Thursday, October 18, 2012


ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள்.(15)
அரபு மூலம்
அறிஞர் அப்துல்லாஹ் (அஸ்ஸலபி)
தமிழ் வடிவம்
முஹம்மது கைஸான் (தத்பீகி)


அஹ்லுஸ் ஸுன்னா,ராபிழா ஆகியோரிடையே தக்ரீப் பற்றிய  கண்ணோட்டம்

 ஷீஆக்களுடன் நெருங்கிப் பழகுவது தொடர்பாக பேராசிரியர் நாஸிர் அல்கபாரி என்பவரின் 'மஸ்அலத்துல் தக்ரீப்' ஏழாவது கட்டுரை மாத்திரம் இது பற்றி விளக்குவதற்குப் போதுமானதாக உள்ளது. அதிலிருந்து சில கருத்துக்களை நோக்குவோம்.
அல்லாஹ்வுடைய வேதத்தில்  குறைகாண்கின்ற வேத வசனங்களுக்குப் பொருந்தாத கருத்துக்களை கொடுக்கின்ற அல்குர்ஆனுக்குப் பின் இனோர் வேதம் தங்களது இமாம்களுக்கு இறக்கப்பட்டதாக சொல்கின்றவர்களுடன் எப்படி இணைய முடியும்?
   'இமாமத், நபித்துவத்திற்கு ஒப்பானது, இமாம்கள் அவர்களிடத்தில் நபிமார்களைப் போன்று சிறப்பானவர்கள்' என ஷீஆக்கள் நம்புகின்றனர். தூதுத்துவம் பற்றி உண்மைக்கு மாற்றமான கருத்துக்களை கொடுக்கின்றனர். தூதுத்துவம் என்பது இமாம்களுக்கு வழிப்படுவதே! ஷிர்க் என்பது ஏனையோருக்கு வழிப்படுவதே என்கின்றனர். நபியவர்களின் சிறப்புக்குரிய ஸஹாபாக்களை காபிர் என்கின்றனர். 3 பேர், அல்லது 4 பேர், அல்லது 7 பேரைத் தவிர எல்லா ஸஹாபாக்களையும் மதம் மாறியவர்கள் என நிந்திப்பதோடு,  இஸ்மத், இமாமத் போன்ற அம்சங்களில் எமது தூய கொள்கையை விமர்சித்து, அவர்களின் ரஜ்இய்யா, ,அல் பதா தகிய்யா,போன்ற தவறான கோட்பாடுகளை முதன்மைப்படுத்துகின்றனர்.

ராபிழாக்கள் பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்

   'ராபிழாக்கள் அனைவரும் மிகப் பொய்யர்கள் என்பதை அறிஞர்கள் அனைவரும் ஏக மனதாக ஏற்றுக் கொள்கின்றனர்' என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அவர்களிடையே நீண்ட காலமாக பொய் சொல்லும் தன்மையுள்ளது. அதனால், இஸ்லாமிய அறிஞர்கள் அவர்களை கொள்கையிலிருந்து வேறுபடுத்துகின்றனர்.
அஸ்ஹப் பின் அப்துல் அஸீஸ் என்பவர், இமாம் மாலிக்கிடம் ராபிழாக்கள் பற்றி கேட்டார். அதற்கு அவர், அவர்களைப் பற்றிப் பேசவோ,அப்பொய்யர்கள் மூலம் ஒரு செய்தியை அறிவிக்கவும் வேண்டாம். ஏனெனில்,அவர்கள் பொய்யர்கள். நபித்தோழர்களை ஏசுகின்றனர்.அவர்களுக்கு இஸ்லாத்தில் எந்தப் பங்குமில்லை' என்று விடையளித்தார்கள்.

مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ رُحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا سِيمَاهُمْ فِي وُجُوهِهِمْ مِنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنْجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُمْ مَغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا (29) سورة الفتح

'முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறை வனை) மறுப்போர் மீது கடுமையாகவும்  தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர். ருகூவு, ஸஜ்தா செய்தோராக அவர்களைக் காண்பீர்! அல்லாஹ்விடமிருந்து அருளையும்  பொருத்தத்தையும் தேடுவார்கள். அவர்களின் அடையாளம் ஸஜ்தாவின் தழும்பாக அவர்களின் முகத்தில் இருக்கும். இதுவே தவ்ராத்தில் அவர்களது உதாரணம். இன்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமாவது ஒரு பயிரைப் போன்றது. அது தனது குருத்தை வெளிப்படுத்துகிறது. பின்னர் அதைப் பலப்படுத்துகிறது. பின்னர் கடினமாகி அதன் தண்டின் மீது நிலையாக நிற்கிறது. நிராகரிப்பவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்துவதற்காக விவசாயி(கள் எனும் நம்பிக்கையுடையவர்)களை அது மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு மன்னிப்பையும்  மகத்தான கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.' (48:29)
இவ்வசனத்தை மேற்கோலிட்டு, இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்  'ஸஹாபாக்களை கோபப்படுத்தும் ராபிழாக்களை காபிர்கள்' என்கிறார். அதேபோல், 'யார் ஸஹாபாக்களை கோபப்படுத்துகிறாறோ அவர் காபிராவார் என்று அதே கருத்தை இமாம் இப்னு கதீர் அவர்களும் சொல்கிறார்கள்.
   'இமாம் மாலிக் தனது கருத்தை அழகாகச் சொல்லியுள்ளார். யாராவது தன்னுடைய அறிவிப்புக்களில் ஸஹாபாக்களைக் குறை கண்டால், அவர் அல்லாஹ்வுக்கு மறுப்புத் தெரிவித்த ஷீஆவாக இருப்பார், அத்தோடு, அவர் முஸ்லிம்களின் சட்டங்களைப் பாழ்படுத்தியவர் ஆவார்; என இமாம் குர்துபி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்..
'ராபிழாக்களை விட பொய் சاட்சி சொல்பவரை நான் காணவில்லை' என்று இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
பித்அத் செய்பவர்கள் மூலம் கூட ஹதீஸ்கள் பதியப்படும். ஆனால், ராபிழாக்களைத் தவிர. ஏனெனில், அவர்கள் பொய்யர்கள்' என்று யஸீத் பின் ஹாரூன் சொல்வதை தான் கேட்டதாக முஅம்மல் பின் அஹாபு கூறுகிறார்.
 'ராபிழாக்களைத் தவிர உள்ள அனைவரிடமிருந்தும் அறிவைப் பெற்றுக்கொள். ஏனெனில், அவர்கள் ஹதீஸ்களை இட்டுக்கட்டி, அதை மார்கமாக ஆக்குகின்றனர்' என்று கூபா நீதிபதியாக இருந்த ஷரீக் என்பவர் கூறியதாக முஹம்மது பின் ஸயீத் அல்அஸ்பஹானி  கூறுகின்றார்.
  'மனிதர்கள் பலரை நான் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் ராபிழாக்களைப் பொய்யர்கள் என்கின்றனர்' என அஃமஸ் சொல்வதை நான் கேட்டேன் என முஆவியா அவர்கள் கூறுகிறார்.
இவ்வாறு ஸலபுகளின் கருத்துக்களுக்கு வலுவூட்டும் விதமாக இமாம் இப்னு தைமிய்யாவின் பின்வரும் கருத்து உள்ளது.
'ராபிழாக்களின் பித்அதுகளுக்கான அடிப்படை காரணகர்த்தாக்கள் சின்திக்குகளே! அவர்களில் அதிகமானவர்கள் பொய்யர்களே! அம்மார்க்கம் தகிய்யாவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதை அவர்கள் வார்த்தையே   உறுதிப்படுத்ததுகிறது. அவர்களில் ஒருவர் தனது உள்ளத்திலுள்ளவைகளுக்கு மாற்றமாகவே வாயால் பேசுகின்றார்.
இமாம் அப்துல்லாஹ் பின் அஹ்மது பின் ஹன்பல் அவர்கள் நான் ராபிழாக்கள் பற்றி எனது தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர், 'அவர்கள்தான் அபூபக்கரையும், உமரையும் ஏசுகின்றவர்கள்' என்றார். இவ்விருவர் மீதும் நீ இரக்கம் காட்டு. அவர்களை கோபிப்பவர்களை விட்டும் நீ விலகி விடு' என பதிலளித்தார் என்கிறார்.
 அபூபக்கர், உமர், ஆயிஷா போன்றோருக்கு ஏசுபவர்கள் பற்றி அப்துல்லாஹ்விடம் நான் கேட்டேன். அதற்கு அவர், அவர்களை ஏசுபவர்கள் இஸ்லாத்தில் இல்லாதவர்கள்'என்றார் என அபூபக்கர் அல் மரூஸி கூறுகிறார்.
பிர்யாபி என்ற அறிஞரிடம் அபூபக்கர் (ரழி) அவர்களை திட்டுபவர்கள் பற்றி கேட்டபோது, ஏசுபவர் காபிராவார்.அவரைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று பதில் அளித்தார்.
 'கிறிஸ்தவர்களுடன் ராபிழாக்கள் பற்றி விவாதம் நடைபெற்றபோது, அவர்களின் நூற்களிலுள்ளவற்றாலே அவ்விவாதத்திற்கு மறுப்புக் கொடுக்கப்பட்டது'. ராபிழாக்கள் முஸ்லிம்களல்லர்.அவர்களின் கருத்துக்கள் மார்க்க ஆதாரங்களாக எடுக்கப்படுவதில்லை. இப்பிரிவு நபியவர்கள் மரணித்து 25 வருடங்களின் பின் தான் தோன்றியது. இஸ்லாத்திற்கு தலைமை தாங்கி அழைப்பு விடுக்கின்றவர்களுக்கு மறுப்புத்தெரிவிக்கத்தான் இது ஷீஆக்களால் ஆரம்பிக்கப்பட்டது. பொய், நயவஞ்சகம், குப்ர்  போன்ற அம்சங்களில் யூத, கிறிஸ்தவ அடிச்சுவடிகளில் நடக்கும் ஒரு பிரிவுதான் இது' என்று இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் கூறுகிறார்கள்.
 'நபியவர்களின் தோழர்களைக் குறை கூறுபவர்களை நீ கண்டால், அவர்கள் ஸீன்தீக்கிகள் என்பதை நீ அறிந்து கொள்' என அபூஸூர்ஆ அர்ராஸி கூறுகிறார்.
 சவூதி அரேபியா மார்க்கத் தீர்ப்பு குழுவிடம் கேள்வி கேட்க ஒரு குழு வந்தது. கேள்வி கேட்டவர்களும், அவர்களோடு இருந்தவர்களும் ஈராக் பிரதேசத்தை அண்டிய கிழக்குப் பிரதேசவாதிகள். அவர்களுடன் ஜஃபரிய்யா மத்ஹபைச் சேர்ந்தவர்களும் ஒன்றாக வாழ்கின்றனர். இவர்களால் அறுக்கப்பட்ட மாமிசத்தை சிலர் உண்கின்றனர். சிலர் உண்ணுவதில்லை.
கேள்வி : ஜஃபரியாக்கள் எல்லா நிலைகளிலும் ஹஸன், ஹுஸைனையே அழைக்கின்றனர்.அப்படி இருக்கையில் அவர்கள் அறுத்ததை சாப்பிடமுடியுமா? எனக் கேட்டனர்.
இக் கேள்விக்கு பத்வா குழவின் உறுப்பினர்களான அப்துல்லாஹ் பின் பாஸ், அப்துல்லாஹ் பின் அதியான், அப்துர் ராசிக் அபீபி, அப்துல்லாஹ் பின் குஊத் போன்றோர் பதிலளித்தனர்.
 'கேள்வி கேட்டவர்கள் கூறியது போன்று, ஜஃபரியாக்களிடம் எல்லா நிலையிலும் அலி, ஹஸன், ஹுஸைன், மற்றும் அவர்களின் தலைவர்கள் ஆகியோரை அழைக்கும் தன்மை காணப்பட்டால், அவர்கள் அறுத்ததை சாப்பிட முடியாது.அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்திருப்பினும் அவைகள் செத்தவைகளே'என்றனர்.
 'எமது கிராமத்தில் ராபிழாக் கொள்கையுடைய ஒருவர் மிருகங்களை உணவுக்காக அறுப்பவர். அவரை அஹ்லுஸ் ஸுன்னாக்களும் தமது மிருகங்களை அறுப்பதற்கு அழைக்கின்றனர். அத்தோடு, சில உணவகங்கள் இப்படிப்பட்ட கொள்கை கொண்டவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதோடு, தொழில் சம்மந்தமான தொடர்புகளையும் வைத்துள்ளனர்.' எனவே, இவர்களுடன் நாம் எப்படி நடந்து கொள்வது.அவர்கள் அறுத்த மாமிசங்களின் சட்டம் என்ன? அவை ஹலாலா? ஹராமா? எமக்கு விளக்கம் தாருங்கள்' என்று அப்துல்லாஹ் பின் ஜப்ரீன் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 
அதற்கு அவர் ராபிழாக்கள் அறுத்தவையும், அறுத்தமாமிசங்களையும் சாப்பிடுவது ஹராம். பெரும்பாலும் இவர்கள் இணைவைப்பவர்களே! எப்போதும் எல்லா இன்ப, துன்பங்களிலும், அரபா, தவாப், ஸயி போன்ற இடங்களிலும் அலி (ரழி) அவர்களையே அழைக்கின்றனர். இதை நாம் பல தடவைகள் எமது காதுகளால் கேட்டிருக்கின்றோம். இது பெரும் இணைவைப்பும் மதம் மாறுதலுமாகும். இவர்களைக் கொலை செய்வது இஸ்லாத்தில் ஆகுமானதே! என்று பதில் அளித்தார்.
அலி (ரழி) அவர்களைப் புகழ்வதில் எல்லை மீறியுள்ளார்கள் அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமான பண்புகளை அலி (ரழி) அவர்களுக்கும் கொடுத்துள்ளார்கள். அலி (ரழி) அவர்களை ரப்பாகவும், படைப்பாளனாகவும், உலகை இயக்குபவர்களாகவும், மறைவானவற்றை அறிந்தவராகவும்,நன்மை, தீமைகளை தன்னகத்தே வைத்துள்ளவராகவும் சித்திரித்துள்ளனர்.
அல்குர்ஆனில்; குறைகாண்கிறார்கள்.அஹ்லுல் பைத், அவர்களின் பகைவர்கள் சம்மந்தப்பட்ட அதிகமான விடயங்களை  ஸஹாபாக்கள் குர்ஆனிலிருந்து அகற்றி, திரிவுபடுத்தியுள்ளனர் என்று கூறுகின்றார்கள். இதற்கு எந்தவித ஆதாரத்தையும் அவர்கள் முன்வைக்கவில்லை.
 மூத்த ஸஹாபாக்கள், முதல் மூன்று கலீபாக்கள் மற்றும் நன்மாராயம் கூறப்பட்ட 10 பேர் பிரபல்லியம் பெற்ற அனஸ் (ரழி), ஜாபிர் (ரழி), அபூ ஹுரைரா (ரழி) போன்ற பெரும் ஸஹாபாக்களையும் குறை கூறியதும் மட்டுமல்லாது அவர்கள் அறிவித்த ஹதீஸ்களையும் ஏற்க மறுக்கின்றனர். இவர்கள் அனைவரும் ராபிழாக்களின் பார்வையில் காபிர்களே!
அஹ்லுல் பைத்திடம் மாத்திரமிருந்தே ஸஹீஹகான ஹதீஸ்களை ஏற்றுக் கொள்வார்கள். மற்றவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்களை பொய்யானது, ஆதாரமற்றது எனக் கூறி, ஏற்க மறுக்கின்றனர்.
உள்ளத்தில் ஒன்றும் நாவில் இன்னொன்றும் வைத்து நயவஞ்சகத்தனமக நடந்து கொள்கின்றனர். 'யாரிடம் தகிய்யா இல்லையோ, அவரிடம் மார்க்கமில்லை' என்ற கேடுகெட்ட நயவஞ்சகக் கொள்கையுடன் வாழ்கின்றனர். 
வளரும் இன்ஷா அல்லாஹ்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger