Thursday, July 28, 2011

ரமழானை அலங்கரிப்போம் (02)

முஹம்மது கைஸான் (தத்பீகி)


ஐங்காலத் தொழுகையைக் கூட்டாக நிறை வேற்றுவோம்.


நம்மில் சிலர் நோன்பு வைப்பார்கள் ஆனால் தொழ மாட்டார்கள் இஸ்லாத்தில் நோன்பு எவ்வாறு கடமையோ அவ்வாறே தொழுகையும் கடமை என்பதை ஏனோ உணர மறுக்கிரார்கள். இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. அதில் இரண்டாவதாக திகழ்வது தொழுகை.தொழுகைதான் காபிருக்கும் முஸ்லிமிற்கும் மிடையே வேறுபாட்டைக் காட்டக்கூடியது என நபிகளார் நவின்றுள்ளார்கள். தொழுகையைப் பேணுவது முஸ்லிமான ஆன் பெண் இரு பாலாருக்கும் கடமையாகும். தொழுகை மார்க்கத்தின் துானும் அமல்களில் மிக உன்னதுமானதுமாகும்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல் தொழுகையை நிலைநிறுத்துதல்இ ஸகாத் வழங்குதல்இ ஹஜ் செய்தல்இ ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஜந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)  நூல்: புகாரி 8


அந்த அடிப்படையில்  இந்த புனித ரமழானில் நாங்கள் தொழுகைக்கு பயிற்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.அதிலும் குறிப்பாக ஐவேளைத் தொழுகையை உரிய நேரத்தில் ஜமாஅத்தோடு தொழ ஆவன செய்ய வேண்டும். உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சக்கூடிய போர் நேரத்திலும் கூட்டுத் தொழுகையைப் பேணும்படி அல்லாஹ் கட்டலையிடுகிறான்.

(முஹம்மதே!) நீர் அவர்களுடன் (போர்க்களத்தில்) இருந்து அவர்களுக்கு நீர் தொழுகையை நடத்தினால் அவர்களில் ஒரு பகுதியினர் உம்மோடு (தொழுகையில்) நிற்கட்டும். தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். ஸஜ்தாச் செய்ததும் அவர்கள் உங்களுக்குப் பின்னால் செல்லட்டும். தொழாத மற்ற கூட்டம் வந்து உம்முடன் தொழட்டும். எச்சரிக்கையுடன் தமது ஆயுதங்களையும் எடுத்துக் கொள்ளட்டும். உங்கள் ஆயுதங்களையும், தளவாடங்களையும் விட்டு நீங்கள் கவன மற்று இருப்பதையும், அப்போது திடீரென உங்கள் மீது தாக்குதல் தொடுப்பதையும் (ஏக இறைவனை) மறுப்போர் விரும்புகின்றனர். மழையின் காரணமாகவோ, நீங்கள் நோயாளிகளாக இருப்பதாலோ உங்களுக்குத் தொல்லையாக இருந்தால் உங்கள் ஆயுதங்களைக் கீழே வைப்பது குற்றமில்லை. (அதே சமயத்தில்) எச்சரிக்கை உணர்வுடன் இருங்கள்! (தன்னை) மறுப்போருக்கு இழிவு படுத்தும் வேதனையை அல்லாஹ் தயாரித்துள்ளான். (சூரத்துன் நிஸா-102)

                    இரவுத் தொழுகையைப் பேணுவோம்

கடமையான தொழுகைக்குப் பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்த, அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்.

ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)   நூல்: முஸ்லிம் 2157

இரவில் தொழப்படும் தொழுகைக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1. ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை) 2.கியாமுல் லைல் (இரவில் நிற்குதல்) 3. வித்ர் (ஒற்றைப்படைத் தொழுகை) 4. தஹஜ்ஜுத் (விழித்துத் தொழும் தொழுகை) ஆகிய பெயர்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.ரமலான் மாதத்தில் தொழப்படும் இரவுத் தொழுகைக்குப் பழக்கத்தில் தராவீஹ் என்று குறிப்பிடுகின்றனர். இந்தப் பெயர் நபிமொழிகளில் குறிப்பிடப்படவில்லை
பெயர்கள் வித்தியாசப்பட்டாலும் தன்மை ஒன்றுதான் இதனால் தான் இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் பல பெயர்களைத் தலைப்பிட்டு அனைத்துக்கும் ஒரே ஹதீஸை ஆதாரமாகக்காட்டுகின்றார்.
இந்த இரவு வணக்கம் நமது மறுமைப் பயணத்திக்கான பாலமாகும்.எனவே அல்லாஹ் வின் மீது நம்பிக்கை வைத்து அவனை சதாவும் நினைவு கூற இந்த அரும் பாக்கியத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளானின் இறவு வணக்கம் பற்றி ஏனய காலங்களை விட சிலாகித்துக்கூறியுள்ளார்கள்.:

யார் ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறாரோ அவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! (புஹாரி முஸ்லிம்)


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் லைலத்துல் கத்ர்' இரவில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது முன் பாவம் மன்னிக்கப்படுகின்றது
.(புஹாரி முஸ்லிம்)

ரமளானில் உம்ரா செய்வோம்ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.
ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408
பெருநாள் தர்மம் முறையாக வழங்குவோம்இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: வீணான- பாலுணர்வு தொடர்பான சொல் - செயல்களில் (ஏதேனும் நிகழ்ந்திருந்தால் அவற்றில்) இருந்து நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும் ஏழைகளுக்கு உணவாக அமைந்திடவும் ஜகாதுல் ஃபித்ர் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ஒருவர் அதனைத் தொழுகைக்கு முன்பே நிறைவேற்றினால் அது ஒப்புக் கொள்ளப்பட்ட ஜகாதுல் ஃபித்ர் ஆகும். தொழுகைக்குப் பிறகு நிறைவேற்றினால் அது ஏனைய தர்மங்களில் ஒன்றே ஆகும். 
                                                                                                                        (அஹ்மத்)

முடிவாக இறைவனை அஞ்சி நற்செயல்கள் யாவையும் செய்வோம் தீமைகளுக்கு சாவு மணி அடிப்போம்.ரமழானில் வெற்றி பெற்ற கூட்டத்தில் இறைவன் எம்மை சேர்ப்பானாக!.

Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

வணக்க வழிபாடுகள்

ஷீயாக்கள்

ஆரோக்கியம்

 
Support : Creating Website | MSM Safwan
Copyright © 2011. Kaisan Riyadi - All Rights Reserved
Template Created by Lanka Web DSN
Proudly powered by Blogger