பிறர் மானம் காப்போம்! (04)
முகம்மது கைஸான் (தத்பீகி)
பல் வேறு கோணங்களில் இஸ்லாம் மனிதனின் மானத்தை காத்துள்ளது என்பதை சென்ற தொடர்களின் தகவல்களில் இருந்து புரிந்து கொண்டோம். அடுத்து மனிதனின் மானத்தை காவு கொல்லும் தீய பண்புகளையும் அதற்க்கு மறுமையில் கிடைக்கும் தன்டனைகளையும் சற்று நோக்குவது மிகவும் பயனாய் இருக்கும் என நினைக்கின்றேன்.
பிறர் குறை மறைப்போம்!
மனிதனின் மானத்தை சிதைக்கச்கூடிய காரியங்களில் அவனது குறைகளை வெளிப்படுத்துவதும் ஒன்றாகும்.இதை இஸ்லாம் வண்மையாக தடை செய்கின்றது.காரணம் மனிதர்கள் அனைவரிடமும் குறைகள் காணப்படுவது இயல்பே. ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோ வித்தியசமான குணப்பண்புகளும் குறைகளும் காணப்படுகின்றன. இக்குறைகளை சமூக மயப்படுத்திஇ மற்ற சகோதர முஸ்லிமைக் கொச்சைப்படுத்துவதை இஸ்லாம் பெரும் பாவமாகக் கருதுகிறது. மற்றவரின் குறையைத் தேடித்திருயும் மனிதர்களை இழிந்தவர்களாவும் பிணத்தைத் திண்ணும் செயலுக்குச் சமமானதாகவும் இஸ்லாம் கருதுகிறது. இத்தகைய செயலை அல்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கிறது.
விசுவாசிகளே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில்இ நிச்சியமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கின்றனஇ (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். அன்றியும் உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசாதீர்கள். உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும்இ நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சியமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்இ மிக்க கிருபை செய்பவன்.
(அல்குர்ஆன் 49:12)
மற்ற சகோதரர்களின் பலவீனத்தை அல்லது குறையைத் தோண்டி எடுத்துப் பேசுவது பாவமான செயலாகும். இதனால் கூட்டு வாழ்வில் கசந்த நிலை தோன்றும்.இதன் அடிப்படையில் உலகத்தில் ஒரு சகோதரனின் பாரிய தவறுகளை அல்லாஹ்வுக்கு அஞ்சி மறைக்கும் போது மறுமையில் அல்லாஹ் மறைத்தவரின் குறையை மறைத்து விடுகின்றான்.மறுமையில் தனது குறைகள் மறைக்கப்பட வேண்டுமானால் உலகில் தனது சகோதர முஸ்லிம்களின் குறையை அம்பலப்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்வது அவசியமாகும்.
யார் ஒரு முஃமினுடைய இவ்வுலகத் துயரங்களில் ஒரு துயரத்தை நீக்கிவிடுகிறாரோ அவருக்கு மறுமை நாளின் துயரங்களில் ஒரு துயரத்தை அல்லாஹ் நீக்கிவிடுகிறான். இன்னும்இ யார் கஷ்டப்படும் ருவருக்கு இலகுபடுத்திக் கொடுக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் அவரது விசயங்களை இலகுபடுத்துகிறான். மேலும்இ யார் ஒரு முஸ்லிமின் (குறையை) மறைக்கிறோரோ அல்லாஹ் அவரின் (குறையை) இம்மையிலும் மறுமையிலும் மறைத்து விடுகின்றான். ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவி புரியும் காலமெல்லாம்இ அல்லாஹ் அவ்வடியானுக்கு உதவி செய்கின்றான். யார் அறிவுப் பாதையில் பயணிக்கின்றாரோ அவருக்கு அதன் மூலம் சுவர்க்கத்துக்கான ஒரு பாதையை இலகுபடுத்திக் கொடுக்கின்றான். ஒரு கூட்டத்தினர் இறையில்லங்களில் ஓர் இல்லத்தில் ஒன்று கூடிஇ அல்லாஹ்வின் வேதத்தை ஓதிஇ அதைத் தங்களுக்குள் போதித்துக் கொள்வார்களேயானால்இ அவர்களின் மீது அமைதி இறங்குகிறது. இறையருள் சொரிகின்றது. வானவர் (மலக்கு)கள் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறார்கள். அல்லாஹ் தன்னிடம் உள்ளவர்களிடம் இவர்களைப் பற்றி (உயர்வாகப்) பேசுகிறான். யாரை அவருடைய செயல் பின்னடையச் செய்கின்றதோஇ அவருடைய பரம்பரை அவரை முன்னணிக்குக் கொண்டுவர மாட்டாது.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஆதாரம் : முஸ்லிம்: 4867
இன்ஷா அல்லாஹ் வளரும்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !