Monday, July 25, 2011




ஷீஆக்களின் சீர் கெட்ட கொள்கைகள் (02)






அரபு மூலம்:
அறிஞர் அப்துல்லாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் :
முஹம்மது கைஸான் (தத்பீகி) 



ஷீஆக்களுக்கு ஏன் ராபிழாக்கள் என பெயர் வந்தது?

ஷீஆக்களின் தலைவர்களில் ஒருவரான மஜ்லிஸி என்பவர், தனது 'பிஹாருல் அன்வார்' என்ற நூலில் (ராபிழாக்களின் சிறப்பும்,பெயரின் புகழும்) என்ற தலைப்பில் 'ராபிழா' என்ற பெயர் வருவதற்கான காரணம் என்ன என்பதைக் கூறிப்பிடுகிறார்.

ஸுலைமான் அல் அஃமஷி என்பவர் குறிப்பிடுகையில், 'என்னிடத்தில் எனது தந்தை அப்தில்லாஹ் இப்னு ஜஃபர் பின் முஹம்மத் என்பவர் வந்தார். நான் என்னை உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன். மக்கள் நமக்கு ராபிழாக்கள் எனக் கூறுகிறார்கள். ராபிழாக்கள் என்றால் என்ன? எனக் கேட்டேன். அதற்கு அவர்,'அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் அதற்குப் பெயர் வைக்கவில்லை. அல்லாஹ் தான் தவ்ராத்திலும், இன்ஜீலிலும் ஈஸா, மூஸா ஊடாக அதற்குப் பெயர் வைத்தான்' எனக்கூறினார்.

ராபிழாக்கள் எனப் பெயர் வருவதற்கு பின் வரும் நிகழ்வு காரணமாக அமைந்தது என சில ஷீஆக்களால் சொல்லப்படுகிறது.


ஒரு முறை ஸைத்  பின் அலி பின் ஹுஸைன் என்பவரிடம் நீங்கள் அபூபக்கர், உமர் ஆகிய இருவரிடமிருந்தும் நீங்கி விடுங்கள்.நாங்கள் உங்களுடன் இணைந்து கொள்கின்றோம். அப்போது, ஸைத் அவர்கள், அவ்விருவரும் எனது பாட்டனின் தோழர்கள். அதுமட்டுமன்றி,  அவ்விருவரும் பொறுப்பேற்றவர்கள் என்றார்.அதற்கவர்கள் நாங்கள் உங்களைப் புரக்கணிக்கின்றோம்' என்றனர்.  இதனால், ராபிழாக்கள் தோற்றம் பெற்றனர்.
ஸைத் என்பவருக்கு 'பைஅத்' செய்து அவரது கருத்துக்கு உடன்பட்டவர்கள் ஸைய்திய்யாக்கள் என அழைக்கப்படுகின்றனர்.

அபூபக்கர் (ரழி), உமர் (ரழி)  ஆகியோர் கலீபாக்கள் இல்லை என்று அவர்களை நிராகரிப்போர் ராபிழாக்கள் எனப்படுவர். அதேபோல், மார்க்கத்தை  நிராகரித்தால்  ராபிழாக்கள் எனப்படுவர்.


 ராபிழாக்கள் எத்தனை வகைப்படுவர்?

'தாயிரதுல் மஆரிப்' (4ஃ67) என்ற கிதாபில் 'ஷீஆக்களின் பிரிவுகளின் எண்ணிக்கை 73 பிரிவுகளை விடவும் அதிகமானவை' என கூறிப்பிடப்பட்டுள்ளது.

ராபிழாக்களைப் பற்றி மீர் பாகீர் அத் தமாத் என்பவர் 'எனது உம்மத் 72 ஆகப் பிரியும் என்ற ஹதீஸில் வந்துள்ள எல்லா பிரிவுகளும் ஷீஆக்களின் பிரிவையே குறிக்கும். அதில் வெற்றி பெற்ற பிரிவு  இமாமியாக்கள் எனப்படுவோராவர்' என்று குறிப்பிடுகிறார்.

முக்ரிஸி என்பவர் குறிப்பிடும் போது,'அவர்களின் பிரிவு 300 வரை உள்ளது'என்கிறார்.

சஹ்ரஸானி என்பவர் ராபிழாக்களை 5 வகையாகப் பிரிக்கிறார்.

அவை:
1-கைஸானியா
2-ஸைதிய்யா
3-இமாமிய்யா
4-ஆலிய்யா
5-இஸ்மாயீலிய்யா
'அலி அவர்களின் காலத்திற்குப் பின் ராபிழாக்கள் நான்கு வகையினராகக் காணப்பட்டனர்' என அறிஞர் பக்தாதி அவர்கள் கூறுகிறார்கள்.

அவை:
1-ஸைய்திய்யா
2-இமாமிய்யா
3-கைஸானிய்யா
4-குலாத்
ஸைய்திய்யாக்கள் எனப்படுவோர் ராபிழாப் பிரிவைச் சார்ந்தோர் அல்லர்.அவர்கள் ஜாரூதிய்யாப் பிரிவைச் சார்ந்தவர்கள் ஆவர்.

இன்ஷா அல்லாஹ் வளரும்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger