ஷீஆக்களின்
சீர்கெட்ட கொள்கைகள் (03)
அரபு மூலம்:
அறிஞர் அப்துலலாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
தமிழாக்கம் :
முஹம்மது கைஸான் (தத்பீகி)
அல்பதாவு பற்றி ராபிழாக்களின் நம்பிக்கை கோட்டாடு
'பதாவு' என்றால் தோன்றுதல் என்பதாகும். அத்தோடு வளர்ச்சி புதிய கருத்து என்ற கருத்துக்களையும் வழங்குகிறது. இக்கருத்துக்களைப் பார்க்கும் போது ஒன்றைப் பற்றி முன்னர் அறியாமலிருந்து பின்னர் தெரிய வருவது என்பதையே இது குறிக்கிறது.
இவ்விரு பன்புகளும் அல்லாஹ்வுக்கு இருக்க முடியாதவைகளாகும்.அல்லாஹ் இவைகளை விட்டும் உயர்ந்தவன் பெரியவன்.
அல்லாஹ்வுடன் அறியாமையை எவ்வாறு தொடர்புபடுத்த முடியும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.?
قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ سورة النمل : 65
அல்லாஹ் தன்னைப் பற்றி வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'என்று கூறுவீராக எனக் குறிப்பிடுகின்றான் (சூரதுல் நம்ல் 65)
இதற்கு மாற்றமாக ஷீஆ இமாம்கள் அனைத்தையும் அறிந்தவர்கள். அவர்களுக்கு எதுவும் மறையாது என்று ராபிழாக்கள் நம்பிக்கை கொள்கின்றனர். இதுதான் நபியவர்கள் கொண்டுவந்த நம்பிக்கைக் கோட்பாடா?
ஸிபாத்துக்கள் பற்றி ராபிழாக்களின் நம்பிக்கை
ராபிழாக்கள் தான் முதல் முதலில் இறைவனுக்கு மனித உருவத்தைக் கற்பித்தவர்கள் ஆவர். ஹிஸாம் இப்னுல் ஹகம்இஹிஸாம் இப்னு சாலிம் அல்-ஜவாலீகீஇ யூனுஸ் பின் அப்துர் ரஹ்மான் அல்-குமிஇ அபூ ஜஃபர் அல்-அஹ்வல் போன்றோர் தான் இக்கோட்பாட்டை முன்வைத்தனர் என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் விபரித்துள்ளார்கள்.
மேலே கூறப்பட்ட அனைவரும் இத்னா அஷரீய்யா பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தகர்கள் ஆவர்.
பின்னர் அவர்கள் இறைவனின் பண்புகளை மறுக்கும் ஜஹ்மிய்யாக்களாக மாறினர். அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடாத பண்புகளை அவனுக்கு இருப்பதாக இவர்கள் வாதிட்டனர்.
இது பற்றி இப்னு பாபவீ என்பவர் 70 க்கு மேற்பட்ட அறிவிப்புக்களைச் செய்துள்ளார். அல்லாஹ்வைப் பற்றிக் குறிப்பிடும் போது அவனுக்குக் காலம் இடம் விதம் அசைவியக்கம் எதுவும் கிடையாது' என்கிறார்கள்.
இதேபோல் அல்குர்ஆனிலும் அதாரபூர்வமான ஹதீஸ்களிலும் வந்துள்ள அல்லாஹ்வின் பண்புகளை மறுக்கும் வழிகெட்ட பாதையிலேயே ஷீஆக்களின் தலைவா்கள் பயணிக்கின்றனர்.
அவ்வாறே! அல்லாஹ் இறங்குவதை மறுப்பதோடு அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள். மறுமையில் அல்லாஹ்வைப் பார்ப்பதையும் மறுக்கின்றனர். 'பிஹாருல் அன்வார்' என்ற கிதாபில் இது பற்றி பின்வருமாறு உள்ளது. அபூ அப்தில்லாஹ் ஜஃபர் என்பவரிடம்'அல்லாஹ்வை மறுமையில் பார்க்க முடியுமா?' என வினவப்பட்டது. அதற்கு அவர் 'அல்லாஹ் அதிலிருந்து தூமையானவன். நிறமும் விதமும் இருந்தாலேயன்றி பார்வைகள் அவனை அடைய முடியாது. அவன்தான் நிறங்களையும்இமுறைகளையும் படைத்திருக்கும் போது அவனை எவ்வாறு பார்க்க முடியும் என்றார்.' ?
அல்லாஹ்வுக்கு பார்த்தல் என்ற பண்பு உண்டு என்று யாராவது சொன்னால் அவர்கள் முர்த்தத் ஆகிவிடுவர் என்று ஜஃபருல் கூபி என்பவர் குறிப்பிடுகிறார்.
அல்குர்ஆனும் ஹதீஸும் மறுமையில் அல்லாஹ்வைப் பார்க்க முடியும் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது உண்மை என்பதை அறிந்திருந்தும் இப்படிச் சொல்கிறார்.
(وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ (22) إِلَى رَبِّهَا نَاظِرَةٌ (23) (سورة القيامة
'
தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்
அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும் எனக் குறிப்பிடுகின்றான்
.(சூரதுல் கியாமா 22-23)
புஹாரி முஸ்லிம் ஆகிய கிரந்தங்களில் ஜரீர் பின் அப்துல்லாஹ் அல்பஜ்லி என்பவர் அறிவிக்கின்ற செய்தி பின்வருமாறு பதிவாகியுள்ளது.
'நாங்கள் நபியவர்களுடன் அமர்ந்துகொண்டிருக்கும் போது 14 ம் நாள் (பிறை) சந்திரனைப் பார்த்த நபியவர்கள் நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனை இந்த சந்திரனைப் பார்ப்பது போன்று கண்களால் காண்பீர்கள். உங்கள் பார்வைக்கு அவன் மறைய மாட்டான் என்றார்கள்.
இது பற்றி குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் நிரையவே உள்ளன. விரிவஞ்சி அவைகள் இங்கு தவிர்க்கப்படுகிறன
இன்ஷா அல்லாஹ் தொடரும்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !