அர்ஷில் வீற்றிருக்கும் இறைவன் (01)

Tuesday, November 6, 2012

முஹம்மது கைஸான் (த்த்பீகி)
 இறை நம்பிக்கையின் அவசியம்.

இஸ்லாத்தில் அடிநாதமாக திகழும் ஈமானின் கிளைகளில் முக்கிய இடத்தைப் பெறுவது இறை நம்பிக்கையாகும்.இந்த நம்பிக்கயை மையமாக்க் கொண்டே இஸ்லாம் எனும் மாலிகை கட்டியெழுப்ப்பட்டுள்ளது.
ஒரு முஸ்லிம் இந்த நம்பிக்கையில் ஓட்டை வைத்து விட்டால் அவனது முழு வாழ்வுமே அர்த்தமற்றதாக மாறிவிடும்.                    
முஸ்லிமகளில் பலர் தங்களை இறைவிசுவாசிகள் எனக்கூறிக்கொண்டாலும் இறைவனை நம்பிக்கை கொள்ள வேண்டிய வித்த்தில் நம்பிக்கை கொள்ள வில்லை.வேற்று மத சித்தாந்தங்களில் மலிந்து காணப்படும் கற்பணைகளை அடிப்படையாக்க் கொண்டே தங்களது நம்பிக்கையை அமைத்துக் கொண்டார்கள் குர்ஆனும் சுன்னாவும் இறைவனைப்பற்றி என்ன வழிகாட்டியுள்ளது என்பதை தெளிவாக அறிந்து அதனடிப்படையில் தங்களது இறை விசுவாசத்தை அமைத்துக் கொள்ளவில்லை.                 
இதனால் தான் ஈமானை கலங்கப்படுத்தும் காரியங்களைப் புரிவோரை ஞானிகள் இறைநம்பிக்கையாளர்கள் என்றும் ஈமானுக்கு இலக்கனமாகத் திகழும் காரியங்களைப் புரிவோரை ஈமானுக்கு எதிரானவர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர்.
                                                    
எனவே தான் இஸ்லாத்தின் உயிர்நாடியான இறைநம்பிக்கையை குர்ஆன் சுன்னா அடிப்படையில் தெளிவாக விளக்கும் அதே வேளை இறை நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்கும் காரியங்களையும் அம்பளப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.                         
அந்த அடிப்படையில் இறைவனின் இருப்பிடம் குறித்து பல்வேறு தவறான நம்பிக்கைகள் மக்களின் அடி மனதில் பதிந்துள்ளன. எனவே அத்தீய நம்பிக்கைகளை களைந்து சரியான நம்பிக்கையை தெளிவு படுத்த வேண்டிய அவசியம் ஏற்படகின்றது. முதலில் இறைவன் எங்கே உள்ளான்? என்பது குறித்து  துாய வஹி மற்றும் நம்பத்தகுந்த நபிமொழிகள் அடிப்பைடயில் தெளிவாகவும் விரிவாகவும் அறிந்து கொள்வோம்.        
                                               
இறைவன் எங்கே இருக்கின்றான்?

இறைவன் எங்கே இருக்கின்றான்? என்ற இந்த கேள்விக்கு பலரும் பல  விசித்திரமான பதிலள்களை முன்வைக்கின்றன  சிலர் இந்த  கேள்வியே அர்த்தமற்றது அவசியமற்றது என்கின்றனர்.அல்லாஹ் எங்கே இருந்தால் நமக்கென்னஅல்லாஹ் என்றொருவன் இருக்கின்றான் என்று நம்பினால் போதும்  என புலம்பிக்கொண்டிருக்கின்றனர்
                           
.இன்னும் சிலர் இறைவனுக்கு இடம் கற்பிக்க்க்கூடாது அவன் பிரப்ஞ்ஞத்துக்கு உள்ளேயும் இல்லை வெளியேயும்மில்லை மேலேயும் இல்லை கீழேயும் இல்லை.வலதிலும் இல்லை இடதிலும் இல்லை முன்பு இல்லை பின்பும் இல்லை. ஒன்றுடன் சேர்ந்தும் இல்லை பிரிந்தும் இல்லை எனக் கூறி இறைவனே இல்லை என நாஸ்தீகத்தின் பக்கம் சென்று கொண்டிருக்கின்றனர்.                                      
 மற்றும் சிலர் தோன்றியுள்ள அனைத்துமே அல்லாஹ்வின் மறு வடிவமே துனும் அவனே துரும்பும் அவனே வாணமும் அவனே வையமும் அவனே நானும் அவனே நீயும் அவனே இறைவன் படைப்பினங்கடன் நீருடன் கழந்த சீனி போன்று  பிரித்து அறிய முடியாத அளவிற்கு ஒன்றோடு ஒன்றாக கலந்து சங்கம்மாகியுள்ளான் என நம்பி கற்பனையில் மிதந்து கொண்டிருக்கின்றனர்
வேறு சிலர் இறைவன் துானிலும் இருக்கின்றான் துரும்பிலும் இருக்கின்றான் பொழிகின்ற மழையிலும் இருக்கின்றான். ஓடுகின்ற நதியிலும் இருக்கின்றான். ஆடு மாடு போன்ற மிருகங்களிலும் இருக்கின்றான் மல சலம் போன்ற கழிவுகளிலும் இருக்கின்றான் என நம்பி உலகில் உள்ள பல கோடி படைப்புகளிலும் பல கோடி இறைவன் இருக்கின்றான் எனக்கூறி யூதர்க்க் கிரிஸ்தவர்களையும் மிஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.
இன்னும் சிலர் இறைவன் ஏழு வாணங்களுக்கு அப்பாள் உள்ள அர்ஷ் என்ற சிம்மாஷனத்தின் மீது உள்ளான் என நம்புகின்றனர் இன்னும் சிலர் எது சத்தியம் எது அசத்தியம் எனத் தெரியாமல் திண்டாடிக் கொணட்டிருக்கின்றனர்.எனவே குர்ஆன் சுன்னா ஒழியில் இதற்கு தீர்வு கான்போம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger