பிறர் மானம் காப்போம். (03)
முகம்மது கைஸான் ( தத்பீகி )
மானம் காத்த மா நபி.
இன்னும் சொல்லப் போனால் மாஇஸ் (ரழி) அவர்கள் தன் விபச்சாரக் குற்றத்தை நபி (ஸல்) அவர்களிடம் ஒப்புக் கொண்டு அதற்குரிய தண்டனையை வழங்கக் கோரிய மூன்று சந்தர்ப்பங்கிலும் அவரின் மானத்தின் புனிதம் கருதி அவரின் இருண்ட விவகாரத்தை வெளிச்சப்படுத்தாமல் அவரை தண்டிக்காது திருப்பி அனுப்பிவைத்தார்கள் நபிகள் நாயகம்.நான்காவது தடைவ அவரே முன் வந்து அதற்குரிய தண்டனையைப் பெற்று இவ்வுலகிலேயே தன்னை பரிசுத்தப்படுத்திக் கொண்டார்.
பார்க்க : அபூ தாவுத் : 4421
நபி (ஸல்) அவர்கள் ஒரு முஃமினின் மானத்தை எனதளவு புனிதமானதாக கருதியுள்ளார்கள் என்பதற்கு இந்நிகழ்ச்சி சிறந்த எடுத்துக் காட்டாகும்.இது போன்று இன்னும் பல சம்பவங்கள் நபிகளாரின் காலத்தில் நடந்தன என்பதற்க்கு பல சான்றாதாரங்கள் காணப்படுகின்றன.
மானத்தைக் காக்கும் இறைச்சட்டம்.
இஸ்லாம் மனிதனின் மானத்திற்கும் மறியாதைக்கும் அளித்துள்ள முக்கியத்துவத்தை அறிய வேண்டுமெனில் அவதூறுக் குற்றத்திற்கு இஸ்லாம் வழங்கும் கடுமையான தண்டனையை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.
ஒருவரின் மானம் மரியாதயை சிதைக்கக்கூடிய காரியங்களில் அவதூறும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
ஓர் ஆண் மீது அவதூறு எனும் களங்கத்தைச் சுமத்தினால் அது நாளடைவில் மறைந்து விடும்.காரணம் சமூகம் அதை பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை.
ஆனால் ஒரு பெண் மீது இக்களங்கம் சுமத்தப்பட்டால் அவள் மரணித்து மண்ணோடு மண்ணாகப் போனாலும் கூட அது நிணைவு கூறப்படுவதுண்டு.
ஓர் அபலைப் பெண் மீது கற்பில்லாதவள் என்ற ஒரு பழியைப் போட்டாலே போதுமானது. அன்று முதல் அவளின் நிம்மதி அனைத்தும் அழிந்து அவளின் வாழ்க்கையே பாழாகி விடும் பிறருடைய குத்தலான பார்வைக்கு இலக்காகி தினமும் வெட்கித் தலை குனிய வேண்டிய நிலையும் ஏற்படும்.
இதை உணர்ந்த இஸ்லாம் இரும்புத்திரை போல் இருக்கமான சட்டத்தைப் போற்று பெண்களின் மானம் மரியாதை விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்துகின்றது.
கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! பின்னர் அவர்களின் சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்' (அல்குர்ஆன்) 24:4
இந்த இறைச்சட்டம் இறுக்கமான சட்டமாக இருப்பதால் இதை சற்று விரிவாகவே நாம் கான்போம். திருமணமாகாத ஆணோ பெண்னோ விபச்சாரம் செய்தால் அவர்களுக்கு நூறு கசையடி கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமிய குற்றவியல் தண்டனைசச் சட்டங்களில் ஒன்றாகும் இதை பின்வரும் இறை வசனம் உணர்த்துகிறது.
விபச்சாரம் புரிந்த பெண் விபச்சாரம் புரிந்த ஆண் இருவருக்கும் நூறு கசையடி கொடுங்கள்! மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீதும்இ இறுதிநாளின் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால்இஅல்லாஹ்வின் சட்டத்தை நிறை வேற்றுவதில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்;! இன்னும் அவ்விருவரின் வேதனையையும் (படிப்பினை பெறுவதற்காகவும் சாட்சியாகவும்) மூஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்'
(அல்குர்ஆன் 24.2)
திருமணமான ஆணோ பெண்னோ விபச்சாரம் செய்தால் அவ்விருவரையும் சாகும் வரை கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று இஸ்லாமிய தண்டனைச் சட்டம் இயம்புகிறது இதை பின்வரும் நபி மொழியில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.
நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவன் என்றும் என்னை அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறிய முஸ்லிமை மூன்று காரணங்களுக்காக அன்றி கொலை செய்வது ஆகுமானதல்ல.
1. திருமணமான பின்பும் விபச்சாரம் செய்தல்
2. ஒரு (மனித) உயிரை கொலை செய்தல்
3. இஸ்லாத்தை விட்டு விலகி முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரிவினையை உண்டாக்குதல்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்¥த்(ரலி)
நூல்கள்: புகாரி
விபச்சாரம் என்பது எவ்வளவு பெரிய வன் குற்றம் என்பதை அறிய அதற்கு இஸ்லாம் வழங்கும் கடுமையான தண்டனையைப் பார்த்தாலே போதுமானது.எனினும் ஒருவர் கற்பொழுக்கமுள்ள ஆணையோ பெண்னையோ களங்கப்படுத்தவோ கேவலப்படுத்தவோ பழிவாங்கவோ நினைத்தால் இப்பழியை அவர்கள் மீது போட்டு காரியத்தை இலகுவாக சாதித்து விடலாம். அவ்வாறு ஏதும் நடந்து விடக் கூடாது என்பதற்கு இஸ்லாம் இரும்புத்திரை போல் இறுக்கமான சட்டத்தைப் போற்று மனிதனின் மானத்தைக் காக்கும் கேடயமாக இந்த நான்கு சாட்சிகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இஸ்லாம் ஒரு மனிதனின் மானத்தை எந்தளவு புனிதமாக மதிக்கின்றதென்றால் விபச்சாரம் செய்ததாக ஒருவர் சாட்சி சொன்னாலும் இருவர் சாட்சி சொன்னாலும் மூவர் சாட்சி சொன்னாலும் சொன்னவர்களுக்குத்தான் தண்டனை வழங்க வேண்டும் நான்குபேரின் சாட்சியையே இஸ்லாமிய குற்றவியல் சட்டம் ஏற்றுக் கொள்ளும். அந்நான்கு பேரில் ஒருவரின் கண்னில் பார்வை குறைபாடு இருந்தாலும் அவர்களின் சாட்ச்சி ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்கின்ற அளவிற்கு ஒருவரின் மானத்தை இஸ்லாம் புனிதமானதாக மதிக்கின்றது. விபச்சாரக் காட்சியை கண்னாரக் கண்டாலும் கூட அதை வெளியே சொல்லக்கூடாது என மார்க்கம் கண்டிப்பான கட்டலை போட்டும்; வீன் சந்தேகங்களையும் யூகங்களையும் வைத்து அவதூருகளை அள்ளி வீசுபவர்கள் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் வளரும்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !