ஷீஆக்களின் சீர்கெட்ட கொள்கைகள் (01)
அறிஞர் அப்துல்லாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி என்பவர் ஸவுதி அரேபியாவில் ஷீஆக்களின் சிம்ம சொப்பனமாக திகழக்கூடியவர்.அவர் தனது அறிவு ஆற்றல் ஆயுற்காலம் அனைத்தையும் ஷீஆக்களுக்கெதிராகவே பயன்படுத்துகின்றார்.அந்த வகையில் ஷீஆக்களின் பொய்முகத்தை தோலுரித்துக்காட்டும் பல நூல்களைத் தொகுத்துள்ளார்.
.من عقائد الشيعة என்ற அவரது நூல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.இன்ஷா அல்லாஹ் வாரம் ஒரு முறை தொடராக எனது தளத்தில் வெளியிடப்படும்.
(முஹம்மது கைஸான் தத்பீகி )
மூல நூலாசிரியரின் முன்னுரை.
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே!. ஸலாத்தும் ஸலாமும் நபியவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தவர்கள் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
இன்று சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுள்ள ராபிழாக்களின் பிரசாரத்தின் எழுச்சியையும் அதனால் இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தையும் இந்நுாலைப் படிப்பவர்களால் நன்கு தெரிந்து கொள்ள முடியும்.
இப்பிரிவினால் ஏற்பட்டுள்ள அபாயம் அதன் கொள்கை கோட்பாடுகள் என்ன? அல்குர்ஆன் நபித்தோழர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகள் என்ன? தமது இமாம்கள் மீது அளவு கடந்து இவர்கள் வைத்துள்ள பற்று போன்றவற்றை அறியாத முஸ்லிம்கள் அநேகர் உள்ளனர். எனவே இது போன்ற வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் அமைந்துள்ள
التعليقات على متن لمعة الإعتقاد என்ற இமாம் அப்துல்லாஹ் பின் அப்துர் ரஹ்மான் அல் ஜப்ரீன் அவர்களின் நுாலின் துணையுடனும் ராபிழாக்கள் குறித்து அவர்களின் புகழ் பெற்ற நூல்கள் அவர்களின் மோசமான கொள்கைகள் பற்றிப் பேசும் முக்கிய வரலாற்று நூல்களின் துணை கொண்டும் இந்நூலை தொகுத்துள்ளேன்.
அஷ்ஷெக் இப்றாஹிம் பின் சுலைமான் அல் ஜப்ஹானி அவர்களின் 'ஷீஆவே! உன் மூலமே உன்னை நான் இழிவுபடுத்துகின்றேன்" என்ற வாக்கியத்தைப் போன்று நானும் இந்த சிறிய நூலில் ஷீஆக்களையும் அவர்களை ஏற்றுக் கொண்டவர்களையும் இதன் மூலம் இழிவுபடுத்துகின்றேன்.
இறைவா! சிந்திப்போருக்கு இதனை பிரயோசனப்படுத்து என்று பிரார்த்திக்கின்றேன். 'யாருக்கு உள்ளம் உள்ளதோ அல்லது கவனமாக செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது"(அல்குர்ஆன்:50:37) என்று அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்கிறான்.
இந்த சிறிய நூல் வெளிவருவதற்கு எனக்குத் துணை புரிந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு இந்த நல்ல செயலுக்காக அவர்களுக்குக் கூலியும் கொடுப்பானாக என அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றேன்.
அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.
அன்புடன்.
அப்துல்லாஹ் பின் முஹம்மது அஸ்ஸலபி
ராபிழாக்களின் தோற்றம்.
ஷீஆ என்ற வழிகெட்ட கொள்கைப் பிரிவின் ஒரு முக்கிய பிரிவாக ராபிழா என்ற இயக்கம் உள்ளது. அது அப்துல்லாஹ் பின் ஸபா என்ற யூதனினால் தோற்றுவிக்கப்பட்டது அவன் தன்னை ஒரு முஸ்லிமாக அடையாளப்படுத்திக் கொண்டான். நபியவர்களின் குடும்பத்தை நேசிக்கின்றேன் எனக் கூறி அலி (ரழி) அவர்களை எல்லை மீறிப் புகழ்ந்தான்.நபிக்குப் பின்னர் அவருக்குத்தான் “கிலாபத்” வரவேண்டும் என்றும் வாதிட்டான்.அத்தோடு அவரை கடவுள் தன்மைக்கு உயர்த்தி புகழ்ந்தும் பேசினான். இவ்விடயங்கள் ஷீஆக்களின் நூல்களில் பரவலாக குறிப்பிடப்பட்டுள்ளன.
“அப்துல்லாஹ் பின் ஸபா என்பவன்தான் கிலாபத்தையும் “ரஜ்இய்யா” என்ற மீள்வருதல் என்ற கொள்கையையும் முதன் முதலில் அலி (ரழி) அவர்களுடன் தொடர்புபடுத்திப் பேசினான். அத்தோடு அபூபக்கர் (ரழி) உமர்(ரழி) உஸ்மான் (ரழி) போன்றவர்கள் மீதும் ஏனைய ஸஹாபாக்கள் மீதும் அவதூறு கூறினான்” என்று அல்-கமி என்பவர் “المقالات والفرق” என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
“கிதாபுல் குஸி” என்ற நூலின் ஆசிரியரும்; “பிர்கதுஸ் ஷீஆ” என்ற நூலின் ஆசிரியருமான நுவைஹியும் இதனைக் குறிப்பிடுகிறார்.
“சபஇய்யாக்கள் என்போர் அலி (ரழி) அவர்களை நபி என்றும் கடவுள் என்றும் எல்லை மீறிப் புகழ்கின்ற அப்துல்லாஹ் பின் ஸபா என்பவனை பின்பற்றும் கூட்டம். இந்த ஸபாவின் மகன் ஹிராவைச் சேர்ந்த ஓர் அடிப்படை யூதனாவான். அவன் தன்னை முஸ்லிம் என நடித்துக்கொண்டு தனக்கு கூபாவாசிகளிடம் தலைமைத்துவம் இருப்பதாக வாதிட்டான்
அதேபோல் ஒவ்வொறு நபிக்கும் ஒரு வசியத் உண்டு. அலி (ரழி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வசியத் செய்தார்கள்.” இது தவ்ராத்தில் உள்ளதாகவும் அதை அவன் பார்த்ததாகவும் மக்களிடம் பரப்பினான்" என அறிஞர் பக்தாதி அவர்கள் கூறிப்பிடுகிறார்கள்.
அப்துல்லாஹ் பின் ஸபாவைப் பற்றி இமாம் ஷஹ்ரிஸ்தானி குறிப்பிடுகையில் “அவன் தான் முதல் முதலில் அலி (ரழி) அவர்களுக்கு இமாமத் சொந்தமானது என்ற கருத்தைச் சொன்னான்.”
சபஇய்யாக்களைப் பற்றி குறிப்பிடும் போது ஓர் இடத்தில் மறைந்துள்ள இமாம் மீள வருவார் என்ற கொள்கையை சொன்ன முதல் இயக்கம் சபஇய்யாக்கள் ஆவர். பின்னர் அதை ஷீஆக்கள் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டனர். அது பற்றி பல கருத்து வேறுபாடுகள் பல பிரிவுகள் இருப்பினும் அலி (ரழி) அவர்களுக்குத்தான் இமாமத்தும் கிலாபத்தும் உரித்தானது என்பதை உறுதியாகவும் வசிய்யத்தாகவும் ஆப்துல்லாஹ் பின் ஸபா என்பவன்தான் சொல்லிக் கொண்டிருந்தான்.அவனைத் தொடர்ந்து ஷிஆக்களுக்கு மத்தியில் நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளும் கருத்துக்களும் தோன்றின.
இவ்வாறுதான் ஷீஆக்கள் இமாமின் மீள் வருதல் வசிய்யத் என்பனவற்றையும் இமாம்களுக்குக் கடவுள் தன்மை உண்டு என்பதையும் முதன் முதலில் அறிமுகப்படுத்தினர்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !