Thursday, July 28, 2011



ரமழானை அலங்கரிப்போம் (01)




முஹம்மது கைஸான் (தத்பீகி)

முஸ்லிம்கள் பாவக்கரைகளை விட்டும் ஒதுங்கி  தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் நல்லரங்களில் ஈடுபட்டு தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இறைவன் பல் வேறு  வாய்ப்புக்களை வழங்கியுள்ளான்.
அந்த வாய்ப்புக்களில் புனித ரமழான் மாதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததும், முஸ்லிம்களுக்கு இறைவன் வழங்கிய மிகப் பெரிய வெகுமதியுமாகும். எனவே குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதமான ரமழான் எம்மை எதிர் நோக்கி வருவதால் இவ்வருட ரமழான் மாதத்தை நாம் சுவர்க்கம் செல்வதற்க்குரிய வழியாக மாற்றி நிறைந்த நற்செயல்களை செய்ய நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.
எந்த நன்மையான காரியங்களையும் தள்ளாடும் வயது வரைத் தள்ளிப் போடக்கூடாது. காரணம் நாம் மரணத்தைச் சுமந்த சுமை தாங்கிகள். நன்மைகளை நாளை செய்யலாம் என ஒத்திப்போடக் கூடாது.இந்த நாளே! நமக்கு நிச்சயமில்லை எனும் போது நாளை எப்படி நமக்குச் சொந்தமாகும்.? நம் வாழ்க்கையில் சிந்தி விழுகிற ஒவ்வொரு விணாடியும் நம்மை மரணத்தை நோக்கி நகர்த்துகின்றன.
காலம் பொன் போன்றது கடமை கன் போன்றது காற்றுள்ள போதே துாற்றிக் கொள் போன்ற பழமொழிகளை ஏட்டில் நாம் படித்திருக்கிறோம் அல்லவா? .அவற்றை வாழ்கையிலும் கடைப்பிடிக்க வேண்டாமா?
காலங்கள் காத்திராது என்பார்கள் உண்மைதான் நாம் தான் காலத்தைப் பயன்படுத்த வேண்டும். நமது வாழ்நாள் மிகவும் குறைவு அப்படி இருந்தும் இந்த அற்ப உலகில் சீராக வாழ கஷ்டப்பட்டு உழைக்கின்றோம்.அதை விடக் கடினமான உழைப்பு நிரந்தர மறுமையில் சுகமாக வாழ தேவைப்படுகின்றது.நாம் செய்யும் நல்லமல்கள் தான் நாம் செய்யும் கடின உழைப்பு.
எனவே இது வரை செய்த திமைகளை களைந்து விட்டு இந்த ரமழானை நன்மைகளால் அலங்கரிக்க திட சித்தம் கொள்வோமாக! இதுவே இவ்வாக்கத்தின் நோக்கம் நோக்கம் நிறை வேற இறைவன் தவ்பீக் செய்வானாக!
உழைப்புக்குத் தேவை  உத்வேகம்

ஒன்றை செய்யலாம் செய்யக்கூடாது என முடிவெடுக்க உதவுவது எமது உள்ளமாகும். அடி மனதில் நன்மை செய்ய வேண்டும் தீமை செய்யக்கூடாது என்ற உத்வேகம் வந்து விட்டால் உடனே அவற்றை செயல்படுத்தி விடலாம். எனவே எமது உள்ளத்தின் நல்லுணர்வுகளை உறங்க வைக்காமல் இந்த ரமழானில் நல்ல செயல்கள் மாத்திரமே செய்வேன் தீமைகள் தவிர்ப்பேன் என்ற ஒரு கடிவாளத்தை நாம் நமக்கே இட்டுக் கொள்ள வேண்டும். நாங்கள் எண்ணங்களை துாய்மையாக்கிக் கொள்ள வேண்டும்.காரியம் கைகூடாவிட்டாலும்  நமது  நல்லெண்ணங்களுக்கு நற்கூலி கிடைக்கும் என இஸ்லாம்  சொல்லுகின்றது. சில வேளை இறைவன் நாட்டப்படி ரமழானை அடைய முன் நமது உயிர் பிரிந்து விடலாம். நமது எண்ணங்களை சீர் செய்து கொண்டால் வெற்றி நிச்சயம் அல்லது ரமழானை அடைந்து இபாதத்துக்களில் சோர்வு ஏற்படும் போது நாம் எடுத்த உத்வேகம் புத்துனர்ச்சியையும் புதுத்தென்பையும் நமக்கு வழங்கி வணக்கங்களில் ஈடுபடத் துாண்டும்.
அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்பவர் பூமியில் அதிகமான
புகலிடங்களையும்,வசதிகளையும் பெற்றுக் கொள்வார். அல்லாஹ்வை 
நோக்கியும், அவனது தூதரை நோக்கியும் ஹிஜ்ரத் செய்து தன் வீட்டை விட்டு புறப்பட்டுச் செல்பவருக்கு மரணம் ஏற்பட்டால்
அவருக்குரியகூலிஅல்லாஹ்விடம் கிடைத்துவிடும்.அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான் (சூரத்துன்னிஸா -100) 

.தவ்பா செய்வோம்

இறைவன் மனிதனை நன்மை தீமை ஆகிய இரண்டையும் விரும்பும் இயல்பு கொண்டவனாகவே படைத்துள்ளான். நாம் நன்மைகள் செய்துள்ளதைப் போல் தீமைகளும் செய்திருப்போம். நாம் செய்த தவறுகளை உணர்ந்து இறைவனிடம் மன்றாட வேண்டும்.
இவ்லுலகில் நாம் எந்தப்பாவம் செய்தாலும் இறைவனுக்கு இனண வைத்திருந்தாலும் கூட மனம் வருந்தி படைத்தவனிடம் மன்னிப்புக் கேட்டால் இறைவன் கண்டிப்பாக மன்னிப்பான்.எனவே இந்த புண்ணிய மாதத்தில் நல்லமல்கள் புரிவதோடு பாவங்களை விட்டும் விடை பெற வேண்டும்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! ( சூரத்துல் ஜுமர்-53)

திருக்குர்ஆனைத் திறப்போம்
புனித  ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்வின் வேதமான குர்ஆன் இறங்கியது.அல் குர்ஆன் இந்த மாதத்தில் இறங்கியதால் தான் நாம் இந்த அருள் மிகு மாதத்தில் நாம் நோன்பு வைக்கின்றோம். இதில் வேடிக்கை என்ன வென்றால் நொன்புக்குக் கிடைத்த அத்தனை சிறப்புக்ளும் இந்த மாமறைக் குர்ஆனால் தான் கிடைத்தன.ஆனால் முஸ்லிம்கள் வாயில் நோன்பை வைத்து விட்டு வீண் விளையாட்டுக் 
கெளிலும் கேலிக்கைகளிலும் ஈடுபடுவதைப் பார்க்கின்றோம்.இந்த நிலை மாற வேண்டும்.எனவே ரமழானில் மன ஓர்மையுடன் திரு மறைக் குர்ஆனை பொருள் விளங்கியும் ஆராய்ச்சியுடனும் சிந்தனையுடனும் ஓத வேண்டும். குர்ஆனின் ஒளிச்சுடர் மரணம் வரை நம்மைத் தொடரட்டும்.
 இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.(சூரத்துல் பகரா-185)

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். குர்ஆனை ஓதுங்கள் நிச்சயமாக அது தன்னை ஓதக் கூடியவர்களுக்கு மறுமை நாளில் பரிந்துரை செய்யக் கூடியதாக வரும்' அறிவிப்பவர் அபு உமாமாஹ் அல்பாஹிலிய்யி (ரலி) (நூல் முஸ்லிம்)

தான தர்மங்கள் செய்வோம்

இவ்வுலக வாழ்க்கை அற்பமானது மறுமை வாழ்க்கையே நிலையானது என்பதை நாம் நம்பியிருக்கின்றோம். மறுமை வாழ்வை இலக்காகக் கொண்டு இவ்வுலக வாழ்வை துச்சமாகக் கருத வேண்டும்.அந்த அடிப்படையில் இறைவன் நமக்கு பொருளாதாரத்தில் வளத்தையும் செலிப்பையும் தந்திரந்தால் கஞ்சத்தனம் பார்க்காமல் ஏழை எளியவர்களின் சிறமங்களை எண்ணிப்பார்த்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.குறிப்பாக வெளிநாடுகளில் தொழில் புரிபவர்கள் தங்கள் சொந்த பந்தங்களை அதிலும் பெற்றடுத்த தாயை மறந்து விடுகின்றனர்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகமாக வீசும் காற்றை விட ரமழானில் தர்ம் செய்யக்கூடியவராக இருந்தார்கள் என்பதை ஹதீஸ் நுால்களில் பார்க்கின்றோம். எனவே இதை உணர்ந்து அதிகமதிகம் தர்மம் செய்து இரட்டிப்பு நன்மைகளைப் பெற்றுக் கொள்வோமாக!
அவர்களை நேர் வழியில் சேர்ப்பது உமது பொறுப்பில் இல்லை. மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கே. அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட 
மாட்டீர்கள் (சூரத்துன்னிஸா -100) 

இன்ஷா அல்லாஹ் நாளை வளரும்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger