Friday, September 16, 2011



ஷீஆக்களின்
சீர் கெட்ட கொள்கைகள் (05)



அரபு மூலம்:

அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி

தமிழாக்கம் :

முஹம்மது கைஸான் (தத்பீகி

நபித் தோழர்கள் விடயத்தில் ராபிழாக்களின் நிலை

அல்லாஹ் பொருந்திக்கொண்ட நபித் தோழர்களை ஏசியும்,காபிர்கள் என்றும் உசூலுல் காபி  என்ற நுர்லில் அல் குலைனி  என்பவர் கொச்சைப்படுத்தியுள்ளார்.

ஜஃபர் அவர்கள் கூறுகிறார்கள்: நபித் தோழர்களில் நபியவர்களிடம் மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மதம் மாறியவர்களே. அம்மூவரும் யார் என வினவப்பட்டது.

அதற்கவர்:

01.மிக்தாத் இப்னு அஸ்வத்
02. அபூதர் அல்கிபாரி  
03. சல்மானுல் பாரிஸி என்றார்.

பிகாருல் அன்வார் எனும் நுர்லில்  மஜ்லிஸி என்பவர் குறிப்பிடும் போது, அலி பின் ஹுஸைன் என்பவரின் அடிமை கூறுகிறார். நான் சில நேரங்கள் அவருடன் தனிமையில் இருந்த வேளை அவரிடம், 'நீங்கள் ஏன்? அபூபக்கர், உமர் இருவரையும் கொலைசெய்ய வேண்டும் என்கிறீர்கள்? என்று கேட்டேன்.
அதற்கு அவர், அவ்விருவரும் காபிர்கள், அவ்விருவரையும் நேசிப்பவர்களும் காபிர்களே.' என்றார்.
ஹம்ஸது தமாலி என்பவர் அலி பின் ஹுஸைன் என்பவரிடம் அபூபக்கர், உமர் பற்றி வினவினார். அதற்கு அவர் அவ்விருவரும் காபிர்களே, அவர்களை பதவியில் அமர்த்தியவர்களும் காபிர்களே!' என்றார்

وينهى عن الفحشاء والمنكر والبغى (النحل-90

என்ற வசனத்திற்;கு (القمى) அல்கமி எனும் தப்ஸீரில் (الفحشاء) அல் பஹ்ஷா என்பது அபூபக்கர், (المنكر) அல் முன்கர் என்பது உமர், (البغى) அல் பக்யு என்பது உஸ்மான் எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

பிகாரில் அன்வார் எனும் நுர்லில் மஜ்லிஸி என்வபர் குறிப்பிடும் போது அபூபக்கர், உமர் ஆகிய இருவரையும் காபிர்கள் என்பதை அறிவிக்கும் செய்திகளும், அவர்களை சாபமிடுவதால் ஏற்படும் நன்மைகள், அவர்களை விட்டும் தூரமாகி இருப்பதால் ஏற்படும் நன்மைகள்,அவர்கள் உண்டாக்கிய பித்அத்துகள் அனைத்தும் அடங்கிய பல தரப்பட்ட புத்தகங்கள் நிறையவே உள்ளன.
நாம் சொன்னவைகள் யாருக்கு அல்லாஹ் ஹிதாயத்தை விரும்புகிறானோ, அவர்களுக்குப் போதுமானவை  எனக்குறிப்பிடுகிறார்.

மேட்படி நுர்லில்  மஜ்லிஸி என்பவர் தொடர்ந்து குறிப்பிடும் போது, 'அபூபக்கர்,உமர் ,உஸ்மான், முஆவியா ஆகியோர் நரகத்தைச் சேர்ந்தவர்கள்' என்கிறார். அல்லாஹ் எம்மைப் பாதுகாப்பானாக.!

இறiவா! நபியவர்கள் மீதும்,அவரின் குடும்பத்தினர் மீதும் அருள் புரிவாயாக. குறைஷிகளின் இரு சிலைகளையும், அவ்விருவரின் அநியாயக் காரர்களையும், அவர்களின் பெண் குழந்தைகளையும் சபிப்பாயாக' என்று இஹ்காகுல் ஹக் என்ற கிரந்தத்தில் மிர்அஸி என்பவர் 'அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆயிஷா (ரழி), ஹப்ஸா (ரழி)ஆகியோரை சபிக்கிகிறார்.

முத்ஆ எனும் வாடகைத் திருமணம் ஹலால். தமத்துஃ முறையில்  ஹஜ் செய்தல், மூன்று பேரைவிட்டும் தூரமாகியிருத்தல், அபூபக்கர், உமர், உஸ்மான், மற்றும் முஅவியா, யஸீத் பின் உமர் இவர்கள் அனைவரும் அமீருல் முஃமினீனுடன் யுத்தம் செய்தவர்கள் என்று ஆபாயிரி என்பவர் தனது ரிஸாலத் எனும் புத்தகத்தில் மஜ்லிஸி குறிப்பிட்டதாக தெரிவிக்கிரார். 

'இமாமிய்யா கோட்பாட்டடில் மிகவும் அத்தியவசியமானவைகளுல் ஒன்றாக இவற்றைக் குறிப்பிடுகின்றார்.

ஆஷூரா தினத்தில் ஷீஆக் கும்பலால் ஒரு நாய் கொண்டு வரப்பட்டு, அதற்கு உமர் என பெயர் சூட்டி, பின்னர் அது மரணிக்கும் வரை முட்களாலும், தடிகளாலும் அடிக்கப்படும்.பின்னர் ஆட்டுக் குட்டி ஒன்று கொண்டுவரப்பட்டு அதற்கு ஆயிஷா என பெயர் சூட்டப்பட்டு, அதன் உரோமங்கள் பிடுங்கப்படும். அது மரணிக்கும் வரை செருப்பால் அடிக்கப்படும்.
        
ஷீஆக்கள் உமர் (ரழி) அவர்கள் கொலை செய்யப்பட்ட தினத்தை விழாவாகக் கொண்டாடுவதோடு, அவரைக் கொலை செய்த அபூ லுஉ லுஉ அல் மஜுசி என்பவனை மார்க்கத்தின் காவலன்  என்றும் புகழ்கின்றனர்.

அல்லாஹ் ஸஹாபாக்களையும், உம்மஹாதுல் முஃமினீன்களையும் பொருந்திக் கொள்வானாக.!

இஸ்லாமிய சகோதரனே! நபிமார்களுக்குப் பின், மனிதர்களில் சிறந்தவர்கள், நபித்தோழர்கள். இப்படிப்பட்ட  சிறந்தவர்கள்  மீது மார்க்கத்தை விட்டும் பிரிந்து சென்ற மோசமான இப்பிரிவினரின்  உள்ளத்திலுள்ள குரோதம் தான் என்ன?
இன்ஷா அல்லாஹ் தொடரும்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger