانت . وإلا فلرفع الدرجات ] .
قال الشيخ الألباني : صحيح
"ஒரு அடியார் அங்கத் தூய்மை (உளூ) செய்யும் போது வாயையும் மூக்கையும் சுத்தம் செய்தால்  வாயாலும் மூக்காலும் செய்த பாவங்கள் அனைத்தும் வெளியேறுகின்றன. அவர் முகத்தைக் கழுவும் போது, கண்களால் செய்த பாவங்கள் அனைத்தும் வெளியேறுகின்றன. (உளூவின்) முடிவில், அவருடைய கண் இமைகள் வழியாக (அவர் செய்த பாவங்கள்) வெளியேறி விடுகின்றன" கைகளைக் கழுவும்போது கைகொண்டு செய்திருந்த பாவங்கள் அனைத்தும் வெளியேறுகின்றன. அவர் தலையை தடவும் போது அவரது இரு காது உட்பட தலையிலிருந்து பாவங்கள் வெயியேறுகின்றன.கால்களைக் கழுவும் போது அவரது இரு கால்களின் நக்க்கண்கள் உட்பட, அவரது இரு கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் வெளியேறுகின்றன. இறுதியில், அவரது தொழுகையும் அவர் பள்ளிக்கு எடுத்து வைத்த ஒவ்வொறு எட்டும் அவருக்கு உபரியாக அமைந்து விடுகின்றன என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் அப்துல்லாஹ் அல்ழாபிஹி (ரலி)
நுல் இப்னு மாஜாஹ் 282
வளரும் இன்ஷா அல்லாஹ்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger