சித்திக் அலி
உணவு வகைகளிலேயே பழங்கள்தான் மிகமிக எளிமையாக ஜீரணமாகக் கூடியவை. பழங்களை பொறுத்தவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த ஒரு பழமும் இது ஒத்துக்கொள்ளுமா? ஒத்துக்கொள்ளாதா?
என்ற பேச்சுக்கே இடமில்லை. அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தாத, மேலும் அஜீரணக் கோளாறுகளை சரிசெய்யக்கூடியவை பழங்களாகும்.
என்ற பேச்சுக்கே இடமில்லை. அஜீரணக் கோளாறுகளை ஏற்படுத்தாத, மேலும் அஜீரணக் கோளாறுகளை சரிசெய்யக்கூடியவை பழங்களாகும்.
படுத்தப் படுக்கையாக கிடக்கும் நோயாளிகளுக்குக் கூட பழங்களைக் கொடுத்தால் நல்ல சக்தியும் புத்துணர்வும் கிடைக்கும். நோய் தீர்க்கும் அருமருந்து. இறைவனால் நமக்கு இயற்கையாக வழங்கப்பட்ட அருட்கொடையாகும்.
பழங்களால் கிடைக்கக்கூடிய நோய் நிவாரண சக்தி எப்படிப்பட்டதென்றால் நம் வயிற்றையும் நுரையீரைலையும் கல்லீரலையும் சுத்தப்படுத்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலுறுப்புக்கள் செல் அணுக்கள் ஒவ்வொன்றிலும் ஊடுருவிப் பாய்ந்து அவற்றில் கலந்துள்ள நச்சுக்களையும் கழிவுகளையும் நீக்கி நம் உறுப்புக்களைப் புதுமைப்படுத்தி சிறு சிறு பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் சக்திகொண்டவை.
முக்கியமாக நம் 3 வேளை உணவில் இரவில் பழவகைகளைக் கொண்ட உணவாக நாம் மாற்றி கொண்டால் மேற்சொன்ன உறுப்புக்களான வயிறு நுரையீரல் கல்லீரல் ரத்தஓட்டமும் இன்னும் பிற உறுப்புக்களும் நம் உடலில் ஒவ்வொரு செல் அணுவும் மறுநாள் காலையில் புத்தம்புது பொலிவுடன் துலங்கும்.
பழங்களை அது பழுத்தப் பிறகு ஒருநாள் அதிகபட்சமாக விட்டுவைத்தாலும் மேலும் கனிந்து உருகி தானே கசிந்து சொட்ட ஆரம்பித்து விடுகிறது. இது எதைக் குறிக்கிறது என்றால் பழங்களுக்கு என்று விசேஷமான ஜீரண சக்தி என்பது எதுவுமின்றி தானே ஜீரணமாக்கும் தன்மையைக் கொண்டுள்ளதால் எவ்வளவு பழங்கள் உட்கொண்டாலும் அவற்றை ஜீரணிப்பதற்காக நோயாளியின் வயிற்றிலிருந்து ஒரு அணுஅளவு சக்தியையும் பழங்கள் கிரகிப்பது கிடையாது. பழங்கள் நம் மண்ணீரலுக்கு பாரமில்லாதது ஆகும். கடினமான உணவுகளும் நச்சுக் கலந்த உணவுகளும் மண்ணீரலின் சக்தியை வீணடித்து விரயமாக்கும்.
1. ஜீரணிப்பதற்கு கடினமான உணவுப் பொருட்கள் எதுவெனில் அதிக சுவை மிகுந்த உணவுகளாகும். பலவிதமான செயற்கை சுவையூட்டிகள் வண்ணங்கள் கலக்க கலக்க உணவின் கடினத்தன்மை கூடுகிறது. சகோதரிகளே, முடிந்தவரை உணவின் ருசியைக் கூட்டுவதையும் மிதமிஞ்சிய ருசியை அதிகரிப்பதையும் சமையலில் நம் குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் கருதி குறைத்துக் கொள்ளுங்கள்.
2. நச்சுக் கலந்த உணவுப் பொருட்கள் எதுவென்றால், ரசாயன மருந்துகளையும் பூச்சிக் கொல்லிகளையும் தெளித்து விஞ்ஞான முறை என்ற பெயரில் விளைவிக்கும் உணவுப் பொருட்கள் ஆகும். ஆனாலும் கசப்பான உண்மை என்னவென்றால் இவ்வகையில் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் காய்கறிகள்தான். இப்பொழுது நமக்கு பெருமளவில் கிடைக்கிறது. தற்போது இயற்கை முறையில் விளைந்த பொருட்கள் காய்கறிகள் விற்கும¢ கடைகள் எல்லா ஊர்களிலும் வந்துவிட்டன. கூடுமான வரையில் அந்த உணவுப் பொருட்களை வாங்கி சமையலுக்கு பயன்படுத்துவதே நல்லது. இந்தமாதிரி பொருட்களை உண்ணுவதில் இருந்து நாம் எச்சரிக்கையாக இருப்பதே மண்ணீரலை காப்பாற்றக்கூடிய ஒரே வழியாகும்.
இப்படி ரசாயனம் தெளிக்கப்பட்ட உணவை உண்பதால் நம் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருந்தாலும் நம்முடைய சந்ததிகள் குழந்தைகள் நம்மைவிட அதிக துன்பத்திற்கு ஆளாகப்போவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. சரி பழங்களாவது சாப்பிடலாம் என்றால் அதற்கும் ஆபத்து வந்து விட்டது.
நாம் பெரும்பாலும் பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் சென்று அங்குதான் நல்ல சுத்தமான பழங்கள் கிடைக்கும் என்று வாங்குகிறோம். நல்ல பழங்கள் என்று நாம் எப்படி அறிந்து வைத்திருக்கிறோம். அதன் தோல்களில் எந்தவித வடுவும் இல்லாமல் பளீர் என்று பளபளப்பாக இருந்தால் நல்ல பழங்கள் என்று நினைக்கிறோம். பழங்களிலேயே தரங்கெட்டது இந்த வகை பளபளக்கும் பழங்கள்தான்.
பழங்களின் இயற்கைத் தன்மை எப்படிப்பட்டதென்றால், முதலில் காயாகி ஒரு குறிப்பிட்ட காலத்தில் பழுத்து பின் ஒரு குறிப்பிட்ட நாளில் அழுகிவிடும். இந்த விதியின் அடிப்படையில் உள்ள பழங்கள் நல்லது. மரத்தில் பழுத்தாலும் நல்லது அல்லது காயாகவே பறித்து இயற்கை சூழ்நிலையில் பழுக்க வைப்பதும் நல்லது. ஆனால் நாம் பெரிய கடைகளில் வாங்கும் பளபளப்பான பிளாஸ்டிக் உறையில் சுற்றப்பட்ட, அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட பழங்கள் எதுவும் இயற்கை காலகட்டத்தின்படி பழுக்காது. பழங்கள் சாப்பிட்டதும். தொண்டைப் பொருமல் கரகரப்பு தோன்றுமானால் அது ஒழுங்காக பழுக்காத பழங்கள் ஆகும். இயற்கைச் சூழலில் பழுத்த பழங்கள் எப்படி இருக்குமென்றால் 1. தோலில் பளபளப்பு இருக்காது. 2. சற்றே மங்கலாக இலேசாக தூசு படிந்தாற்போல் இருக்கும். அவற்றில் தோலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பழுப்பு நிற புள்ளிகள் அல்லது வடுக்கள் இருக்கும்.
நாம் பெரிய ஸ்டோர்களில் வாங்கும் பழங்களில் தோலில் பளபளப்பு இருக்கிறது. வடுக்கள் இல்லை. காரணமென்ன? பழங்கள் சீக்கிரம் பழுத்துவிடக்கூடாது என்று பலவிதமாக ரசாயன கலவைகளில் குளிப்பாட்டி ஊற வைத்து எடுப்பதுதான். மேலும் நுண்ணுயிர் கிருமிகளையும் பூச்சிக் கொல்லிகளையும் கொல்வதற்காக பழங்களை ஒரு அறையில் கொட்டி அறையை புகையால் நிரப்புகிறார்கள். பின்பு பழங்களை அட்டைப் டப்பாக்களில் அடைக்கிறார்கள் இந்தப் புகையைத்தான் நீங்கள் பழங்களை உண்ணும்போது சாப்பிடுகிறீர்கள். கருப்பு திராட்சைப் பழங்களின் தோலின் மேல் இந்த வெண்புகைப் படிவம் தெளிவாகத் தெரியும். இது அல்லாமல் வேக்ஸிங் என்ற மெழுகுப் பூச்சு வேறு பழங்களின் தோல்களில் பீச்சப்படுகிறது. இதனால் பழங்களை எவ்வளவு கழுவினாலும் மெழுகுகள் அகலாது. இதனால் சாதாரணமாக ஒரு வாரம் முதல் பத்து நாட்களில் கனிந்துவிடும். பழங்கள் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் கூட பழுக்காமல் உயிரற்றுக் கிடக்கும். பின்னரும் எந்த ஒரு பழமும் முழுமையாக பழுக்காது.
இவற்றையெல்லாம் மீறி வெம்பிப் போய் அரைகுறையாக பழுத்து அழுகும் பழங்கள் ஜாம் ஜுஸ் என்று உருத்தெரியாமல் மாற்றப்பட்டு அழகான பாட்டில்களிலும் அட்டைகளிலும் பியூர் 100% ஜுஸ் என்று விற்பனைக்கு வருகிறது.
சகோதரிகளே!
உங்கள் உடல் நலம் பாதுகாக்க பளபளப்பான தோல்களுடன் மின்னும் பழங்களை கைகளால் தொட்டுக்கூடப் பார்க்காதீர்கள். சாலையோரம் விற்கும் தூசுப்படிந்த மங்கலான பழங்கள் கரும்புள்ளிகளும் பழுப்பு நிற வடுக்களும் பழங்களின் தோல்களில் காணப்படுமானால் அதுதான் நல்ல பழங்கள். ஏன் பழங்கள் மேல் தூசுபடிந்தாற்போல் உள்ளது என்றால் அது பழங்களின் மேல் படரும் காளான்கள் ஆகும். இதனால் விட்டமின் சி போன்ற எண்ணற்ற உயிர்ச்சத்துக்கள் பழங்களில் உருவாகின்றன. பழங்களின் தோல்களை காளான்களும் நுண்ணுயிர் கிருமிகளும் மிருதுவாக்கும் போது பழங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சக்திப் பரிமாற்றங்கள் வேகமாக நிகழும் பொழுது தோல்களில் கரும்புள்ளிக்கும் பழுப்பு நிற வடுக்களும் தோன்றுகின்றது. இவையே உண்ணுவதற்கு ஏற்ற உயிர்ச்சத்துள்ள பழங்கள். உடல் நலனுக்கு உகந்தவை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !